Subscribe to Gizbot

கேஷ்பேக், ஆண்டு சந்தா, காப்பீடு என ஒன்ப்ளஸ் 5டி-க்கு குவியும் சலுகைகள்.!

Written By:

ஒரு தொழில்நுட்பமானது எந்தவொரு அளவிலான உச்சத்தை எட்ட முடியும் என்பதை மறுபடியும் மறுபரிசீலனை செய்யும்உ நிகழ்வு உலகில் எப்போதாவது நடப்பதுண்டு.

கேஷ்பேக், ஆண்டு சந்தா, காப்பீடு: ஒன்ப்ளஸ் 5டி-க்கு குவியும் சலுகைகள்.!

அப்படியான தொழில்நுட்பமானது சந்தையின் கற்பனையை கைப்பற்றும் வழிகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு தயாரிப்பாக இருக்கும். அதே சமயம் நுகர்வோரின் ஆர்வத்தை மட்டுமின்றி. இதர போட்டி நிறுவனங்களே பார்த்து பொறாமை கொள்ளும் வண்ணமும் இருக்கும். அப்படியான ஒரு கருவிதான் - ஒன்ப்ளஸ் 5டி.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வெகுஜனங்களுக்கு மட்டுமல்ல, பிராண்ட்களுக்கும் சேர்த்தே.!

வெகுஜனங்களுக்கு மட்டுமல்ல, பிராண்ட்களுக்கும் சேர்த்தே.!

வழக்கமாக நுகர்வோர்களுக்கு தான் ஒரு குறிப்பிட்ட ஸ்மாட்போனை மிக பிடிக்கும். ஆனால் ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போன் ஆனது வெளியீட்டிற்கு முன்பே, முன்னணி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பிராண்டுகளை வரிசையில் காத்திருக்க வைத்தது. முந்தைய ஒன்ப்ளஸ் 5டி கருவியை போலவே 5டி ஸ்மார்ட்போனும் இந்திய சந்தை பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. பல பிரிவுகளின் கேள் உள்ள பிராண்டுகள், அதன் சமூக நெட்வொர்க்குகள் மற்றும் பிற ஊடக தடங்களில் பதிவுகள் மற்றும் பதாகைகள் இடுவதன் மூலம் ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனை மென்மேலும் பிரபலமாக்கியது.

நகரத்தில் கிடைக்கும் உணவிற்கான அற்புதமான வாய்ப்புகள்.!

நகரத்தில் கிடைக்கும் உணவிற்கான அற்புதமான வாய்ப்புகள்.!

ஒருவேளை நீங்கள் ஒரு உணவு விரும்பியாக இருப்பின், புதிய 5டி ஸ்மார்ட்போனை இன்னும் காதலிக்க போகிறீர்கள் என்று அர்த்தம். ஏனெனில் ஸொமோட்டோ ( Zomato) நிறுவனம் ஆனது ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனை வாங்கும் நபர்களுக்கு 1 ஆண்டு கால ஸொமோட்டோ கோல்ட் சர்வீஸ் சந்தாவை இலவசமாக வழங்கும் என்று அறிவித்துள்ளது.

முன்னணி ஆன்லைன் பிராண்டுகளின் சோஷியல் மீடியா பதிவுகள்.!

முன்னணி ஆன்லைன் பிராண்டுகளின் சோஷியல் மீடியா பதிவுகள்.!

ஒன்ப்ளஸ் 5டி அறிமுகத்தையொட்டி ஸொமோட்டோ மட்டுமின்றி ஜபாங், சாவன், ஸூம்கார், போன்ற பிரபலமான இ-காமர்ஸ் பிராண்டுகள் அவர்களது ஃபேஸ்புக் மற்றும் பிற சமூக தளங்களில் அற்புதமான இக்கருவியின் வெளியீடு சார்ந்த பேனர்களை உருவாக்கி துவக்க நிகழ்வு பற்றிய விவரங்களை நுகர்வோருக்கு தெரிவித்தன.

ஹெல்த்கார்ட் மற்றும் பிவிஆர் இந்தியாவும் இந்த பட்டியலில் இணைந்தன

ஹெல்த்கார்ட் மற்றும் பிவிஆர் இந்தியாவும் இந்த பட்டியலில் இணைந்தன

ஹெல்த்கார்ட், அதன் சமூக இடுகையில் ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனின் முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா பற்றி அதன் நுகர்வோர்களுக்கு தகவல் அளித்தது. பிவிஆர் இந்தியா நிறுவனம் மூலம், இந்திய வாடிக்கையாளர்கள் ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனை வெளியீட்டை நேரடியாக காண முடிந்தது. மேலும் அந்த துவக்க விழாவில் பங்கேற்றவர்கள், சாதனத்தை சோதிக்கும் ஒரு பிரத்யேக வாய்ப்பையும் பெற்றார்கள்.

