ரெட்மீ நோட் 5 ப்ரோ வேண்டாம்; நோக்கியா எக்ஸ்6 ஓகே; ஏன் என்பதற்கான 3 காரணங்கள்.!

நோக்கியா பிராண்ட் மொபைல்களை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி குளோபல் நிறுவனமானது, அதன் நோக்கியா எக்ஸ்6 ஸ்மார்ட்போனை கடந்த வாரம் அறிமுகம் செய்ததுள்ளது.

|

நோக்கியா பிராண்ட் மொபைல்களை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி குளோபல் நிறுவனமானது, அதன் நோக்கியா எக்ஸ்6 ஸ்மார்ட்போனை கடந்த வாரம் அறிமுகம் செய்ததுள்ளது. வடிவமைப்பு, கேமரா மற்றும் டிஸ்பிளேவை பார்க்கும்போதே ஒரு ஹை-எண்ட் ஸ்மார்ட்போன் போன்று காட்சியளிக்கும் நோக்கியா எக்ஸ்6 ஆனது மிட்-ரேன்ஜ் விலை பிரிவின் கீழ் அறிமுகம் ஆகியுள்ளது தான் ஹை-லைட்.!

ரெட்மீ நோட் 5 ப்ரோ VS நோக்கியா எக்ஸ்6: இரண்டில் எதை நம்பி வாங்கலாம்.?

அதிகாரபூர்வமான வெளியீட்டு விலையின் படி, நோக்கியா எக்ஸ்6 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 32 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு மாடல் ஆனது ரூ.13,800/-க்கும், 4 ஜிபி ரேம் + 32 ஜிபி சேமிப்பு மாடல் ஆனது ரூ.16,000/-க்கும் மற்றும் இறுதி மாறுபாடு ஆன 6 ஜிபி ரேம் + 64 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு மாடல் ஆனது ரூ.18,100/-க்கும் அறிமுகமாகி உள்ளது. இதை நம்பி வாங்கலாமா என்பது தான் இங்கு எழும் ஒரே கேள்வி.! வாங்கலாம் என்கிற பதிலை நியாயப்படுத்தும் 3 காரணங்கள் இதோ.!

டிசைன் மற்றும் டிஸ்பிளே :

டிசைன் மற்றும் டிஸ்பிளே :

நோக்கியா எக்ஸ் 6 ஆனது, கண்ணாடி பூச்சு கூடிய கொரில்லா கிளாஸ் 3 உடன் இணைந்த ஒரு பிரீமியம் பூச்சு கொண்டுள்ளது. இது 18: 9 என்கிற அளவிலான திரை விகிதத்தை கொண்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பில் இன்னும் அழகு சேர்கிறது.

5.8 அங்குல டிஸ்பிளே கொண்டுள்ள சியோமி நிறுவனத்தின் ரெட்மீ நோட் 5 ப்ரோ உடன் ஒப்பிடும் பொது, நோக்கியா எக்ஸ் 6 5.99 அங்குல என்கிற சற்று சற்று உயரமான டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் ரெட்மீ நோட் 5 ஆனது, இன்னமும் ஒரு பழங்கால வடிவமைப்பை தான் கொண்டுள்ளது. ஆனால், நோக்கியா எக்ஸ் 6 அப்படி இல்லை. இது ஐபோன் எக்ஸ் போன்றே நாட்ச் வடிவமைப்பை கொண்டுள்ளது.

வன்பொருள் மற்றும் மென்பொருள்

வன்பொருள் மற்றும் மென்பொருள்

ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனும் சரி, நோக்கியா எக்ஸ் 6 ஸ்மார்ட்போனும் சரி, இரண்டுமே ஸ்னாப்டிராகன் 636 செயலி கொண்டு தான் இயங்குகின்றன. ஆக இந்த இரண்டுமே மிகப்பெரிய செயல்திறன் திறனை பேக் செய்து பயனர்களுக்கு விரைவான மற்றும் திறமையான செயல்திறனை வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதற்கு அடுத்தபடியான செயல்பாட்டை வழங்கும் திறன் எதற்கு உள்ளது என்பது தான் இங்கு எழும் கேள்வி.?

