Home
Mobile

ரூ.8,290/-விலையில் அறிமுகமாகும் மிரட்டலான நோக்கியா எக்ஸ்5.!

இந்த சாதனத்தில் 13எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் வீடியோ கேம் மற்றும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் ஆனது வெளிவரும்.

By Prakash S

சாம்சங் நிறுவனத்திற்கு போட்டியா தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன்களை எச்எம்டி குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்தவண்ணம் உள்ளது. அதன்படி பட்ஜெட் விலையில் நோக்கியா எக்ஸ்5 ஸ்மார்ட்போன் மாடலை வரும் ஜூலை 11-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம்.

ரூ.8,290/-விலையில் அறிமுகமாகும் மிரட்டலான நோக்கியா எக்ஸ்5.!

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் நோக்கியா எக்ஸ்5 ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் மற்ற சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

நோக்கியா எக்ஸ்5:

நோக்கியா எக்ஸ்5:

நோக்கியா எக்ஸ்5 பொறுத்தவரை 5.86-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1520 x 720
பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

சேமிப்பு:

சேமிப்பு:

மற்ற ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றுள்ள அதே சேமிப்பு வகையை தான் கொண்டுள்ளது நோக்கியா எக்ஸ்5, அதன்படி 3ஜிபி/4ஜிபி ரேம்
மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 128ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஸ்னாப்டிராகன் 845:

ஸ்னாப்டிராகன் 845:

நோக்கியா எக்ஸ்5 ஆனது 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது,
அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0ஒரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.மேலும் இந்த
ஸ்மார்ட்போனில் உள்ள டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:

கேமரா:

இந்த சாதனத்தில் 13எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் வீடியோ கேம் மற்றும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் ஆனது வெளிவரும். மேலும் ஐபோன் எக்ஸ் சாதனத்தின் வடிவமைப்பைக்
கொண்டுள்ளது இந்த அட்டகசமான நோக்கியா எக்ஸ்5 ஸ்மார்ட்போன்.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 விலை:

விலை:

நோக்கியா எக்ஸ்5 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 3ஜிபி கொண்ட
இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,290-ஆக உள்ளது. அதேபோன்று 4ஜிபி கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,360-ஆக
உள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia X5 renders leaked ahead of launch on July 11: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X