Home
Mobile

கொஞ்சம் விட்டா வெளிய வந்துடும் போலயே.. Nothing Phone 3 மாடலில் வித்தியாசமான Camera செட்டப்!

நத்திங் (Nothing) நிறுவனம் அடுத்த வாரம், ஜூலை 1 ஆம் தேதியன்று அதன் நத்திங் போன் 3 (Nothing Phone 3) ஸ்மார்ட்போனை இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் அறிமுகம் செய்ய உள்ளது. அறிமுகத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் (50MP periscope telephoto lens) இடம்பெறும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது முன்னதாக அறிமுகமான நத்திங் போன் 3ஏ ப்ரோ மாடலில் உள்ளதை போலவே 3எக்ஸ் ஆப்டிகல் மற்றும் 60எக்ஸ் அல்ட்ரா ஜூம் மற்றும் 10செமீ டெலிமேக்ரோ ஆதரவுடன் வரும் என்பதையும் நத்திங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Nothing Phone 3 மாடலில் வித்தியாசமான Camera செட்டப்!

ஆனால் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் கேமரா பம்ப் ஆனது நத்திங் போன் 3ஏ ப்ரோ மாடல் உடன் ஒப்பிடும்போது 74% மெலிதாக இருக்கும் என்று நத்திங் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த பெரிஸ்கோப் கேமராவானது, ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் எங்கே நிலைநிறுத்தப்படும் என்பதையும் (கேமரா டிசைனையும்) நத்திங் நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது.

இதுவொருபக்கம் இருக்க ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் வழியாக லீக் செய்யப்பட்டுள்ள நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் ரெண்டர்கள் (புகைப்படங்கள்) ஆனது நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் டிசைனை இன்னும் விரிவாக காட்டுகின்றன. லீக் ஆன ரெண்டர்களின் வழியாக நத்திங் போன் 3 ஆனது பிளாக் மற்றும் ஒயிட் கலர்களில் வரும் என்பதை பரிந்துரைக்கின்றன.

மேலும் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில் ஹோல் பஞ்ச் டிஸ்பிளே வடிவமைப்பையும் காட்டுகிறது மற்றும் பேக் பேனலில் ஒரு கிளிஃப்-மேட்ரிக்ஸ் இன்டர்பேஸையும் வெளிப்படுத்துகிறது. மேலும் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது ஒரு தனித்துவமான கேமரா செட்டப்பை கொண்டிருக்கும் என்பதையும் பரிந்துரைக்கின்றன.

ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் உள்ள டாப் கேமராவானது (Top Camera) இடது பக்கத்தில் தனியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அதாவது இது மற்ற இரண்டு சென்சார்களுடன் சீரமைக்கப்படவில்லை. மாறாக மீதமுள்ள 2 சென்சார்களும் ஒன்றோடொன்று, டாப் கேமராவின் கீழ், விளிம்பிற்கு அருகில் அமைந்துள்ளன.

Nothing Phone 3 மாடலில் வித்தியாசமான Camera செட்டப்!

இந்த லீக்டு ரெண்டர்கள், நத்திங் பகிர்ந்து கொண்ட சமீபத்திய கேமா டிசைன் டீஸர் உடன் ஒத்துப்போகிறது என்பதால், இதுவே பைனல் டிசைன் ஆக இருக்க அதிக வாய்ப்புள்ளது. இதுதவிர்த்து நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் டிசைன் லேங்குவேஜ் ஆனது "கிட்டத்தட்ட" நத்திங் போன் 3ஏ மற்றும் போன் 3ஏ ப்ரோ மாடல்களை போலவே உள்ளது

முன்னதாக ஒரு தரப்படுத்தல் தளம் (Benchmarking Site) வழியாக நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் பல முக்கிய அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டு இருந்தது. கிடைக்கப்பட்ட கீக்பெஞ்ச் லிஸ்டிங்கின் (Geekbench Listing) படி, நத்திங் போன் 3 ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் (Snapdragon 8s Gen 4 SoC) உடன் அறிமுகம் செய்யப்படும். இந்த சிப்செட் 16ஜிபி ரேம் உடன் இணைக்கப்படும்.

இது உண்மையாகும் பட்சத்தில் நத்திங் நிறுவனம் ஆனது முதல் முறையாக 16ஜிபி வரை ரேம் கொண்ட பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. மேலும் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்டு இயங்கும் என்றும் கீக்பெஞ்ச் லிஸ்டிங் குறிப்பிடுகிறது.

நத்திங் போன் 3 இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? முன்னதாக நத்திங் நிறுவனத்தின் சிஇஓ-வான கார்ல் பெய் இதன் விலை சுமார் GBP 800 (தோராயமாக ரூ.90,000) இருக்கும் என்று கூறி இருந்தார். பின்னர் இது குவால்காமின் ஹை-எண்ட் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் உடன் வராது மாறாக ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் (Qualcomm Snapdragon 8s Gen 4 chipset) உடன் வரும் என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் இந்தியாவில் இது ரூ.90,000 க்கு வராது என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. மாறாக இது சுமார் $799 (ரூ.68,000) க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Nothing confirmed 50MP periscope telephoto lens in Nothing Phone 3 Ahead Launch on July 1
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X