Home
Mobile

விரைவில்: இந்தியாவில் விற்பனைக்கு வரும் நோக்கியா எக்ஸ்6.!

நோக்கியா எக்ஸ்6 ஆனது எச்டிஆர் மற்றும் பொக்கே மோட் ஆகிய திறன்களை உள்ளடக்கிய 16 எம்பி முதன்மை மற்றும் 5 எம்பி மோனோகிராம் சென்சார் என்கிற இரட்டை கேமரா கட்டமைப்பை கொண்டுள்ளது.

By Prakash S

தொடர்ந்து நோக்கியா நிறுவனம் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, தற்சமயம் அந்நிறுவனம் புதிய அறிப்பை வெளியிட்டுள்ளது, அது என்னவென்றால் கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா எக்ஸ்6 ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்து விற்பனைக்கு கொண்டுவருகிறது எச்எம்டி குளோபல் நிறுவனம்.

விரைவில்: இந்தியாவில் விற்பனைக்கு வரும் நோக்கியா எக்ஸ்6.!

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர், டூயல் ரியர் கேமரா, ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் மற்றும் செயற்கை நுண்ணறிவு
சார்ந்த அம்சங்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 சேமிப்பு மாடல் :

சேமிப்பு மாடல் :

அதிகாரபூர்வமான வெளியீட்டு விலையின் படி, நோக்கியா எக்ஸ்6 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 32 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு மாடல் ஆனது (தோராயமாக) ரூ.13,800/-க்கும், 4 ஜிபி ரேம் + 32 ஜிபி சேமிப்பு மாடல் ஆனது ரூ.16,000/-க்கும் மற்றும் இறுதி மாறுபாடு ஆன 6 ஜிபி ரேம் + 64 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு மாடல் ஆனது ரூ.18,100/-க்கும் அறிமுகமாகி உள்ளன.

  ரூ.20,000/-க்கு மேல் என்கிற விலை

ரூ.20,000/-க்கு மேல் என்கிற விலை

சீனாவில் ரூ.20,000/-க்குள் வெளியாகியுள்ள இதே ஸ்மார்ட்போன், அதன் இந்திய வெளியீட்டை சந்திக்கும் போது, ரூ.20,000/-க்கு மேல் என்கிற விலை நிர்ணயத்தை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அந்த புள்ளியானது நோக்கியா 6.1 மற்றும் நோக்கியா 7 பிளஸ் ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலைப்புள்ளிக்கு இடையே வைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

19: 9 என்கிற அளவிலான காட்சி விகிதம்

19: 9 என்கிற அளவிலான காட்சி விகிதம்

அம்சங்களை பொறுத்தவரை, நோக்கியா X6 ஆனது 5.8 அங்குல FHD+ (1080 x 2280 பிக்சல்) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 19: 9 என்கிற அளவிலான காட்சி விகிதம் மற்றும் 2.5 டி கர்வ்டு கிளாஸ் அமைப்பையும் கொண்டுள்ளது. இது சக்திவாய்ந்த க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 636 SoC சிப்செட் உடனான ஆக்டா-கோர் செயலியுடன் இணைக்கப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்டி அட்டை விரிவாக்கத்துடன் கூடிய, 6 ஜிபி / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி சேமிப்பு மாடல்களில் வெளியாகியுள்ளது.

16 எம்பி செல்பீ கேமரா

16 எம்பி செல்பீ கேமரா

நோக்கியா எக்ஸ்6 ஆனது எச்டிஆர் மற்றும் பொக்கே மோட் ஆகிய திறன்களை உள்ளடக்கிய 16 எம்பி முதன்மை மற்றும் 5 எம்பி மோனோகிராம் சென்சார் என்கிற இரட்டை கேமரா கட்டமைப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான எப் / 2.0 துளை உடனான ஒரு 16 எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது. இது பேஸ் அன்லாக் அம்சத்தை ஆதரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட்

3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட்

மேலும் இதன் கேமரா சிறந்த முடிவுகளை வழங்குவதற்காக மேம்படுத்தப்பட்ட ஏஐ திறன்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றிக்கும் மேலாக மிகவும் சிறப்பான கேமரா அம்சமான பொத்தீ ஆனது, நோக்கியா எக்ஸ்6-ல் இடம்பெற்றுள்ளது. இது ஒரே நேரத்தில் முன் மற்றும் பின்புற கேமராக்களை பயன்படுத்தி புகைப்படங்களை எடுக்க உதவும் ஒரு அம்சமாகும். இணைப்பு ஆதரவுகளை பொறுத்தவரை, நோக்கியா எக்ஸ்6 ஆனது, இரட்டை சிம் ஆதரவு, 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளுடூத் வி5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ ஓஎஸ் :

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ ஓஎஸ் :

க்விக் சார்ஜ் 3.0 பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கான ஆதரவு கொண்ட நீக்கமுடியாத லி-அயன் 3,060mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் நோக்கியா எக்ஸ் 6 ஆனது ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ ஓஎஸ்-ன் கீழ் இயங்குகிறது. இதன் இந்திய வெளியீடு எப்போது.? ப்ளூடூத் இணைப்பு போன்று, அம்சங்களில் வேறு ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா.? என்னென்ன சேமிப்பு மாடல்களில் வெளியாகும்.? விலை நிர்ணயம் என்னவாக இருக்கும்.? போன்ற பல அப்டேட்ஸ்களுக்கு, தமிழ் கிஸ்பாட் தளத்தின் மொபைல் பிரிவின் கீழ் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Nokia X6 India launch confirmed as support page goes live on companys local website: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X