பிப்.24 வரை எந்த போனும் வாங்கிடாதீங்க.. 7.9mm ஸ்லிம் டிசைனில் 7600mAh பேட்டரி, 50MP SONY கேமரா போன் வருது!
ஐக்யூ (iQOO) நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஆக ஐக்யூ 15ஆர் (iQOO 15R) வருகிற பிப்ரவரி 24 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஐக்யூ 15 மாடலுக்கு மலிவு விலை மாற்றாக அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த ஸ்மார்ட்போனின் கேமரா குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது
முன்னதாக ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் அறிமுகமான ஐக்யூ இஸட்11 டர்போவின் மறுபெயரிடப்பட்ட வெர்ஷன் ஆக அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆக ஐக்யூ இஸட்11 டர்போ ஸ்மார்ட்போனில் உள்ள 200MP சாம்சங் HP5 சென்சார் ஆனது ஐக்யூ 15ஆர் மாடலிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஐக்யூ நிறுவனம் அதன் ஐக்யூ 15ஆர் மாடலுக்கு மெகாபிக்சல் எண்ணிக்கையை விட படத்தரம் மற்றும் நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளிப்பதாக தெரிகிறது. ஏனென்றால் ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போனின் ப்ரைமரி கேமராவானது - 50MP சோனி LYT-700 சென்சாரை கொண்டிருக்கும் என்பதை ஐக்யூ நிறுவனம் உறுதி செய்துள்ளது.
இந்த நடவடிக்கை, ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போனை எதிர்பார்த்த சிலருக்கு ஏமாற்றம் அளிக்கக்கூடும். ஆனால் சோனியின் LYT-700 சென்சார் ஆனது லைட் கேப்சர் மற்றும் டைனமிக் ரேஞ்சிற்கு பெயர் பெற்றது. குறிப்பாக சவாலான லைட்டிங் நிலைகளில்! நடைமுறையில், இது மிகவும் நம்பகமான குறைந்த ஒளி புகைப்படங்கள் மற்றும் சிறந்த வண்ண துல்லியத்திற்கு வழிவகுக்கும். ஆக 200எம்பி க்கு பதிலாக வரும் 50எம்பி - உண்மையிலேயே பெட்டர் ஆப்ஷன் ஆகும்.
மற்ற கேமராக்களை பொறுத்தவரை, ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போனின் ரியர் பேனலில் 8MP அல்ட்ரா-வைட் கேமராவும், முன்பக்கத்தில் 32MP செல்பீ கேமராவும் இருக்கலாம். இந்த ஒட்டுமொத்த கேமரா அமைப்பு ஆனது ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது போட்டோ எடுப்பதில் அதிக கவனம் செலுத்தவில்லை, ஆனால் நம்பகமான சென்சார்களை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது என்பதை குறிக்கிறது.
ஐக்யூ 15ஆர்-ல் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 144Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.59-இன்ச் 1.5K AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்
- 100W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 7,600mAh பேட்டரி
- வெறும் 7.9mm ஸ்லிம் டிசைன்
- நான்கு ஆண்டுகளுக்கு Android OS அப்டேட்கள்
- ஆறு வருட செக்யூரிட்டி அப்டேட்கள்
- IP68 மற்றும் IP69 ரேட்டிங்
ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? விலையை பொறுத்தவரை, ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.50,000 க்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்படலாம். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இது ரூ.47,999 க்கு தொடங்கும் என்று வதந்திகள் தெரிவிக்கின்றன.
ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.85-இன்ச் சாம்சங் எம்14 அமோஎல்இடி டிஸ்பிளே
- 3என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் (f/1.88) ப்ரைமரி கேமரா
- 100எக்ஸ் டிஜிட்டல் ஜூம் வரை வழங்கும் 50-மெகாபிக்சல் (எப்/2.65) பெரிஸ்கோப் கேமரா
- 50 மெகாபிக்சல் (எப்/2.05) வைட்-ஆங்கிள் கேமரா
- முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் (எப்/2.2) செல்பீ கேமரா
- 100W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 7000எம்ஏஎச் பேட்டரி


Click it and Unblock the Notifications








