Home
Mobile

வியக்கவைக்கும் விலையில் மூன்று கேமராக்களுடன் நோக்கியா எக்ஸ்71 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

நோக்கியா எக்ஸ்71 ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது.

எச்எம்டி குளோபல் நிறுவனம் தற்சமயம் தைவானில் நோக்கியா எக்ஸ்71 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு
கொண்டுவரப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று கேமராக்களுடன் நோக்கியா எக்ஸ்71 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

நோக்கியா எக்ஸ்71 ஸ்மார்ட்போனில் நாட்ச்லெஸ் டிஸ்பிளே, 48எம்பி கேமரா, செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இருந்தபோதிலும் இதன் விலை சற்று உயர்வாக
இருக்கிறது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

நோக்கியா எக்ஸ்71 சாதனம் 6.39-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது, பினபு 19:3:9 என்ற திரைவிகதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதயைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சேமிப்பு:

சேமிப்பு:

நோக்கியா எக்ஸ்71 ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதி இவற்றில் உள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சிப்செட்:

சிப்செட்:

இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 660ஏஐஇ எஸ்ஒசி பவர் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

கேமரா:

கேமரா:

நோக்கியா எக்ஸ்71 ஸ்மார்ட்போனின் கேமரா பகுதிக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி சூப்பர் வைட் ஆங்கிள் + 5எம்பி
டெப்த் கேமரா என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது.

மேலும் 16எம்பி செல்பீ கேமரா, 4கே வீடியோ பதிவு ஆதரவு, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

பேட்டரி-விலை:

பேட்டரி-விலை:

நோக்கியா எக்ஸ்71 ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் அதரவு கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் என பல்வேறு இணைப்பு ஆதரவுகள்
இவற்றுள் அடக்கம்.

நோக்கியா எக்ஸ்71 ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.26,700-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia X71 with punch hole display officially launched for Rs 26700: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X