அது நோக்கியா எக்ஸ் 6 செய்யும். ஏனெனில், சியோமி ரெட்மீ நோட் 5 ப்ரோ ஆனது, ஆண்ட்ராய்டு நௌ வ்கட் அடிப்படையிலான நிறுவனத்தின் மியூஐ ஸ்கின் கொண்டு இயங்க, மறுகையில் உள்ள நோக்கியா எக்ஸ் ஆனது ஸ்மார்ட் ஸ்டார்க் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அனுபவத்துடன் வருகிறது. இந்தியாவில் வெளியாகும் பட்சத்தில், நோக்கியா எக்ஸ் 6 ஆனது மாதாந்திர பாதுகாப்பு மேம்படுத்தல்கள் மற்றும் சமீபத்திய அண்ட்ராய்டு பி உத்தரவாதத்துடன் கூடிய ஒரு ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனாக திகழும் என்று அர்த்தம்.

கேமராக்கள்.!

கேமராக்கள்.!

நோக்கியா எக்ஸ் 6 ஆனது ஒரு இரட்டை கேமரா அமைப்பை கொண்டுள்ளது. அதாவது 16 எம்பி என்கிற பிரதான சென்சார் மற்றும் 5 எம்பி என்கிற இரண்டாம் நிலை சென்சாரை கொண்டுள்ளது. இது போக்கே விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் உடன், ஐஎஸ்ஓ கையேடு அமைப்புகள், வைட் பேலன்ஸ் அப்பெர்ஷர் போன்ற ப்ரொபெஷனல் அம்சங்களை தன்னுள் கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்பக்கத்தை பொறுத்தவரை, ஏஐ மேம்பாடுகள் கொண்ட ஒரு 16 எம்பி சென்சார் உள்ளது. மறுகையில் உள்ள ரெட்மீ நோட் 5 ப்ரோ ஆனதும் 12 எம்பி + 5 எம்பி என்கிற இரட்டை பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது. உடன் எல்இடி ப்ளாஷ் கொண்ட 20 எம்பி செல்பீ கேமராவும் கொண்டுள்ளது. ஒப்பீட்டில் நோக்கியா எக்ஸ் 6 முன்னேற்றம் காணும் என்பது வெளிப்படை.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
நோக்கியா எக்ஸ்6-ன் முழுமையான அம்சங்கள்:

நோக்கியா எக்ஸ்6-ன் முழுமையான அம்சங்கள்:

5.8 அங்குல FHD+ (1080 x 2280 பிக்சல்) டிஸ்பிளே
19: 9 என்கிற அளவிலான காட்சி விகிதம்
2.5 டி கர்வ்டு கிளாஸ் அமைப்பு

க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 636 SoC சிப்செட்
ஆக்டா-கோர் செயலி
மைக்ரோ எஸ்டி அட்டை விரிவாக்கம்
6 ஜிபி / 4 ஜிபி ரேம்
32 ஜிபி / 64 ஜிபி

எச்டிஆர் மற்றும் பொக்கே மோட்
16 எம்பி + 5 எம்பி ரியர் கேமரா
ஒரு 16 எம்பி செல்பீ கேமரா
பேஸ் அன்லாக் அம்ச
பொத்தீ அம்சம்

இரட்டை சிம் ஆதரவு
4ஜி வோல்ட்
வைஃபை
ப்ளுடூத் வி5.0
ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
3.5 மிமீ ஆடியோ ஜாக்
யூஎஸ்பி டைப்-சி போர்ட்
க்விக் சார்ஜ் 3.0 பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம்

நீக்கமுடியாத லி-அயன் 3060mAh பேட்டரி
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ ஓஎஸ்

Best Mobiles in India

English summary
Nokia X6 to Give a Tough Time to Snapdragon 636 Powered Devices in India. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X