எனக்கு எண்டே கிடையாது... வருகிறது Nokia-வின் முரட்டுத்தனமான புதிய போன்.! லுக் வேற அள்ளுதே!
எச்எம்டி குளோபல் நிறுவனம் தரமான சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் நோக்கியா போன்கள் வெளிவருவதால் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா எகஸ்ஆர்30 rugged ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய முரட்டுத்தனமான ஸ்மார்ட்போன் தரமான அம்சங்களுடன் வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த போனின் புகைப்படங்களை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த புதிய நோக்கியா எகஸ்ஆர்30 போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

இணையத்தில் வெளிவந்த தகவலின்படி இந்த புதிய நோக்கியா எகஸ்ஆர்30 ஆனது ஃபுல் எச்டி பிளஸ் பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஃபுல் எச்டி டிஸ்பிளே என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். குறிப்பாக இதன் டிஸ்பிளே பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.
அதாவது நோக்கியா எகஸ்ஆர்30 சிறந்த பாதுகாப்பான டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். அதேபோல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல சிறப்பான டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

இந்த போனின் மென்பொருள் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை, இருந்தபோதிலும் ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த நோக்கியா எகஸ்ஆர்30 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இதன் முந்தைய நோக்கியா எக்ஸ்ஆர்20 போன் ஆனது ஸ்னாப்டிராகன் 480 5ஜி சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய நோக்கியா எகஸ்ஆர்30ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய நோக்கியா எகஸ்ஆர்30 ஸ்மார்ட்போன்.

6ஜிபி ரேம் மறறும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த புதிய நோக்கியா எகஸ்ஆர்30 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த போன்.
அதேபோல் 4600 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த நோக்கியா எகஸ்ஆர்30 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனில் நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். அதாவது நீண்ட நேரம் விளையாடத் தேவையான பேட்டரி பேக்கப் கொடுக்கும் இந்த புதிய நோக்கியா போன். பின்பு 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான நோக்கியா எகஸ்ஆர்30 ஸ்மார்ட்போன்.

மேலும் இந்த புதிய நோக்கியா எகஸ்ஆர்30 ஸ்மார்ட்போன் ஆனது 5ஜி வசதியுடன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த போனின் விலை சற்று உயர்வாக இருக்கும். இருந்தபோதிலும் இந்த போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
images courtesy: winfuture.de, fonearena.com
Source:winfuture.de


Click it and Unblock the Notifications