மிரட்டலான நோக்கியா எக்ஸ்71 "பன்ச் ஹோல் டிஸ்பிளேயுடன்"அறிமுகம்.!
எச்.எம்.டி குளோபல் நிறுவனம் நேற்று தனது புதிய நோக்கியா எக்ஸ்71 ஸ்மார்ட்போன் மாடலை வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி தைவானில் நடைபெறும் அதன் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யவுள்ளது.
எச்.எம்.டி குளோபல் நிறுவனம் நேற்று தனது புதிய நோக்கியா எக்ஸ்71 ஸ்மார்ட்போன் மாடலை வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி தைவானில் நடைபெறும் அதன் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யவுள்ளது.

நோக்கிய நிறுவனம் அறிமுகம் செய்யப்போகும் முதல் முழு திரை டிஸ்பிளே ஸ்மார்ட்போன் இது என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் ஐந்து கேமராகள் கொண்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் மாடலையும் தைவானில் அறிமுகம் செய்யவுள்ளது.

புதிய நோக்கியா எக்ஸ்71 ஸ்மார்ட்போன்
புதிய நோக்கியா எக்ஸ்71 ஸ்மார்ட்போன், 48 மெகா பிக்சல் கேமராவுடன் கூடிய பன்ச் ஹோல் டிஸ்பிளேயுடன் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்திய மற்றும் உலக ஸ்மார்ட்போன் சந்தையில் நோக்கிய 8.1 பிளஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பன்ச் ஹோல் டிஸ்பிளே
நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் 6.22' இன்ச் பியூர் எச்.டி பன்ச் ஹோல் டிஸ்பிளேயுடன், ஜீஸ் ஆப்டிக் டூயல் ரியர் கேமராவுடன், ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் உடன் கொண்ட 3500 எம்.ஏ.எச் பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்பட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா எக்ஸ்71 விபரக்குறிப்பு:
- 6.22' இன்ச் 1080x2244 பிக்சல் கொண்ட முழு எச்.டி பியூர் டிஸ்பிளே
- HDR10 ஆதரவு சேவை
- ஆக்டா கோர் குயல்காம் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட்
- 48 மெகா பிக்சல் உடன் கூடிய 120 டிகிரி கொண்ட வைடு அங்கிள் கேமரா
- 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- 400ஜிபி வரை விரிவாக்க எஸ்.டி கார்டு மெமரி
- ஆண்ட்ராய்டு 9 பை
- டூயல் நானோ சிம்
- 4ஜி வோல்ட்இ
- ப்ளூடூத் 5.0
- வைஃபை 802.11ac
- ஜி.பி.எஸ். மற்றும் ஏ-ஜி.பி.எஸ்
- 3.5 ஆடியோ ஜாக்
- யு.எஸ்.பி டைப்-சி போர்ட்
- 3500 எம்.ஏ.எச் பேட்டரி

விலை விபரம்
இந்த புதிய நோக்கிய எக்ஸ்71 ஸ்மார்ட்போன், இதுபோன்ற சிறப்பம்சங்களுடன் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி தைவானில் அறிமுகம் செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.இதன் விலை விபரங்களை இன்னும் நோக்கிய நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications