Home
Mobile

Nothing-ன் நெத்தியடி.. வெறும் ரூ.12,000-க்கு 5G, 120Hz டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 14, 33W சார்ஜிங்.. என்ன மாடல்?

பயங்கரமான பில்ட்-அப்கள் கொடுத்து பல்பு வாங்கிய நத்திங் போன் 2-வை தொடர்ந்து வெளியான நத்திங் நிறுவனத்தின் மூன்றாவது ஸ்மார்ட்போன் ஆன நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a) மாடலானது.. நம்பினால் நம்புங்கள்.. இந்திய சந்தையில், விற்பனையில் சக்கைபோடு போடுகிறது. அதற்கு முக்கிய காரணம் - இந்த ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் தான். இந்தியாவில் நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.23,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த இடத்தில் தான் நத்திங் நிறுவனம் ஒரு முக்கியமான விஷயத்தை புரிந்துகொண்டது.

அது என்னவென்றால்.. பட்ஜெட்-விலையில் பக்காவான அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள் தான் இந்தியர்களை கவர்கிறது. இந்த புரிதலை தொடர்ந்து நத்திங் நிறுவனமானது.. நத்திங் போன் 2ஏ மாடலை போலவே.. இன்னும் சொல்லப்போனால் அதை விட ரூ.10,000-க்கும் குறைவான விலைக்கு இன்னொரு புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. அதென்ன மாடல்? அது என்ன விலைக்கு வரும்? எப்போது அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?

Nothing-ன் நெத்தியடி.. வெறும் ரூ.12,000-க்கு 5G, 120Hz டிஸ்பிளே!

என்ன மாடல்? நத்திங் நிறுவனமானது அதன் துணை நிறுவனமான சிஎம்எஃப் பிராண்டின் கீழ் சிஎம்எஃப் போன் 1 (CMF Phone 1) மாடலை அறிமுகம் செய்வதை உறுதிப்படுத்தி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ டீசரின் வழியாக சிஎம்எஃப் போன் 1 ஸ்மார்ட்போன் ஆனது தனித்துவமான வடிவமைப்பை கொண்டுருக்கும் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. இது பிளாஸ்டிக் மற்றும் ஃபாக்ஸ் லெதரால் உருவாக்கப்படலாம்.

சிஎம்எஃப் போன் 1-ல் குறைந்தபட்சம் ஒரு வேரியண்ட்டாவது ப்ரைட் ஆரஞ்சு கலரில் (Bright Orange Colour) அறிமுகமாகும். இந்த ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் வால்யூம்-நாப் போன்ற பிஸிக்கல் கண்ட்ரோல்லர் (Volume knob-like physical controller) இருப்பது போலவும் தெரிகிறது. இது ஏதாவது ஒரு செயல்பாட்டு நோக்கத்திற்கு உதவுகிறதா அல்லது வெறுமனே அழகியலுக்கானதா என்பதில் தற்போது வரை தெளிவு இல்லை.

சிஎம்எஃப் போன் 1 என்ன விலைக்கு வரும்? இது இந்நிறுவனத்தின் மிகவும் மலிவான ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் ரூ.12,000-ஐ சுற்றி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நத்திங் நிறுவனமானது பட்ஜெட் விலை பிரிவில் "நாங்கள் எங்கள் முழு கவனத்தையும் செலுத்துகிறோம்" என்று கூறியுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

சிஎம்எஃப் போன் 1 என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? சிஎம்எஃப் போன் 1 ஆனது முந்தைய நத்திங் போன்களின் முக்கிய அம்சமான க்ளிஃப் லைட்டிங்கை (Glyph Lighting) இழக்கும் என்பது போல் தெரிகிறது. அதாவது சிஎம்எஃப் சீரிஸின் முதல் ஸ்மார்ட்போன் நத்திங் போன்களை விட வேறுபட்டதாக இருக்கும். அறியாதோர்களுக்கு இதுவரை சிஎம்எஃப் நிறுவனமானது ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் இயர்பட்ஸ் (Smart Watches and Earbuds) போன்ற அக்ஸசெரீஸ்களை மட்டுமே அறிமுகம் செய்துள்ளது.

இதுதவிர்த்து பட்ஜெட்-விலை மாடலாக இருந்தாலும் கூட சிஎம்எஃப் போன் 1 ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான பெரிய 6.67-இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 சிப்செட் (Mediatek Dimensity 7200 SoC) மூலம் இயக்கப்படுகிறது, இது 5ஜி திறன் கொண்ட சிப்செட்டாகும்.

கேமராக்களை பொறுத்தவரை, முந்தைய நத்திங் ஸ்மார்ட்போன்களை போலவே சிஎம்எஃப் போன் 1 ஆனது பின்புறத்தில் 50எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப்பை (50MP Dual Rear Camera Setup) கொண்டிருக்கலாம். மேலும் இது 33W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியையும் கொண்டிருக்லாம். கடைசியாக இது லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 2.5 (Nothing OS 2.5) உடன் அனுப்பப்படலாம்.

Best Mobiles in India

English summary
Nothing Confirmed Its Next Smartphone CMF Phone 1 in Budget Price Segment With Good Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X