நோக்கியா X5 (எ) நோக்கியா 5.1 ப்ளஸ்-ன் முழு அம்சங்களும் வெளியானது.!
கடந்த சில வாரங்களாக, நோக்கியா 5.1 பிளஸ் என்ற மர்மமான நோக்கியா ஸ்மார்ட்போன் ஆனது இணையத்தில் பல சுற்றுகளை சந்தித்து வருகிறது.
கடந்த சில வாரங்களாக, நோக்கியா 5.1 பிளஸ் என்ற மர்மமான நோக்கியா ஸ்மார்ட்போன் ஆனது இணையத்தில் பல சுற்றுகளை சந்தித்து வருகிறது. முதலில், சிஏடி ரெண்டர்ஸ் வழியாக லீக்ஸ் ஆனா நோக்கியா 5.1 பிளஸ் ஆனது அண்மையில் வெளியிடப்பட்ட நோக்கியா X6 ஸ்மார்ட்போனின் உலக பதிப்பு என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது இதுவொரு தனி ஸ்மார்ட்போன் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது இந்த ஸ்மார்ட்போன் சீன கட்டுப்பாட்டு தளமான TENAA வலைத்தளத்தை கடந்துவிட்டது. உடன் அதன் வழியாக ஸ்மார்ட்போனின் மமொத்த அம்சங்கள் சார்ந்த தகவலும் வெளிப்பட்டுள்ளது. ஆக மொத்தம் நோக்கியா 5.1 பிளஸ் ஆனது நோக்கியா எக்ஸ் 6-ன் உலகளாவிய பதிப்பாக இருக்காது, அதற்கு பதிலாக நோக்கியா X5 என்கிற பெயரில் சில சந்தைகளை எட்டும் என்பது உறுதியாகியுள்ளது.

நோக்கியா எக்ஸ்6-க்கு ஒத்ததாக உள்ளது.!
கூறப்படும் நோக்கியா X5-ன் அம்சங்கள் ஆனது முன்னர் வெளியான நோக்கியா எக்ஸ்6-ன் அம்சங்களுக்கு அருகில் இல்லை என்றாலும் கூட ஒட்டுமொத்த வடிவமைப்பில், நோக்கியா எக்ஸ்6-க்கு ஒத்ததாக உள்ளது, டிஸ்பிளே உட்பட. மாடல் எண் TA-1109 என்கிற பெயரின் கீழ் காணப்பட்டுள்ள வரவிருக்கும் இந்த நோக்கியா ஸ்மார்ட்போனின் அம்சங்களை பற்றி விரிவாக காணலாம்.

ப்ளூ, ஒயிட் மற்றும் பிளாக்.!
முன்பக்கத்தை பொறுத்தவரை, நோக்கியா X5 அல்லது நோக்கியா 5.1 பிளஸ் ஆணையு 720 x 1520 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.86 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டு இருக்கும். இந்த அளவிலான தீர்மானம் ஆனது ஒரு 19: 9 என்ற அளவிலான திரை விகிதத்தை இயக்கும் என்பது வெளிப்படை. அளவீட்டில் 8 மிமீ தடிமனும், 160 கிராம் எடையும் கொண்டு உள்ளது. மொத்தம் மூன்று வண்ண விருப்பங்களின் கீழ் - ப்ளூ, ஒயிட் மற்றும் பிளாக் - தொடங்கப்படும்.

ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஓசி.!
ஒரு 3000mAh பேட்டரி கொண்டு இயங்கும் நோக்கியா X5 ஆனது (TENAA பட்டியலின் படி) ஒரு 2.0 GHz செயலி கொண்டு வருகிறது. இது மீடியாடெக் ஹீலியோ பி23 அல்லது ஹீலியோ பி60 கொண்டு இணைக்கப்படலாம் என்று வதந்திகள் பரிந்துரைக்கின்றன. மேலும், இந்த ஸ்மார்ட்போன் ஆனது சில ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஓசி கொண்டு வெளியாகவும் சில சாத்தியக்கூறுகள் உள்ளன. ஆனால் அது சார்ந்த எந்த உறுதிப்பாடும் கிடையாது.

128 ஜிபி வரை விரிவாக்கத்திற்கான மைக்ரோ எஸ்டி.!
3 ஜிபி, 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் விருப்பங்களில் வரும் இந்த ஸ்மார்ட்போனின் உள்ளடக்க சேமிப்பானது 64 ஜிபி வரை மட்டுமே நீட்டிக்கப்படும். அதாவது நோக்கியா X5 ஆனது 3ஜிபி + 32ஜிபி, 4ஜிபி + 64ஜிபி மற்றும் 6ஜிபி + 64ஜிபி என்கிற மெமரி கட்டமைப்புகளில் கிடைக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன. உடன் 128 ஜிபி வரை விரிவாக்கத்திற்கான மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் இருக்கும்.

13 எம்பி ரியர் மற்றும் 8 எம்பி செல்பீ.!
வழக்கம் போல், நோக்கியாவின் இந்த ஸ்மார்ட்போனும் பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ கொண்டு இயங்கும் என பட்டியலிடப்பட்டுள்ளது. நோக்கியா X5- ல் ஒரு 13 எம்பி ரியர் மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா உள்ளது. இதன் பின்புற கேமரா 1080p வீடியோக்களை பதிவு செய்யும் திறனை கொண்டு இருக்கும். மேலும் அதுவொரு CMOS சென்சார் ஆகும். இதன் லென்ஸ்கள் ZEISS ஆல் சான்றளிக்கப்பட்டதா இல்லையா என்பதில் உறுதிப்பாடு இல்லை. நோக்கியா X5-ன் இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் ஆகியவைகள் அடங்கும்.


Click it and Unblock the Notifications