Home
Mobile

இன்று விற்பனைக்கு வந்த நோக்கியா எக்ஸ்ஆர்20 ஸ்மார்ட்போன்.!

சமீபத்தில் மிலிட்டரி தர ஆதரவுடன் அறிமுகமான நோக்கியா எக்ஸ்ஆர் 20 ஸ்மார்ட்போன் இன்று விற்பனைக்கு வந்துள்ளது. குறிப்பாக நோக்கியாவின் இணையதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு கிடைக்கிறது . அதேபோல் கிரானைட் மற்றும் அல்ட்ரா ப்ளூ வண்ண விருப்பங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் சில ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் கூட கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

 எக்ஸ்ஆர்20 ஸ்மார்ட்போனின் விலை ரூ.46,999-ஆக உள்ள

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட நோக்கியா எக்ஸ்ஆர்20 ஸ்மார்ட்போனின் விலை ரூ.46,999-ஆக உள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போனுக்கு குறிப்பிட்ட சலுகையும் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது நோக்கியா எக்ஸ்ஆர்20 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

நோக்கியா ஸ்மார்ட்போன் இராணுவ

இந்த புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் இராணுவ தர வடிவமைப்போடு வருகிறது. மேலும் நோக்கியா எக்ஸ்ஆர் 20 நான்கு வருட மாதாந்திர பாதுகாப்பு புதுப்பிப்புகள் மற்றும் மூன்று வருடங்கள் பெரிய ஓஎஸ் மேம்படுத்தல்களுடன் வருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

நோக்கியா எக்ஸ்ஆர்20

நோக்கியா எக்ஸ்ஆர்20 ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 550 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான நோக்கியா எக்ஸ்ஆர்20 ஸ்மார்ட்போன் மாடல்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 சிப்செட்

நோக்கியா எக்ஸ்ஆர்20 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 சிப்செட் வசதி உள்ளது. மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சாதனம். குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. ஆனால் விரைவில் இந்த சாதனத்திற்கு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 MIL-STD810H சான்றளிக்கப்பட்ட உருவாக்கத்துடன்

நோக்கியா எக்ஸ்ஆர் 20 மாடல் MIL-STD810H சான்றளிக்கப்பட்ட உருவாக்கத்துடன் வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டென்ட் ஐபி 68 சான்றிதழ் உடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் தனித்துவமான பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா எக்ஸ்ஆர்20 ஸ்மார்ட்போன்.

48எம்பி பிரைமரி சென்சார்

நோக்கியா எக்ஸ்ஆர் 20 மாடலின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 13எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ளது இந்த புதிய

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் வி5.1, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய நோக்கியா எக்ஸ்ஆர்20 ஸ்மார்ட்போன் மாடல். எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

நோக்கியா எக்ஸ்ஆர் 20 ஸ்மார்ட்போனில் 4630 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18W வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் (Qi தரநிலை) சார்ஜிங்கை ஆதரிக்கும் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல்OZO பின்னணி ஆதரவுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது நோக்கியா எக்ஸ்ஆர் 20 ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Nokia XR20 Sale Starts Today in India: Price, Offers and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X