Realme 10 Pro Plus Review: டிஸ்பிளேவை லேசா வளைச்சி விட்டதுக்கு இவ்ளோ சீன்-ஆ? நம்பி வாங்கலாமா? வேண்டாமா?

|

ரியல்மி 10 ப்ரோ+ ஸ்மார்ட்போனின் விலையை கேட்டதுமே "என்னடா சொல்றீங்க? டிஸ்பிளேவை லேசா வளைச்சி.. அதை கர்வ்டு டிசனுக்கு கொண்டு வந்து விட்டதுக்கு ரூ.25,999-ஆ!" என்று சிலர் ஷாக் ஆகலாம்!

ஆனால் உண்மை என்னவென்றால் Realme-யின் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனில் கர்வ்டு டிஸ்பிளேவை தவித்து கவனிக்கப்பட வேண்டிய நிறைய அம்சங்கள் உள்ளன!

சரி வாருங்கள்.. Realme 10 Pro Plus ஸ்மார்ட்போனின் டிசைன், டிஸ்பிளே, ப்ராசஸர், கேமராக்கள், பேட்டரி என எதையுமே விடமால்.. எது நன்றாக உள்ளது? எது கொஞ்சம் சுமாராக உள்ளது? எதெல்லாம் கொஞ்சம் மொக்கையாக உள்ளது? என்று "டக் டக்கென்று" பார்க்கலாம்!

டிசைன்: கண்ணாடி போல தெரியும்.. ஆனால் பிளாஸ்டிக்!

டிசைன்: கண்ணாடி போல தெரியும்.. ஆனால் பிளாஸ்டிக்!

Realme 10 Pro+ ஸ்மார்ட்போனை "மேலோட்டமாக" பார்க்கும் எவருமே அதை கிளாஸ் டிசைன் என்று தவறாக நினைத்து கொள்ளலாம்.

ஆனால் அது பிளாஸ்டிக் ஆகும். இதுவொரு நல்ல விஷயமும் கூட, இது அவ்வளவு எளிதாக உடையாது; கூடவே மிகவும் கனமாகவும் இருக்காது; ஆனால் கறைகள் படக்கூடும்; ஜாக்கிரதை!

இது மிகவும் 'ஸ்டைலிஷ்' ஆன டிசைன்களில் ஒன்று என்பதில் சந்தேகமே வேண்டாம். ஆனால் இது அனைவரின் ரசனைக்கும் பொருந்தாது.

ஆனால் இது உங்கள் கைகளுக்குள் மிகவும் கட்சிதமாக பொருந்தும் - அதற்காக இதன் கர்வ்டு பேக் மற்றும் கர்வ்டு டிஸ்பிளே டிசைனுக்கு நன்றிகள்!

பார்த்ததுமே குலை நடுங்கிப்போன விஞ்ஞானிகள்.. வீனஸ் கிரகத்திற்கு பின்னால் ஒளிந்திருந்த பார்த்ததுமே குலை நடுங்கிப்போன விஞ்ஞானிகள்.. வீனஸ் கிரகத்திற்கு பின்னால் ஒளிந்திருந்த "எமன்".. என்னது அது?

டிஸ்பிளே: ஒருத்தனையும் விடாது.. தட்டி தூக்கு!

டிஸ்பிளே: ஒருத்தனையும் விடாது.. தட்டி தூக்கு!

Realme 10 Pro+ ஆனது 6.7-இன்ச் அளவிலான OLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதுவொரு FHD+ ரெசல்யூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் HDR10+ ஆதரவை கொண்ட கர்வ்டு டிஸ்பிளே ஆகும்.

இந்த விலைப்பிரிவின் கீழ் இப்படி ஒரு டிஸ்பிளேவை வழங்குவது சாதாரணமான விஷயம் இல்லை என்பதால், டிஸ்பிளே பிரிவில் ஒரு குறையும் சொல்ல முடியாது!

ப்ராசஸர்: பெயர் மட்டும் தான் புதுசு!

ப்ராசஸர்: பெயர் மட்டும் தான் புதுசு!

Realme 10 Pro+ ஆனது Mediatek இன் Dimensity 1080 SoC-ஐ பேக் செய்கிறது. இது அடிப்படையில் Dimensity 920 சிப்செட்டே ஆகும். இது கிட்டத்தட்ட Realme 9 Pro+ ஸ்மார்ட்போனில் இடம்பெறும் அதே சிப்செட் தான்.

