Home
Mobile

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் நோக்கியா XR20 Rugged ஸ்மார்ட்போன்.!

எச்எம்டி குளோபல் நிறுவனம் விரைவில் இந்தியாவில் புதிய நோக்கியா XR20 Rugged ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என தகவல் வெளிவந்துள்ளது. வெளிவந்த தகவலின்படி இந்த சாதனம் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த நோக்கியா XR20 Rugged ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஜூலை மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் சிறந்த

குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவரும். அதேபோல் பிற சாதனங்களை விட நீண்ட காலம்நீடிக்கும் உறுதியுடன் வருகிறது என்று எச்எம்டி குளோபல் நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்குஅதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

 6.67-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே

நோக்கியாXR20 Rugged ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 550 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான நோக்கியா XR20 Rugged ஸ்மார்ட்போன்.

ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர்

இந்த புதிய ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் உடன் அட்ரினோ 619 ஜி.பி.யு ஆதரவும்உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11 இயங்குதள வசதியுடன்வெளிவரும். அதன்பின்பு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6ஜிபி ரேம் மற்

இந்த நோக்கியா XR20 Rugged ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போனின்

நோக்கியா XR20 Rugged ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா என மொத்தம் இரண்டு
கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கம், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக்
கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர பல்வேறு சிறப்பான கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

4630 எம்ஏஎச் பேட்டரி

இந்த புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் 4630 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர், வாட்டர் ரெசிஸ்டண்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இவற்றுள்அடக்கம்.

ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப் சி, 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது
இந்த அசத்தலான நோக்கியா XR20 Rugged ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் அதிக எதிர்பார்ப்புகளை
உருவாக்கியுள்ளது. மேலும் இந்த சாதனம் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Nokia XR20 Rugged May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X