ஆர்டர் போட்றாதீங்க.. Amazon, Flipkart-ல நல்ல ஆஃபர்னு எந்த போனும் வாங்கிடாதீங்க.. காரணம் இந்த 5 போன்களும் தான்!
புது போன் வாங்குவதற்கு, அதிலும் குறிப்பாக நல்ல ஆஃபர் விலையில் லேட்டஸ்ட் மாடல்களை வாங்குவதற்கு அமேசானின் கிரேட் சம்மர் விற்பனை (Amazon Great Summer Sale) மற்றும் பிளிப்கார்ட்டின் பிக் சேவிங் டேஸ் விற்பனையை (Flipkart Big Saving Days Sale) சிறந்த வாய்ப்பு கிடைக்காது தான்.
இருப்பினும், அடுத்த சில நாட்களுக்கு அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டிலுமே எந்தவொரு போனையுமே ஆர்டர் போடாமல் இருப்பது தான் புத்திசாலித்தனம். ஏனென்றால்.. மேம்படுத்தப்பட்ட டிசைன், புதிய ஹார்ட்வேர் மற்றும் லேட்டஸ்ட் சாஃப்ட்வேர் போன்றவைகளுடன்.. ஒன்றல்ல, மொத்தம் 5 புதிய ஸ்மார்ட்போன்கள் (Upcoming Smartphones) கூடிய விரைவில் அறிமுகமாக உள்ளன.

இன்னும் சில தினங்கள் காத்திருந்தால், அந்த 5 போன்களில் ஒன்றை உங்களுக்கு சொந்தமாக்கி கொள்ளலாம். காத்திருந்து வாங்கும் அளவிற்கு அப்படி என்னென்ன ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன? அவைகள் என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? எந்த பட்ஜெட்டின் (விலைப்பிரிவின்) கீழ் வெளியாகும்? இதோ விவரங்கள்:
போக்கோ எஃப் (Poco F5): வருகிற மே 9 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் இந்த ஸ்மார்ட்போன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 2 (Qualcomm Snapdragon 7 Plus Gen 2) ப்ராசஸர் மூலம் இயக்கப்படும் என்பதை போக்கோ நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான ஓஎல்இடி டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட எம்ஐயுஐ 14, வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம், 64எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் போன்ற அம்சங்களையும் பேக் செய்யலாம். விலையைப் பொறுத்தவரை, இது ரூ.30,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.
கூகுள் பிக்சல் 7ஏ (Google Pixel 7a): மே 11 அன்று அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் விற்பனைக்கு வரவுள்ளது. அம்சங்களை பொறுத்தவரை - டென்சார் ஜி2 ப்ராசஸர், 64எம்பி மெயின் கேமரா, 13எம்பி செல்பீ கேமரா, 90ஹெர்ட்ஸ் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் போன்றவைகளுடன் வரலாம். இது ரூ.40,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.
லாவா அக்னி 2 (Lava Agni 2): இது அடுத்த சில வாரங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ள ஒரு சுவாரஸ்யமான மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனாகும். இது டைமன்சிட்டி 7050 ப்ராசஸர் (Dimensity 7050 SoC) மூலம் இயங்கும் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும். மேலும் இது கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளே, இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் போன்ற அம்சங்களையும் வழங்கலாம். இது ரூ.20,000 பட்ஜெட்டில் வெளியாகும்.
ஒன்பிளஸ் நோர்ட் 3 (OnePlus Nord 3): இந்த 2023 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் மிட்-ரேன்ஜ் போன்களில் இதுவும் ஒன்றாகும். இது டைமன்சிட்டி 9000 ப்ராசஸர் (Dimensity 9000 SoC), 120ஹெர்ட்ஸ் 1.5கே டிஸ்பிளே, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 64எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 16எம்பி செல்பீ கேமரா போன்ற அம்சங்களை பேக் செய்யலாம். இது ரூ.30,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.
ரியல்மி 11 ப்ரோ பிளஸ் (Realme 11 Pro Plus): இந்த ஸ்மார்ட்போன் மிகவும் சுவாரஸ்யமான வடிவமைப்புடன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லீக்ஸ் தகவல்களின்படி இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் வட்ட வடிவிலான கேமரா கட்அவுட் இருக்கும்; அதில் 200எம்பி மெயின் கேமரா இடம்பெறலாம்.
மேலும் இது இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உடனான கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளேவுடன் வரும் என்றும் கூறப்படுகிறது. தவிர இது ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய பெரிய பேட்டரியையும் பேக் செய்யும் என்றும் கூறப்படுகிறது. இது ரூ.35,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