12 மாதங்களுக்கான விபத்து இழப்பு காப்பீடு வழங்கும் சர்விஃபை.!

12 மாதங்களுக்கான விபத்து இழப்பு காப்பீடு வழங்கும் சர்விஃபை.!

விளம்பரம் செய்வதை விட ஒருபடி மேல் சென்ற சர்விஃபை, ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனின் பாதுகாப்பாயோ உறுதி செய்துள்ளது. கோடக் 811 சேமிப்புக் கணக்கை பதிவிறக்கம் செய்து, அறிமுகக் காலத்தில் ரூ.1000/- என்ற ஆரம்ப வைப்பு நிதி செலுத்தும்ன் அனைத்து ஒன்ப்ளஸ் 5டி பயனர்களுக்கு 12 மாத கால விபத்து இழப்பு காப்பீடு கிடைக்கும்.

பெரும் தரவு நன்மைகள்

பெரும் தரவு நன்மைகள்

இந்தியாவின் முன்னனி டெலிகாம் நிறுவனங்களுடன் கூட்டணி வைத்துள்ள ஒன்ப்ளஸ், அதன் 5டி பயனர்களுக்கு 1008ஜிபி வரையிலான டேட்டாவை வழங்கும் திட்டங்களை தன்னுள் கொண்டுள்ளது.இதன் மூலம் ஒன்ப்ளஸ் 5டி பயனர்களால் எந்த நேரத்திலும் வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்யவும், பாடல்களை பதிவிறக்கம் செய்யவும், கருவியில் உள்ள அனைத்து பயன்பாடுகளை அணுகவும் முடியும்.

முன்னணி வங்கிகளின் தள்ளுபடி

முன்னணி வங்கிகளின் தள்ளுபடி

ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனை மேலும் அணுகக்கூடிய வண்ணம் மற்றும் மலிவு செய்யக்கூடிய முயற்சியில் பல வங்கிகளுடன் நிறுவனம் இணைந்துள்ளது. குறிப்பாக எச்டிஎப்சி வங்கியின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருக்கும் நுகர்வோர்கள் அமேசான்.இன், ஒன்ப்ளஸ்ஸ்டோர்.இன் மற்றும் ஒன்ப்ளஸ் எஸ்கேபிரியன்ஸ் ஸ்டோர் ஆகியவைகளில் டிசம்பர் 2, 2012 வரை ரூ.1,500/- என்ற உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

அம்சங்களை பொறுத்தமட்டில்..

அம்சங்களை பொறுத்தமட்டில்..

இரட்டை சிம் (நானோ) ஆதரவு கொண்ட ஒன்ப்ளஸ் 5டி ஆனது ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட ஆக்சிஜென் 4.7 கொண்டு இயங்கும். ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போனில் காணப்படாத பேஸ் அன்லாக் அம்சம் இக்கருவியை சேர்க்கப்பட்டுள்ளது. இது மேம்பட்ட முக அங்கீகார நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் ஸ்மார்ட்போனை 0.4 வினாடிகளில் "பாதுகாப்பாக திறகும்" அடையாள புள்ளிகளைக் கொண்டுள்ளது.

பின்பக்கம் உட்பொதிக்கப்பட்டுள்ள கைரேகை சென்சரை நீண்ட நேரம் அழுத்துவதன் மோளம் பயனர்கள் செல்பீக்களை எடுத்துக்கொள்ளலாம், மேலும் நோட்டிபிகேஷன் ஷேட்களை கொண்டு வர கைரேகை சென்சாரை ஸ்வைப் செய்யலாம். ஒன்ப்ளஸ் 5டி ஆனது, 18: 9 விகித அளவிலான, 401பிபிஐ பிக்சல் அடர்த்தி மற்றும் 2.5டி கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொண்ட 6.01 அங்குல முழு எச்டி ப்ளஸ் (1080x1920 பிக்சல்கள்) அமோஎல்இடி டிஸ்பிளே கொண்டுள்ளது.

