Home
Mobile

நோக்கியா எக்ஸ்-6, சாம்சங் கேலக்ஸி- ஓர் ஒப்பீடு

By Super
நோக்கியா எக்ஸ்-6, சாம்சங் கேலக்ஸி- ஓர் ஒப்பீடு
நோக்கியாவின் எக்ஸ்-6 மற்றும் சாம்சங்கின் கேலக்ஸி மினி ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் சந்தையில் அனலை கிளப்பியுள்ளன. இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களுமே உயர்ந்த தொழில் நுட்பத்தை வழங்கியுள்ளது.சாம்சங் கேலக்ஸி மினி போன் ஆன்ட்ராய்டு வி2.2 ஃப்ரையோ வசதியைக் கொண்டுள்ளது.

இதில் 600 எம்எச்இசட் பிராசஸர் கொண்ட சிபியூ பொருத்தப்பட்டுள்ளது. இதனால் அதி வேகத்துடன் செயல்படுகிறது கேலக்சி மினி. இது 3.2 டிஎஃப்டி டச் ஸ்கிரீன் வசதி கொண்டது. 256 கே களர்ஸுக்கு ஸப்போர்ட் செய்கிறது.

இந்த மாடல் 105 கி.கிராம் எடை கொண்டது. இந்த மாடல் டைப் செய்வதற்கு எளிதாக இருப்பதற்கு க்யூவர்டி கீப்பேட் பொருத்தப்பட்டுள்ளது. நோக்கியா எக்ஸ் 6 வெர்ஷன் 9.4 சிம்பையன் ஆப்பிரேட்டிங் சிஸ்டம் கொண்டது. இதில் ஏஆர்எம் 434 எம்எச்இசட் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. 122 கிராம் எடையைக் கொண்டுள்ளது.

கேலக்ஸி மினியைப் போலவே 3.2 இஞ்ச் டச் ஸ்கிரீன் வசதியைக் கொண்டுள்ளது. 16 எம் களர் சப்போர்ட் கொண்டுள்ளது. நோக்கியா எக்ஸ்-6 மாடல் க்யூவர்டி கீப்பேட் வசதியினைக் கொண்டுள்ளது. 5 எம்ப்பி கேமரா மற்றும் 2592 X 1944 பிக்ஸல் ரிவல்யூஷன் கொண்டுள்ளது.

நோக்கியா எக்ஸ் 6 போன் கார்ல் சீய்ஸ் ஆப்டிக்ஸ் வசதியை பெற்றுள்ளது. இதில் டியூவல் லெட் ஃப்ளாஷ் மற்றும் ஆட்டோ ஃபோக்கஸ் வசதியும் உள்ளது. இந்த மொபைல் மாடலில் 3ஜி நெட்வர்க் மற்றும் செகன்டரிக் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி மினி மொபைலில் 160 எம்பி இன்டர்னல் மெமரி ஸ்டோரேஜ் வசதியும் இதில் பெற முடியும். இதில் மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் இதன் மெமரியை 32 ஜிபி வரை விரிவுபடுத்த முடியும். இந்த மொபைலுடன் 2 ஜிபி கார்டு கிஃப்ட்டாக வழங்கப்படுகிறது. நோக்கியா எக்ஸ் 6 போனில் 128 எம்பி ரேம் மற்றும் 8 ஜிபி வரை ஸ்டோரேஜ் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஹேண்செட்டிலும் மெமரியை விரிவுபடுத்தும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள புளூடூத் வி2.0 மூலம் தகவல்களை எளிதாகப் பரிமாரிக்கொள்ளலாம்.மைக்ரோ யூஎஸ்பி வி2.0 வசதி இந்த இரண்டு ஹேண்ட்செட்டிலும் உள்ளது. சாம்சங் கேலக்ஸி மினி ஹேண்டிசெட்டின் விலை ரூ.7,858. நோக்கியா எக்ஸ் -6 மொபைலின் விலை ரூ.12,599.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X