ஏப்ரல் 27: சியோமி மி 6எக்ஸ் சாதனத்திற்கு போட்டியாக களமிறங்கும் நோக்கியா எக்ஸ்6.!
இக்கருவி 5.8-இன்ச் டிஸ்பிளே மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் வெளிவந்துள்ளது.
தொடர்ந்து சியோமி மற்றும் நோக்கியா நிறுவனத்திற்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது, அதன்படி சியோமி மி 6எக்ஸ் சாதனத்திற்கு போட்டியாக வரும் ஏப்ரல் 27-ம் தேதி நோக்கியா எக்ஸ்6 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் அதிநவீன மென்பொருள் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த நோக்கியா எக்ஸ்6 ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
நோக்கியா எக்ஸ்6 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பம் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவருகிறது. மேலும் கைரேகை சென்சார் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

பெசல்-லெஸ்:
நோக்கியா எக்ஸ்6 ஆனது பெசல்-லெஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆப்பிள் ஐபோன் டிஸ்பிளே வடிவமைப் போன்று இந்த நோக்கியா எக்ஸ்6 ஸ்மார்ட்போன் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக இக்கருவி 5.8-இன்ச் டிஸ்பிளே மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் வெளிவந்துள்ளது.

மீடியாடெக்:
விரைவில் வெளிவரும் நோக்கியா எக்ஸ்6 சாதனம் மீடியாடெக் ஹெலியோ பி60 அல்லது ஸ்னாப்டிராகன் 636 எஸ்ஒசி சிப்செட்
அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

சேமிப்பு:
பொதுவாக நோக்கியா ஸ்மார்ட்போன்களில் மெமரி வசதி மிக அருமையாக இருக்கும், அதன்படி நோக்கியா எக்ஸ்6 சாதனத்தில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/12ஜிபி மெமரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் மெமரி நீட்டிப்பு ஆதரவு இடம்பெற்றுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு:
நோக்கியா எக்ஸ்6 ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த கேமராக்கள் இடம்பெற்றுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா 12மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக சிறந்த செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இக்கருவி வெளிவரும்.


பேட்டரி:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. மேலும் நோக்கியா எக்ஸ்6 ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

விலை:
நோக்கியா எக்ஸ்6 ஸ்மார்ட்போனின் விலை சற்று உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு விரைவில் வெளிவரும் சியோமி மி 6எக்ஸ் சாதனத்திற்கு சவால்விடும் வகையில் இந்த நோக்கியா எக்ஸ்6 ஸ்மார்ட்போன் வெளிவரும்.


Click it and Unblock the Notifications