Home
Mobile

அட்றா சக்கை.. முழுசா வேற மாறி வந்து நிக்குது.. Nothing Phone 2-க்கு வெயிட் பண்ணது வீணா போகல!

இந்த 2023-இல் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களில் (Most Anticipated Phones of 2023) ஒன்றாக நத்திங் போன் 2 (Nothing Phone 2) உருவாகி இருப்பது, சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம், இன்னும் சிலருக்கு நம்பமுடியாத விஷயமாக இருக்கலாம். ஆனால் உண்மை அதுதான்!

ஏனென்றால், முற்றிலும் வித்தியாசமான (குறிப்பாக வடிவமைப்பு வாரியாக) ஸ்மார்ட்போனை தேடும் இந்தியர்களுக்கு நத்திங் போன் 1 ஒரு சிறந்த தேர்வாக அமைந்தது. ஆரம்பத்தில் பல வகையான விமர்சங்களை பெற்று இருந்தாலும் கூட, நத்திங் நிறுவனமானது அது எல்லாவற்றையும் சரிசெய்தது என்றே கூறலாம்.

Nothing Phone 2-க்கு வெயிட் பண்ணது வீணா போகல!

இப்படியாகத்தான் நத்திங் போன் 2 ஆனது மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு ஸ்மார்ட்போனாக உருமாறியுள்ளது. இதற்கிடையில் நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் சரியாக எப்போது அறிமுகமாகும்? அதன் பேட்டரி கேப்பாசிட்டி எப்படி இருக்கும்? அதில் என்ன சிப்செட் பயன்படுத்துதப்படும்? போன்ற விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நத்திங் போன் 2 எப்போது அறிமுகமாகும்? முன்னதாக இது கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று மட்டுமே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் ஆனது வருகிற ஜூலை (July) மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

என்ன சிப்செட்டை பயன்படுத்தும்? இது ஜூலை மாதம் அறிமுகமாகும் என்கிற தகவல், நத்திங் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான கார்ல் பெய்யிடம் இருந்து நேரடியாக வந்துள்ளது. முன்னதாக இவர் நத்திங் போன் 2 ஆனது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்பதையும் உறுதி செய்திருந்தார்.

நத்திங் போன் 2-வில் ஏன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் பயன்படுத்தப்படவில்லை? என்று கேட்டபோது, "ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 ஆனது நிரூபிக்கப்பட்ட ஒரு சிப்செட் ஆகும், ஒரு வருடத்திற்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இது முழுமையாகவும், தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டதாகவும் இருக்கிறது" என்று கார்ல் பெய் விளக்கமளித்துளார்.

நத்திங் போன் 2-வின் பேட்டரித்திறன் எப்படி இருக்கும்? கார்ல் பெய் கூற்றுப்படி, நத்திங் போன் 1-ல் உள்ள 4,500mAh பேட்டரியை விட நத்திங் போன் 2-வின் பேட்டரி பெரியதாக இருக்கும். அதாவது இது 4700mAh பேட்டரியுடன் வருமென்று கார்ல் பெய் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அளவிலான பேட்டரியானது ஐபோன் 14 ப்ரோ (3,200mAh) மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸில் (4,323mAh) இருப்பதை விடவும் பெரியது. அதேபோல ஆண்ட்ராய்டு உலகிலும் கூட இது ஒரு நல்ல பேட்டரி அளவு தான், அறியாதோர்களுக்கு, பிளாக்ஷிப் போன்களில் நல்ல ஃபாஸ்ட் சார்ஜிங்கை சேர்க்க 4,500mAh பேட்டரி போதுமானதாக இருக்கும்.

நத்திங் போன் 2 டிசைனில் என்னென்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம்? நத்திங் போன் 2-வின் வடிவமைப்பை பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இப்போதைக்கு நத்திங் போன் 2 ஆனது நத்திங் போன் 1-இன் அதே வடிவமைப்பில் வராது என்பது மட்டும் உறுதி. ஏனென்றால் ஃபர்ஸ்ட்-ஜென் நத்திங் ஸ்மார்ட்போனின் ​​அதே வடிவமைப்பு நத்திங் போன் 2-வில் பயன்படுத்த விரும்பவில்லை என்று நத்திங் நிறுவனமே கூறியுள்ளது

நத்திங் போன் 2-ல் கிளிஃப் மாட்யூல் (Glyph module) என்று அழைக்கப்படும் "பேக் பேனல் லைட் செட்டப்" ஆனது தக்கவைக்கப்படுமா? இல்லையா? என்பதும் கேள்விக்குறிதான். நத்திங் நிறுவனத்தின் கீழ் கடைசியாக அறிமுகமான நத்திங் இயர் 2 இயர்பட்ஸ் ஆனது இயர் 1-ஐ போலவே தோற்றமளிக்கின்றன, ஆனால் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களை பெற்றுள்ளது. அதையே நாம் நத்திங் போன் 2-விலும் எதிர்பார்க்கலாம்.

Photo Courtesy: YankoDesign

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing CEO Carl Pei Confirmed That Nothing Phone 2 Will Get Bigger Battery and Launch on July 2023
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X