ஆக இதன் செயல்திறனை எடுத்த உடனேயே சுமாராக இருக்கும் என்று கூறிவிட முடியாது; அதே சமயம் பெரிய அளவிலான வேறுபாடுகளை எதிர்பார்க்க கூடாது!

செவ்வாய் கிரகத்தை செவ்வாய் கிரகத்தை "இரண்டாக பிளந்த" திடீர் கோடு.. உள்ளிருந்து வெளியே வர துடிப்பது என்னது? விஞ்ஞானிகள் விளக்கம்!

ஓஎஸ்: லேட்டஸ்ட் தான்.. ஆனாலும் ப்ளோட்வேர் இருக்கு!

ஓஎஸ்: லேட்டஸ்ட் தான்.. ஆனாலும் ப்ளோட்வேர் இருக்கு!

Realme 10 Pro சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது நிறுவனத்தின் சொந்த Realme UI 4 கொண்டு இயங்குகிறது. இது அடிப்படையில் ColorOS ஆகும், ஆனால் சில நல்ல மாற்றங்களுடன் வருகிறது. இது எக்கச்சக்கமான புதிய அம்சங்களை வழங்குகிறது

ஆனால் இதில் உள்ள ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் ஆனது உங்களை சற்றே கடுப்பக்கலாம்; ஏனென்றால் அது ப்ளோட்வேரால் நிரம்பி உள்ளது.

கேமராக்கள் : Realme ஒரு பெரிய தப்பு பண்ணிடுச்சு!

கேமராக்கள் : Realme ஒரு பெரிய தப்பு பண்ணிடுச்சு!

நினைவூட்டும் வண்ணம் Realme 9 Pro+ ஆனது 50MP கேமராவை கொண்டுள்ளது, ஆனால் ரியல்மி 10 Pro+ ஆனது 108MP மெயின் கேமராவுடன் வருகிறது.

இருப்பினும் Realme 10 Pro+ ஆனது Realme 9 Pro+ மாடலில் இருந்த OIS-க்கான ஆதரவை தவறவிடுகிறது; உண்மையில் இது பெரிய விஷயமல்ல; ஆனால் வீடியோ குவாலிட்டியில் சில சமரசங்கள் செய்ய வேண்டி இருக்கும்.

மற்ற எல்லா கேமராக்களும் (செல்பீ உட்பட) மிகவும் வழக்கமான வேலைகளையே செய்கின்றன, ஆஹா ஓஹோ என்று கூற முடியாது. மொக்கை என்றும் சொல்லி விட முடியாது!

அடிச்சான் பாரு.. இதுதான் NOKIA-வின் உண்மையான கம்பேக்.. ஒரே ஒரு அறிவிப்பு.. ஷாக் ஆகிப்போன சீன கம்பெனிகள்!அடிச்சான் பாரு.. இதுதான் NOKIA-வின் உண்மையான கம்பேக்.. ஒரே ஒரு அறிவிப்பு.. ஷாக் ஆகிப்போன சீன கம்பெனிகள்!

பேட்டரி: 80W சார்ஜரை பார்த்துட்டு ஏமாந்துடாதீங்க!

பேட்டரி: 80W சார்ஜரை பார்த்துட்டு ஏமாந்துடாதீங்க!

ரியல்மி 10 ப்ரோ+ ஸ்மார்ட்போனின் பாக்ஸ் உள்ள 80W சார்ஜர் இருக்கும். அதை பார்த்து இந்த ஸ்மார்ட்போன் 80W ஆதரவுடன் வருகிறது என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்.

இந்த ஸ்மார்ட்போன் 67W என்கிற வேகத்தின் கீழ் மட்டுமே சார்ஜ் ஆகும். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அரை மணி நேரத்தில் 0 - 100% வரை சார்ஜ் செய்யும். நினைவூட்டும் வண்ணம் இதில் 5000mAh பேட்டரி உள்ளது.

Photo Courtesy: Realme

Best Mobiles in India

English summary
Not Just Curved Display Realme 10 Pro Plus Has Many More Stuffs To Look Out Here is Our Quick Review

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X