Home
Mobile

நாசுக்காக வேலைபார்க்கும் Nothing.. 1 இல்லை 2 இல்லை மொத்தம் 3 புது Mobile ரெடி.. என்ன மாடல்?

நத்திங் (Nothing) நிறுவனம் ஒரு புதிய மொபைல் தயாரிப்பு நிறுவனமாக இருந்தாலும், ஒட்டுமொத்த உலக ஸ்மார்ட்போன் சந்தையில் உள்ள ஒட்டுமொத்த மொபைல் போன் (Nothing mobile phone) மற்றும் ஸ்மார்ட்போன் (Nothing smartphone) ரசிகர்களை அதன் முதல் ஸ்மார்ட்போனை வைத்து கவர்ந்த பெருமை நத்திங் நிறுவனத்திற்கு மட்டுமே சேரும். சமீபத்தில் வெளியான புதிய லீக் தகவலின் படி, நத்திங் நிறுவனம் அதன் தயாரிப்பு தளத்தில் புதிதாக மூன்று ஸ்மார்ட்போன் சாதனங்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த போன்களில் என்ன எதிர்பார்க்கலாம்? இது என்ன மாடலாக வெளிவரவிருக்கிறது? என்பது போன்ற விபரங்களை இப்போது பார்க்கலாம்.

சமீபத்தில் வெளியான வதந்தி தகவலின் அடிப்படையில், நத்திங் நிறுவனம் அதன் தயாரிப்பு கூடத்தில், புதிதாக மூன்று புதிய ஸ்மார்ட்போன் சாதனங்களை வடிவமைத்து உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. தெரியாதவர்களுக்கு, நத்திங் நிறுவனம் இப்போது வரை, ஒட்டுமொத்தமாக 5 ஸ்மார்ட்போன் சாதனங்களை அறிமுகம் செய்து அசத்தியுள்ளது. இதில் CMF லைன்அப் மாடல்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

நாசுக்காக வேலைபார்க்கும் Nothing.. 1 இல்ல 2 இல்ல மொத்தம் 3 Mobile ரெடி

நாசுக்காக வேலைபார்க்கும் Nothing.. 1 இல்ல 2 இல்ல மொத்தம் 3 Mobile ரெடி:

இதனை தொடர்ந்து, நத்திங் நிறுவனம் மிகவும் வேகமாக அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருவதாக டெக் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதை உறுதி செய்யும் விதமாக நத்திங் நிறுவனம் இப்போது மூன்று புதிய ஸ்மார்ட்போன் சாதனங்களில் சீக்ரெட் ஆக வேலை செய்து வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Nothing நிறுவனம் உருவாக்கும் இந்த புதிய போன்களை நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த 3 புதிய நத்திங் போன்களில் ஒரு ஸ்மார்ட்போன் மாடல் Nothing பிராண்டிற்கு சொந்தமான நத்திங் போன் 3 - Nothing Phone (3) சாதனமாக இருக்குமென்று கூறப்படுகிறது. இந்த சாதனத்தின் கீக்பென்ச் மார்க் விபரங்கள் சமீபத்தில் லீக் செய்யப்பட்டது. இதில் சிங்கிள் கோர் டெஸ்டிங்கில் 1149 மற்றும் மல்டி கோர் டெஸ்டிங்கில் 2813 மதிப்பெண்களை இந்த போன் பெற்றுள்ளது.

நத்திங் போன் 3 - Nothing Phone (3):

நத்திங் போன் 3 - Nothing Phone (3) ஸ்மார்ட்போனை நிறுவனம் Nothing A059 என்ற மாடல் எண்ணுடன் டெஸ்டிக் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த போனில் நத்திங் நிறுவனம் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 3 சிப்செட் மற்றும் 8GB ரேம் அம்சத்தை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. நத்திங் நிறுவனம் சமீபத்தில் புதிதாக நத்திங் போன் 2a பிளஸ் - Nothing Phone (2a) Plus மாடலை அறிமுகம் செய்தது.

அதனை தொடர்ந்து நத்திங் போன் 2a பிளஸ் கம்யூனிட்டி எடிஷன் - Nothing Phone (2a) Plus Community Edition ஸ்பெஷல் எடிஷன் மாடல் போனை அறிமுகம் செய்தது. இந்த புதிய நத்திங் போன் 2a பிளஸ் கம்யூனிட்டி எடிஷன் (Nothing Phone 2a Plus Community Edition) சாதனம் இருட்டில் ஜொலிக்கும் க்ளோவ் இன் தி டார்க் அம்சத்தை கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நத்திங் போன் 2a பிளஸ் கம்யூனிட்டி எடிஷன் (Nothing Phone 2a Plus Community Edition):

இந்த புதிய Nothing Phone 2a Plus Community Edition ஒரு ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் சாதனம் என்பதனால், இதை நிறுவனம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே உருவாக்கி விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த போனின் விற்பனை துவங்கி வெறும் 15 நிமிடங்களில் உலகளவில் எல்லா இடங்களிலும் இருந்து ரசிகர்கள் இந்த Nothing Phone 2a Plus Community Edition போனை வாங்கியுள்ளனர்.

வரும் 15 நிமிடத்தில் ஒட்டுமொத்த Nothing Phone 2a Plus Community Edition ஸ்டாக்கை கிளியர் செய்த பெருமையும் நத்திங் நிறுவனத்திற்கே சேரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing is working on 3 new model smartphones for 2025 launch one among them is Nothing Phone 3
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X