மிலிட்டரி தர ஆதரவுடன் அறிமுகமான நோக்கியா எக்ஸ்ஆர் 20- ஒரு மணிநேரம் நீருக்குள்ளயே செயல்படுமாம்!

|

நோக்கியா எக்ஸ்ஆர் 20 சாதனமானது மிலிட்டரி கிரேடு பில்ட் ஆதரவு மற்றும் 20:9 டிஸ்ப்ளே ஆதரவுடன் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

நோக்கியா எக்ஸ்ஆர் 20 விலை

நோக்கியா எக்ஸ்ஆர் 20 விலை

இந்தியாவில் நோக்கியா எக்ஸ்ஆர் 20 விலை ஆனது ரூ.46,999 ஆக இருக்கிறது. நோக்கியா எக்ஸ்ஆர் 20 இந்தியாவில் இன்று திங்கட்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் இராணுவ தர வடிவமைப்போடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 55 டிகிரி முதல் 20 டிகிரி செல்சியஸ், ஒரு மணி நேரம் தண்ணீருக்கு அடியில் உள்ள தீவிர வெப்பநிலையும் இந்த சாதனம் செயல்பாட்டு நிலையில் இருக்கும். நோக்கியா எக்ஸ்ஆர் 20 நான்கு வருட மாதாந்திர பாதுகாப்பு புதுப்பிப்புகள் மற்றும் மூன்று வருடங்கள் பெரிய ஓஎஸ் மேம்படுத்தல்களுடன் வருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. நோக்கியா எக்ஸ்ஆர் 20:9 டிஸ்ப்ளே மற்றும் இரட்டை பின்புற கேமராக்களுடன் வருகிறது.

ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஓசி

ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஓசி

இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்தியாவில் நோக்கியா எக்ஸ்ஆர் 20 விலை குறித்து பார்க்கையில், இந்தியாவில் நோக்கியா எக்ஸ்ஆர் 20 சாதனமானது ஒற்றை 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் வருகிறது. இந்த சாதனத்தின் விலை ரூ.46,999 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அக்டோபர் 20 ஆம் தேதி முதல் கிரானைட் மற்றும் அல்ட்ரா ப்ளூ வண்ண விருப்பம் ஆனது முன்பதிவு செய்ய கிடைக்கும். அதேபோல் அக்டோபர் 30 முதல் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. இது முன்னணி ஆஃப்லைன் சில்லறை கடைகள், குறிப்பிட்ட இகாமர்ஸ் தளங்கள் மற்றும் நோக்கியா.காம் மூலம் விற்பனைக்கு கிடைக்கும்.

நோக்கியா எக்ஸ்ஆர் 20 அறிமுக சலுகை

நோக்கியா எக்ஸ்ஆர் 20 அறிமுக சலுகை

நோக்கியா எக்ஸ்ஆர் 20 அறிமுக சலுகைகளும் வழங்கப்படுகிறது. முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அறிமுக சலுகைகளாக ரூ.3599 மதிப்புள்ள நோக்கியா பவர் இயர்பட்ஸ் லைட் வழங்கப்படுகிறது. அதேபோல் எச்எம்டி குளோபல் நோக்கியா எக்ஸ் 20-ஐ முன்பதிவு செய்யும் போது ஒரு வருட திரை பாதுகாப்பு திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கும். ஜூலை மாதம் நோக்கிய எக்ஸ்ஆர் 20 ஐரோப்பாவில் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு விருப்பத்தோடு வருகிறது. இதன் இந்திய மதிப்பு ரூ.43,500 ஆக அறிமுகப்படுத்தப்பட்டது.

நோக்கியா எக்ஸ்ஆர்20 சிறப்பம்சங்கள்

நோக்கியா எக்ஸ்ஆர்20 சிறப்பம்சங்கள்

இரட்டை சிம் (நானோ) ஆதரவுடன் ஆண்ட்ராய்ட் 11 மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080x2,400 பிக்சல்கள்) டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு அம்சத்தை கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6 ஜிபி ரேம் அம்சத்தோடு வருகிறது. 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 13 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஷூட்டர் என இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. கேமரா அமைப்பு ஜீஸ் ஒளியியலுடன் வருகிறது.

ஸ்பீட் வார்ப் பயன்முறை

ஸ்பீட் வார்ப் பயன்முறை

நோக்கியா எக்ஸ்ஆர் 20 ஸ்பீட் வார்ப் பயன்முறையுடன் வருகிறது. மாண்டேஜ் நிலையில் பல நிகழ்வுகளை பிடிக்க அனுமதிக்கிறது. ஸ்மார்ட்போன் ஆனது அதிரடி கேம் பயன்முறையுடன் வருகிறது. நிலையான காட்சிகளை பதிவு செய்ய இந்த சாதனம் அனுமதிக்கிறது. நோக்கியா எக்ஸ்ஆர் 20 சாதனமானது ஓஜோ ஸ்பேஷியல் ஆடியோ ரெக்கார்டிங் ஆதரவுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் வீடியோ பதிவுகளை அதிகரிக்க பயன்படுகிறது. ப்ளேபேக் ஆதரவுடன் இணைக்கப்பட்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இருக்கின்றன.

128 ஜிபி உள்சேமிப்பு வசதி

128 ஜிபி உள்சேமிப்பு வசதி

நோக்கியா எக்ஸ்ஆர் 20 ஸ்மார்ட்போனானது 128 ஜிபி உள்சேமிப்பு வசதியை கொண்டுள்ளது. 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் வி5.1, யூஎஸ்பி டைப் சி போர்ட் ஆதரவோடு வருகிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது. நோக்கியா எக்ஸ்ஆர் 20 MIL-STD810H சான்றளிக்கப்பட்ட உருவாக்கத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டென்ட் ஐபி 68 சான்றிதழ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4630 எம்ஏஎச் பேட்டரி 18 வாட்ஸ் வயர் மற்றும் 15 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த சாதனத்தை எடை 248 கிராம் ஆக இருக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Nokia XR20 Smartphone Lauched in India With 6GB RAM, Qualcomm Snapdragon 480 Soc: Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X