அந்த பயம் இருக்கணும்! Nothing-ன் CMF Phone 2 Pro உடன் இது இலவசமா வரும்.. ஏப்.28 அறிமுகத்திற்கு முன் அறிவிப்பு!
நத்திங் (Nothing) நிறுவனத்தின் துணை நிறுவனமான சிஎம்எப் (CMF) வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதியன்று சிஎம்எப் போன் 2 ப்ரோ (CMF Phone 2 Pro) ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. தொடர்ச்சியான டீசர்கள் வழியாக சிஎம்எப் போன் 2 ப்ரோவின் முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தி வருகிறது
அதனொரு பகுதியாக சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் இலவசமாக வரும் ஒரு பொருள் குறித்த விவரம் வெளிப்படுத்தப்பட்டு உள்ளது. அதென்ன பொருள்? சிஎம்எப் போன் 2 ப்ரோ என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

ரீடெயில் பாக்ஸில் சார்ஜர்களை இலவசமாக அனுப்பாமல், அதை தனியாக பணம் செலுத்தி வாங்குங்கள் என்று கூறுவதற்கு பெயர் பெற்ற ஸ்மார்ட்போன் பிராண்டு ஆன 'சிஎம்எப் பை நத்திங்' நிறுவனம் ஆனது, ஏப்ரல் 28 ஆம் தேதி அறிமுகமாகும் சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸில் சார்ஜர் பிரிக் இடம்பெறும் என்பதை உறுதி செய்துள்ளது.
இந்த சலுகை இந்தியாவிற்கு மட்டுமே பிரத்யேகமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நத்திங் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆன அகிஸ் எவாஞ்சலிடிஸ், எக்ஸ் தளம் வழியாக சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸ் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். அதன் வழியாக சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது சார்ஜருடன் அனுப்பப்படும் என்பதை உறுதிப்படுத்தியும் உள்ளார்
அவர் பகிர்ந்துள்ள ரீடெயில் பாக்ஸ் புகைப்படம் ஆனது இரண்டு முனை சார்ஜருக்கான ஸ்லாட்டை வெளிப்படுத்துகிறது. இது சார்ஜர் பிரிக்களை தனியாக பணம் செலுத்தி வாங்கும் சிஎம்எப் ரசிகர்களுக்கு உண்மையிலேயே ஒரு குட் நியூஸ் ஆகும். நினைவூட்டும் , வண்ணம் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனிலும் இதேபோன்ற போக்கு பின்பற்றப்பட்டது. ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன் ஆனது அமெரிக்காவில் ஒரு சார்ஜர் உடன் வந்தது. ஆனால் யுகே, ஐரோப்பாவில் சார்ஜர் இடம்பெறவில்லை,
இதற்கு முன்பாக எக்ஸ் தளம் வழியாக ஒரு சுருக்கமான வீடியோவாக பகிரப்பட்ட டீஸரில், சிஎம்எப் போன் 2 ப்ரோ ஆனது பிளாஸ்டிக் எட்ஜ்கள் (Plastic Edges) மற்றும் ரீடிசைன் செய்யப்பட்ட பேக் பேனல் (Redesigned rear pane) மற்றும் ஒரு ஸ்க்ரு (Screw) ஆகியவற்றை காட்டுகிறது. டீஸர் வீடியோ வழியாக மேட் பினிஷ உடன் கூடிய பளபளப்பான பேக் பேனலை வெளிப்படையாகவே பார்க்க முடிகிறது.
ஆனாலும் பேக் பேனல் எந்த பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது என்கிற விவரங்கள் வெளிப்படுத்தவில்லை. பெரும்பாலும் இது பிளாஸ்டிக் அல்லது அலுமினியத்தால் (Aluminium) செய்யப்படலாம். தற்போதைய ஜெனரேஷன் மாடலில் (அதாவது சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போனில்) பாலிகார்பனேட் பேக் பேனல் (Polycarbonate rear panel) உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
மேலும் அதே டீஸர் வழியாக சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் கீழ் இடது பக்கத்தில் சிஎம்எப் பை நத்திங் (CMF by Nothing) லோகோவையும் காண முடிகிறது. இது வெவ்வேறு கோணங்களில் வைத்திருக்கும் போது ஒளி வீசும் லோகோவாக அல்லது இருண்ட லோகோவாக தோன்றுகிறது.
சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? முன்னதாக வெளியான டீசர் வழியாக சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது சிஎம்எப் நிறுவனத்தின் சிக்னேச்சர் ஆரஞ்சு கலர் பேக் பேனலையும் (Orange Color Back Panel), சிங்கிள் ரியர் கேமரா செட்டப்பையும் (Single Rear Camera Setup) பெற்று இருப்பதை காண முடிந்தது.
அதாவது இது சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போனில் நாம் பார்த்த டூயல் ரியர் கேமரா செட்டப்பில் (Dual Rear Camera Setup) இருந்து விலகி சிஎம்எப் போன் 2 ஸ்மார்ட்போன் ஆனது சிங்கிள் ரியர் கேமரா செட்டப்பிற்குள் (Single Rear Camera Setup) நுழைகிறது. மேலும் கேமரா சென்சார் ஆனது ரியர் பேனலில் செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ளது; கேமராவிற்கான ஃபிளாஷ் சென்சாருக்கு கீழே வைக்கப்பட்டு உள்ளது. விலையை பொறுத்தவரை ரூ21,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்!


Click it and Unblock the Notifications








