Home
Mobile

ஆபர் விலையில் Nokia X30 5G விற்பனை.. கூடவே இலவச இயர்பட்ஸ் & 33W சார்ஜரை பெற என்ன செய்ய வேண்டும்?

கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகமான நோக்கியா எக்ஸ்30 5ஜி (Nokia X30 5G) ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை இன்று முதல், அதாவது பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் தொடங்கியது. சுவாரசியமாக இந்த ஸ்மார்ட்போனுடன் கம்போர்ட் இயர்பட்ஸ் மற்றும் 33W சார்ஜர் இலவசமாக கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா எக்ஸ்30 5ஜி போனுடன் இலவச இயர்பட்ஸ் & 33W சார்ஜரை பெறுவது எப்படி?

நோக்கியாவின் இந்த லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனானது பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியா (Amazon India) வழியாகவும், நோக்கியா இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான நோக்கியா.காம் (nokia.com) வழியாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆபர் விலையில் Nokia X30 5G ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை ஆரமபம்!

அமேசான் வழியாக நோக்கியா எக்ஸ்30 5ஜி போனை வாங்கினால் 33W நோக்கியா ஃபாஸ்ட் வால் சார்ஜர் மட்டுமே இலவசமாக கிடைக்கும்.

அதுவே நீங்கள் நோக்கியா இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக நோக்கியா எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கினால், ரூ.2,799 மதிப்புள்ள நோக்கியா கம்ஃபோர்ட் இயர்பட்ஸ் மற்றும் ரூ.2,999 மதிப்புள்ள (அதே) 33W சார்ஜர் ஆகிய இரண்டுமே இலவசமாக கிடைக்கும்.

பேங்க் ஆபர்களை பொறுத்தவரை, தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.2,000 என்கிற தள்ளுபடி கிடைக்கும் என்று அமேசான் இந்தியா அறிவித்துள்ளது.

நோக்கியா எக்ஸ்30 5ஜி: விலை மற்றும் ஷிப்பிங் விவரங்கள்

இந்தியாவில் நோக்கியா எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.48,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம், இந்த ஸ்மார்ட்போனின் ப்ரீ-ஆர்டர் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கியது மற்றும் முன்பதிவு செய்தவர்களுக்கு ரூ.6,500 மதிப்புள்ள கூடுதல் சலுகைகளும் கிடைத்தது.

நோக்கியா நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட்போனின் ஷிப்பிங் நாளை முதல், அதாவது பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் தொடங்கும்.

நோக்கியா எக்ஸ்30 5ஜி போனின் அம்சங்கள்

- 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 700 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ், 1080 x 2400 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் உடனான 6.43-இன்ச் ஃபுல் எச்டி+ அமோஎல்இடி டிஸ்ப்ளே

- குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது

- ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (அவுட்-ஆஃப்-பாக்ஸ்) உடன் வருகிறது

- டூயல் ரியர் கேமராக்களை பேக் செய்கிறது. அதில் கார்னிங் கொரில்லா கிளாஸ் டிஎக்ஸ்+ பாதுகாப்புடனான 50எம்பி பிக் பிக்சல் ப்யூர்வியூ ஓஐஎஸ் (PureView OIS) கேமரா + 13எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா உள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை 16எம்பி செல்பீ கேமரா உள்ளது.

- கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை - ப்ளூடூத் வி5.1, இசிம், யூஎஸ்பி டைப்-சி மற்றும் டூயல் பேண்ட் வைஃபை போன்றவைகளை கொண்டுள்ளது.

- ஆடியோவை பொறுத்தவரை, இரண்டு மைக்ரோஃபோன்கள் மற்றும் காற்விண்ட் நாய்ஸ் ரிடெக்ஷன், ஆப்ட்எக்ஸ் எச்டி (aptX HD), ஆப்ட்எக்ஸ் கிளாஸிக் (aptX Classic) மற்றும் ஆப்ட்எக்ஸ் அடாப்டிவ் (aptX Adaptive), ஓஸோ ஸ்பேஷியல் ஆடியோ கேப்சருக்கான ஆதரவுடன்னான ஸ்பீக்கருர் போன்றவைகளை கொண்டுள்ளது.

- கடைசியாக 33W சார்ஜருக்கான ஆதரவுடன் 4,200mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Nokia X30 5G Sale Starts From Today How to get Free 33W Charger and Earbuds While buying This Phone
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X