Nothing CEO-வின் சென்னை பிளான்.. 500 பேர் ஆல்ரெடி இறக்கியாச்சு.. Phone 3a சீரீஸ்-க்காக பக்கா ஸ்கெட்ச்!
கார்ல் பெய் (Carl Pei) தலைமையிலான நத்திங் (Nothing) நிறுவனம் வருகிற மார்ச் 4 ஆம் தேதி அன்று அதன் நத்திங் போன் 3ஏ சீரீஸ் (Nothing Phone 3a Series) ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. இதன்கீழ் நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a) மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோ (Nothing Phone 3a Pro) என மொத்தம் 2 மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் இந்த சீரீஸ் தொடர்பான 2 முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஒன்று தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை சம்பந்தப்பட்டது. இன்னொன்று நத்திங் போன் 3ஏ சீரிஸின் சிப்செட் சம்பந்தப்பட்டது. அதென்ன தகவல்கள்? நத்திங் போன் 3ஏ சீரிஸ் என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

நத்திங் போன் 3ஏ சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது சென்னையில் உள்ள அதன் உற்பத்தி ஆலையில் அசெம்பிள் செய்யப்படும் என்று நத்திங் நிறுவனம் கூறியுள்ளது. இந்த ஆலையில் 500 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளதாகவும், அவர்களில் 95 சதவிகிதம் பேர் பெண்களாக உள்ளதாகவும் நத்திங் நிறுவனம் தெரிவித்துள்ளது. அசெம்பிள் செய்யப்பட்ட யூனிட்கள் இந்தியாவில் பிரத்தியேகமாக விற்கப்படுமா அல்லது மற்ற சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுமா என்பது குறித்து எந்த தெளிவான தகவல்களும் இல்லை.
சிப்செட்டை பொறுத்தவரை , நத்திங் போன் 3ஏ சீரீஸில் ஸ்னாப்டிராகன் சிப்செட் பொருத்தப்பட்டிருக்கும் என்பதை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன கார்ல் பெய் வெளிப்படுத்தி உள்ளார். ஒப்பிடுகையில் நத்திங் போன் 2ஏ சீரீஸ் ஆனது மீடியாடெக் டைமென்சிட்டி சிப்களால் இயக்கப்படுகிறது.
ஆகவே வரவிருக்கும் புதிய நத்திங் போன் 3ஏ சீரீஸில் குறிப்பிடத்தக்க சிபியு மற்றும் நியூரல் ப்ராசசிங் யூனிட் (NPU) மேம்படுத்தல்கள் கிடைக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். நியூரல் ப்ராசசிங் யூனிட் ஆனது நத்திங் போன் 3ஏ சீரீஸில் ஏஐ செயலாக்கத்தை மேம்படுத்த உதவும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது
இதுகுறித்த அறிவிப்பில் வரவிருக்கும் நத்திங் போன் 3ஏ சீரிஸ்-க்காக மீடியாடெக் இலிருந்து விலகுவதற்கான முடிவை கார்ல் பெய் அறிவித்தார். நத்திங் போன் 3ஏ உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் சீரீஸ்-க்கு திரும்பப் போகிறோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் அவர் கூறி உள்ளார். இருப்பினும் இந்த போன்களுக்கு பயன்படுத்தக்கூடிய மொபைல் பிளாட்பாரம் பற்றிய எந்த விவரங்களையும் சிஇஓ வெளியிடவில்லை.
இருப்பினும் முன்னதாக வெளியான ஒரு லீக், நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 (Snapdragon 7s Gen 3) சிப்செட்டுடன் வரலாம் என்று கூறுகிறது. மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.8 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை பேக் செய்யலாம். மேலும் இது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட நத்திங் ஓஎஸ் 3.1 (Nothing OS 3.1) உடன் வருமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது
கேமராக்களை பொறுத்தவரை, நத்திங் போன் 3ஏ ஆனது கிடைமட்டமாக அமைக்கப்பட்ட நத்திங் நிறுவனத்தின் முதல் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யும் ஸ்மார்ட்போனாக இருக்கலாம். அதில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் மற்றும் 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா இடம்பெறலாம்.
இது உண்மையாகும் பட்சத்தில், நத்திங் நிறுவனம் அதன் ஸ்மார்ட்போனில் முதல் முறையாக டெலிஃபோட்டோ லென்ஸை சேர்க்கிறது என்று அர்த்தம். செல்பீ கேமராவை பொறுத்தவரை இதில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறலாம். இது டிஸ்பிளேவின் ஹோல்-பஞ்ச் கட்அவுட்டில் வைக்கப்படும் பேட்டரியை பொறுத்தவரை, இதை 45W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAhபேட்டரி பேக் செய்யப்படலாம்.
நத்திங் போன் 3ஏ சீரீஸின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போனின் விலை ரூ.23,999 முதல் ரூ.25,999 வரைக்குள் இருக்கும் என்றும், அதே சமயம் அதன் ஹைஎண்ட் வேரியண்ட் ஆன நத்திங் போன் 3ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.27,999 முதல் ரூ.29,999 வரைக்குள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








