Home
Mobile

பட்டித்தொட்டி எங்கும் புரட்டி எடுக்கப்பட்ட பின் Nothing எடுத்த முடிவு.. பட்ஜெட் விலையில் புதிய Lite போன்!

நத்திங் (Nothing) நிறுவனம் ஆனது பட்டித்தொட்டி எங்கும் புரட்டி எடுக்கப்பட்டு வருகிறது. காரணம் - இந்தியாவில் ரூ.80,000 பட்ஜெட்டில் அறிமுகமான நத்திங் போன் 3 (Nothing Phone 3) ஸ்மார்ட்போன் தான். "ஏதோ நல்லா இருக்கேனு நத்திங் போன் 2ஏ சீரீஸ் ஸ்மார்ட்போன்களை மாத்திக்கட்டி வாங்கிட்டோம்.. அதுக்காக அடுத்த ஸ்மார்ட்போனை ரூ.80000 க்கு லான்ச் பண்ணுவியா நீ!" என்று நத்திங் நிறுவனம் பொளக்கப்பட்டு வருகிறது.

நத்திங் போன் 2ஏ சீரிஸின் (Nothing Phone 2a Series) கீழ் அறிமுகமான நத்திங் போன் 2ஏ மற்றும் நத்திங் போன் 2ஏ பிளஸ் ஆகிய 2 மாடல்களுமே இந்திய சந்தையில், விற்பனையில் சக்கைபோடு போட்டன. அதை பார்த்து இன்ப அதிர்ச்சிக்கு ஆளான நத்திங் நிறுவனம் அதன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன நத்திங் போன் 3 மாடலை அப்படியே ஓரங்கட்டிவிட்டு, நத்திங் போன் 3ஏ சீரீஸை அறிமுகம் செய்தது என்றால் பாருங்களேன்!

Nothing எடுத்த முடிவு.. பட்ஜெட் விலையில் புதிய Lite போன்!

அப்படி அறிமுகமான நத்திங் போன் 3ஏ சீரீஸ் (Nothing Phone 3a Series) கூட ஓகே தான். ஆனால் பிரீமியம் பிரிவின் கீழ் அறிமுகமான நத்திங் போன் 3 ஆனது "வேலைக்கு ஆகவில்லை" என்பதே கசப்பான உண்மை. நத்திங் நிறுவன இதை ஒரு நல்ல படமாக எடுத்துக்கொண்டது போல் தெரிகிறது. ஒரு புதிய லீக் ஆனது, நத்திங் நிறுவனம் ஆனது மிகவும் மலிவு விலையிலான "லைட்" அல்லது "டி" பிராண்டட் ஸ்மார்ட்போன்களை "ஆராய்ந்து" வருவதாக கூறுகிறது.

நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான யோகேஷ் பிராரின் (Tipster Yogesh Brar) கூற்றுப்படி, நத்திங் நிறுவனத்தின் "ப்ரோ" சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் சரிப்பட்டு வராததால், இந்நிறுவனம் பட்ஜெட்-சென்ட்ரிக் மாடல்களை பரிசீலித்து வருகிறது. என்ன மாடல்? என்னென்ன அம்சங்கள் என்பது பற்றி எந்த விவரங்களும் இல்லை. ஆனால் இது "லைட்" அல்லது "டி" மோனிகர்களாக (Nothing Lite OR T Monikers) வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பெயர் குறிப்பிடுவது போலவே - இந்த ஸ்மார்ட்போன்கள் செலவுகளை குறைத்து மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட வன்பொருளுடன் அறிமுகம் செய்யப்படலாம். அதாவது குறைவான பிரீமியம் பொருட்கள், டோன்-டவுன் கேமரா செட்டப்கள் அல்லது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 7 சீரீஸ் போன்ற மிகவும் மலிவான சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படலாம்

மிகவும் மலிவான ஸ்மார்ட்போன்களாக இருக்கும் என்பதால் நத்திங்கின் வர்த்தக முத்திரையான டிரான்ஸ்பரென்ட் டிசைனை நாம் எதிர்பார்க்க முடியாது. நத்திங் நிறுவனத்தின் இந்த லைட் மற்றும் டி சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் என்கிற யோசனை ஆனது நத்திங் தனது பிராண்டின் தனித்துவமான அடையாளத்தை மேலும் அணுகக்கூடிய விலைப்புள்ளிகளுக்கு கொண்டுவர திட்டமிடுவதை பிரதிபலிக்கின்றது.

நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் விலை: இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் என்கிற 2 ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பேஸிக் 12ஜிபி ரேம் ஆப்ஷனின் விலை ரூ.79,999 என்றும், 16ஜிபி ரேம் ஆப்ஷனின் விலை ரூ.89,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நத்திங் போன் 3 முக்கிய அம்சங்கள்:
- 6.67-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளே
- 1.5கே ரெசல்யூஷன்
- 1000 ஹெர்ட்ஸ் டச் சம்ப்ளிங்
- 2160 ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங்
- 92.89% ஸ்க்ரீன்-டூ-பாடி ரேஷியோ
- ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட்

- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50எம்பி ஓஐஎஸ் ப்ரைமரி கேமரா
- 50எம்பி ஓஐஎஸ் பெரிஸ்கோப் கேமரா
- 50எம்பி அல்ட்ரா-வைட் கேமரா
- 50எம்பி செல்பீ கேமரா
- 5500mAh சிலிக்கான் கார்பன் செல்
- 65W பாஸ்ட் வயர்டு சார்ஜிங்
- 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Focusing on Budget Smartphones Expecting New Lite or T Series Models Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X