மேலும் இந்த டிஸ்பிளே எஸ்ஆர்ஜிபி (sRGB) மற்றும் டிசிஐI-பி3 கலர் கமட்ஸ் ஆகியவ் அம்சங்களையும் ஆதரிக்கிறது. ஒன்ப்ளஸ் 5 போன்றே, ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனும் ஒரு ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. 2.45ஜிகாஹெர்ட்ஸ் உடனான 6ஜிபி அல்லது 8ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இரட்டை பின்புற கேமரா அமைப்பு

இரட்டை பின்புற கேமரா அமைப்பு

கேமராத்துறையை பொறுத்தமட்டில், இந்த ஸ்மார்ட்போனில் ஒன்ப்ளஸ் அதன் இரட்டை பின்புற கேமரா அமைப்பை மேம்படுத்தியுள்ளது. முதன்மை சென்சார் கேமராவது ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போனில் காணப்பட்ட அதே சோனி ஐஎம்எக்ஸ்398 சென்சார், 1.12 மைக்ரான் பிக்சல்கள் மற்று எப் / 1.7 துளை கொண்ட ஒரு 16 மெகாபிக்சல் கேமராவாக இருப்பினும் கூட, இது 27.22 மிமீ ஒரு மேம்படுத்தப்பட்ட குவிய நீளம் கொண்டதாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

பின்பக்கத்தின் இரண்டாம் நிலை கேமராவை பொறுத்தமட்டில், சோனி ஐஎம்எக்ஸ்376கே சென்சார் மற்றும் ஒரு டெலிஃபோட்டோ லென்ஸுடன் கூடிய ஒரு 20 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இது 1 மைக்ரான் பிக்சல் அளவைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது, இருப்பினும், எப் / 1.7 துளை மற்றும் குவிய நீளம் 27.22 மிமீ வரை குறிப்பிட்ட மேம்பாடுகளை பெற்றுள்ளது. இரட்டை-எல்இடி ஃப்ளாஷ் கொண்டிருக்கும் இதன் பின்புற கேமரா அமைப்பு 10கே வீடியோவில் நொடிக்கு 60 ப்ரேம்கள் என்ற வேகத்தில் வீடியோக்களை பதிவு செய்யலாம்.

ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தை பொறுத்தமட்டில், ஒன்ப்ளஸ் 5 உடன் அனைத்து அம்சங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கிறது, 16-மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 371 சென்சார், 1-மைக்ரான் பிக்சல்கள் மற்றும் எப் / 2.0 இன் ஒரு துளை ஆகியவைகளை கொண்டுள்ளது. மேலும் இது நொடிக்கு 30 ப்ரேம்கள் என்ற வேகத்தில் 1080பி வீடியோக்களை பதிவு செய்யலாம்.

இணைப்பு ஆதரவு

இணைப்பு ஆதரவு

செல்பீ கேமராவை போலவே உள்ளமைக்கப்பட்ட சேமிப்பு கட்டமைப்புகளில் ஒன்ப்ளஸ் 5 உடன் 5டி ஒற்றுப்போகிறது. இது 64 ஜிபி அல்லது 128ஜிபி சேமிப்புடன் வருகிறது. இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில், 4ஜி வோல்ட், டூயல்-பேண்ட் (2.4ஜிகாஹெர்ட்ஸ், 5ஜிகாஹெர்ட்ஸ்) வைஃபை 802.11ஏசி உடன் மிமோ (MIMO 2x2), ப்ளூடூத் வி5.0, 3.5மிமீ ஆடியோ ஜாக், மற்றும் ஒரு யூஎஸ்பி டைப்சி- (வி2.0) போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது.

ஒரு நீக்கமுடியாத 3300எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படும் ஒன்ப்ளஸ் 5டி ஆனது நிறுவனத்தின் டாஸ் சார்ஜ் (5வி, 4ஏ) பாஸ்ட் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது. சுமார் 162 கிராம் எடையும், 156.1x75x7.3 மிமீ அளவும் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் அதன் முன்னோடி விட நீண்ட, பரந்த, மற்றும் தடிமனாகதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

64 ஜிபி மற்றும் 128 ஜிபி (மிட்நைட் கருப்பு) என்ற இரண்டு சேமிப்பு மாறுபாடுகளில் வெளியாகியுள்ள ஒன்ப்ளஸ் 5டி ஆனது முறையே ரூ.32,999/- மற்றும் ரூ.37,999/- என்ற விலை நிர்ணயத்தை கொண்டுள்ளது. 40கே பட்ஜெட் பிரிவில் உள்ள அனைத்து ஸ்மார்ட்போன்களையும் இந்த விலைப்புள்ளி கடுமையான போட்டியை உண்டாகும் என்பதில் ஐயமில்லை.

நவம்பர் 28-ஆம் தேதி முதல்

நவம்பர் 28-ஆம் தேதி முதல்

இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான், ஒன்ப்ளஸ்ஸ்டோர். இந்த வலைத்தளம் மற்றும் பெங்களூரில் உள்ள ஒன்ப்ளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோரில் நவம்பர் 21-ஆம் தேதி முதல் இக்கருவி வாங்குவதற்கு கிடைக்கும். அதன் பின்னர் திறந்த விற்பனையானது நவம்பர் 28-ஆம் தேதி முதல் இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க நாடுகளில் தொடங்கும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Not just fans, even popular brands seem to be excited for OnePlus 5T in India. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot