Home
Mobile

செஞ்சிட்டான்.. புது Xiaomi போன்.. 7000mAh பேட்டரி, 50MP AF செல்பீ, 50MP 1/1.3-இன்ச் ரியர் கேமரா.. எந்த மாடல்?

ஷாவ்மீ (Xiaomi) நிறுவனம் ஆனது கடந்த பல வருடங்களாக நாம் பார்த்த "மிகப்பெரிய கேமரா மாற்றங்களுடன்" இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. அது என்ன மாடல்கள்? எப்போது அறிமுகமாகும்? கேமராவில் மிகப்பெரிய மாற்றம் என்றால்.. அப்படி என்ன மாற்றம்? என்ன விலைக்கு வரும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்:

ஷாவ்மீ நிறுவனம் அதன் 2025 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆன ஷாவ்மீ 16 (Xiaomi 16) மற்றும் ஷாவ்மீ 16 ப்ரோ (Xiaomi 16 Pro) மாடல்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த சீரீஸ் வருகிற செப்டம்பர் 2025 கடைசி வாரத்தில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செஞ்சிட்டான்.. புது Xiaomi போன்.. 7000mAh பேட்டரி, 50MP AF செல்பீ!

ஷாவ்மீ 16 சீரீஸ் குறித்த சமீபத்திய லீக் ஆனது இந்த முறை ஷாவ்மீ நிறுவனமானது அதன் கேமரா டிபார்ட்மென்ட்டில் முக்கிய கவனம் செலுத்தும் என்று கூறுகின்றன. வெய்போவில் (Weibo) நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்த தகவல்களின்படி, ஷாவ்மீ 16 சீரீஸின் இரண்டு மாடல்களுமே ஷாவ்மீ 13 சீரிஸில் இருந்து பயன்படுத்தப்படும் 32எம்பி எப்/2.0 செல்பீ கேமராவை கைவிடும்.

அதற்கு பதிலாக வைட் பீல்ட் ஆப் வியூ, ஆட்டோஃபோகஸ் மற்றும் 4கே 60எப்பிஎஸ் பதிவுக்கான ஆதரவுடன் கூடிய புதிய 50எம்பி சென்சார் பேக் செய்யப்படும். இது செல்பீக்கள் மற்றும் வ்லாக்கிங்கிற்கு ஒரு பெரிய பிளஸ் ஆக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ரியர் கேமராவை பொறுத்தவரை, ஷாவ்மீ 16 சீரீஸின் இரண்டு ஸ்மார்ட்போன்களும் 50எம்பி 1/1.3-இன்ச் ப்ரைமரி சென்சாரை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ப்ரோ மாடல் ஆனது டைனமிக் ரேன்ஜை இன்னும் பூஸ்ட் செய்ய, போர்ட்ரெய்ட் ஷாட்களில் சிறந்த டெப்த்-ஐ கண்டறிவதற்கான ToF சென்சார் ஆகியவற்றையும் பெறலாம். மேலும் லைக்கா (Leica) பிராண்டட் இமேஜ் டியூனிங்கும் மேம்படுத்தப்படும்.

மற்ற அம்சங்களை பொறுத்தவரை, ஷாவ்மீ 16 சீரீஸில் ப்ரோ மேக்ஸ் மாடலும் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முழு ஷாவ்மீ 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுமே குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 (Qualcomm Snapdragon 8 Elite 2) சிப் கொண்டு இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் வந்த ஒரு லீக் ஆனது, ஷாவ்மீ 16 ஸ்மார்ட்டான ஆனது மிகப்பெரிய 7,000mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்றும் கூறுகிறது. புதிய இமேஜ் சென்சார்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட லைக்கா ட்யூனிங் மூலம், சவாலான படப்பிடிப்பு நிலைமைகளில் கூட ஷாவ்மீ 16 சீரீஸ் ஆனது ஒப்போ பைண்ட் எக்ஸ்9 (Oppo Find X9) மற்றும் விவோ எக்ஸ்300 (Vivo X300 )உடன் எவ்வாறு போட்டியிடுகிறது என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்

கடைசியாக அறிமுகமான ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.73-இன்ச் WQHD+ LTPO AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்
- 16ஜிபி வரை LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி வரை UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 15 ஓ அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 2.0 (HyperOS 2.0)

- லைக்கா டியூன் செய்யப்பட்ட குவாட் ரியர் கேமரா யூனிட்
- 50-மெகாபிக்சல் ப்ரைமரி LYT-900 சென்சார் (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்)
- 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர்
- OIS மற்றும் 3x வரை ஆப்டிகல் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் சோனி IMX858 டெலிஃபோட்டோ கேமரா
- OIS மற்றும் 4.3x வரை ஆப்டிகல் ஜூம் கொண்ட 200-மெகாபிக்சல் ISOCELL HP9 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா

- 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார்
- 90W வயர்டு மற்றும் 80W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 5410mAh பேட்டரி
- இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 5ஜி, 4ஜி LTE, வைஃபை 7, ப்ளூடூத், ஜிபிஎஸ், என்எப்சி, யூஎஸ்பி 3.2 டைப்-சி போர்ட்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்

More from GizBot

Best Mobiles in India

English summary
Not Just 7000mAh Battery Xiaomi 16 Xiaomi 16 Pro gets Big Upgrades in Cameras Also Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X