ஜூலை 18: 5.86-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் நோக்கியா எக்ஸ்5 அறிமுகம் .!
மற்ற ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றுள்ள அதே சேமிப்பு வகையை தான் கொண்டுள்ளது நோக்கியா எக்ஸ்5, அதன்படி 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம்.
எச்எம்டி குளோபல் நிறுவனம் இதற்குமுன்பு ஜூலை 11-ம் தேதி நோக்கியா எக்ஸ் 5 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய தயாராக இருந்தது, ஆனால் சில காரணங்களால் எக்ஸ் 5 ஸ்மார்ட்போனின் அறிமுகம் தள்ளிவைக்கப்பட்டது. மேலும் இப்போது அந்நிறுவனம் புதிய அறிவிப்பை கொடுத்துள்ளது, அதன்படி நாளை (ஜூலை 18) காலை 11.30 அளவில் நோக்கியா எக்ஸ்5 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பதால் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை
உருவாக்கியுள்ளது.

நோக்கியா எக்ஸ்5:
நோக்கியா எக்ஸ்5 பொறுத்தவரை 5.86-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக சிறந்த
பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

சேமிப்பு:
மற்ற ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றுள்ள அதே சேமிப்பு வகையை தான் கொண்டுள்ளது நோக்கியா எக்ஸ்5, அதன்படி 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
கூடுதலாக 128ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஸ்னாப்டிராகன் 845:
நோக்கியா எக்ஸ்5 ஆனது 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது,
அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0ஒரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.மேலும் இந்த
ஸ்மார்ட்போனில் உள்ள டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:
இந்த சாதனத்தில் 13எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் வீடியோ கேம் மற்றும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் ஆனது வெளிவரும். மேலும் ஐபோன் எக்ஸ் சாதனத்தின் வடிவமைப்பைக்
கொண்டுள்ளது இந்த அட்டகசமான நோக்கியா எக்ஸ்5 ஸ்மார்ட்போன்.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

விலை:
நோக்கியா எக்ஸ்5 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 3ஜிபி கொண்ட
இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,290-ஆக உள்ளது. அதேபோன்று 4ஜிபி கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,360-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications