Home
Mobile

அவசரப்பட்டீயே குமாரு.. சொல்லாம இருந்து இருக்கலாம்.. Nothing Phone 3 விலையை அறிவித்த Carl Pei.. எவ்வளவு?

நத்திங் போன் 3 (Nothing Phone 3) ஸ்மார்ட்போன் எப்போது வேண்டுமானாலும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நத்திங் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன கார்ல் பெய் (Nothing CEO Carl Pei) நத்திங் போன் 3 ஸ்மாட்போனின் விலை விவரங்களை வெளியிட்டு உள்ளார்.

ஒருவேளை நத்திங் போன் 3 மாடலுக்காக நீங்கள் காத்திருந்தால், அது மலிவு விலையில் வாங்க கிடைக்காது என்பதை இப்போதே கூறிவிடுகிறோம். ஏனென்றால் கார்ல் பெய் வழியாக கிடைத்த தகவலின்படி, நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது பழைய நத்திங் போன் 2 (Nothing Phone 2) உடன் ஒப்பிடும் போது மிகப்பெரிய விலை உயர்வை பெற உள்ளது.

Nothing Phone 3 விலையை அறிவித்த Carl Pei.. எவ்வளவு?

ஆண்ட்ராய்டு என்கிற யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோவில், நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது "சுமார் 800 யூரோ" என்கிற விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்று கார்ல் பெய் உறுதிப்படுத்தி உள்ளார். அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.90,500 ஆகும். ​​இந்தியாவில் இந்த விலையின் கீழ் நத்திங் போன் 3 மாடல் அறிமுகமாகும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை, அதற்கு பல காரணங்கள் உள்ளன.

முதலாவதாக, ஐரோப்பிய சந்தைகளின் விலைகள் எப்படியும் சற்று அதிகமாக இருப்பதால், இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.44,999 என்கிற ஆரம்ப விலையில் அறிவிக்கப்பட்டது. எனவே, நத்திங் நிறுவனம் இந்தியாவில் நத்திங் போன் 3 விலையை இரட்டிப்பாக அதிகரிக்க முடியாது; இது மிகப்பெரிய விலை உயர்வாக இருக்கும்; விற்பனையில் கடும் வீழ்ச்சியை எதிரொலிக்கும்.

நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இம்மாதம் தொடக்கம் வரையிலாக நத்திங் நிறுவனத்தின் பிளாக்ஷிப் போன் ஆன நத்திங் போன் 3 அறிமுகம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாமலேயே இருந்தது. பின்னர் நத்திங் பிராண்டின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது 100% அமெரிக்க சந்தையில் அறிமுகமாகும் என்று கூறி, நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை உறுதிப்படுத்தினார்.

எக்ஸ் பயனர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த நத்திங்கின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன பதிலளித்த கார்ல் பெய், நத்திங் போன் 3 அமெரிக்க சந்தையில் வாங்க கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நத்திங் போன் 3 குறித்து வேறு எந்த தகவலையும் அவர் வெளியிடவில்லை. இருப்பினும் இது நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் வெளியீடு மிகவும் விரைவில் நடக்கும் என்பதை இது குறிக்கிறது.

முன்னதான வெளியான ஒரு லீக்ஸ் தகவல் ஆனது நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது ஜூலை 2025 இல் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்து இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் அல்லது வடிவமைப்பு குறித்து அதிக விவரங்கள் இல்லை என்றாலும் கூட இது கிளிப் எல்இடி இன்டர்பேஸ் உடன், நத்திங் நிறுவனத்தின் சிக்னேன்ச்சர் ஆன ட்ரான்ஸ்பரென்ட் பாடியை தக்க வைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும் நத்திங் போன் 3ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் உள்ளதை போலவே, நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் பிரத்யேக எசென்ஷியல் கீ பட்டன், ஹை ரெஃப்ரெஷ் ரேட் உடனான அமோலெட் டிஸ்பிளே மற்றும் அதே ப்ரைமரி கேமரா மற்றும் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ்களை கொண்ட டெலிஃபோட்டோ ஷூட்டரை கொண்டுவர வாய்ப்புள்ளது.

நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டூயல் சிம் (நானோ) ஆதரவுடன் வரும் நத்திங் போன் 2 ஆனது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 2.0 கொண்டு இயங்குகிறது. இது 120ஹெர்ட்ஸ் வரையிலான அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் ஃபுல்-எச்டி எல்டிபிஓ ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

குவால்காம் 4என்எம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட்டை பேக் செய்கிறது. கேமராக்களை பொறுத்தவரை, இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 1/1.56-இன்ச் சோனி IMX890 சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (EIS) உடனான 50 மெகாபிக்சல் மெயின் + 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா உள்ளது.

முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் கேமரா மற்றும் பேக் பேனலில் எல்இடி லைட்ஸ் உடனான கிளிஃப் இன்டர்ஃபேஸ் உடன் வரும் நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் ஆனது 45W வயர்டு சார்ஜிங் மற்றும் 5W கியூஐ வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4700எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing CEO Carl Pei Reveals Shocking Price Hike on Nothing Phone 3
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X