Home
Mobile

5G போன் வாங்க ஆசையா? வெயிட் பண்ணுங்க: வருது தரமான நோக்கியா போன்.!

எச்எம்டி குளோபல் நிறுவனம் சமீபத்தில் தான் Nokia X30 5Gஎனும் ஸ்மார்ட்போனை UK மற்றும் ஐரோப்பா சந்தைகளில் அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தரமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது.

நோக்கியா எக்ஸ்30 5ஜி

நோக்கியா எக்ஸ்30 5ஜி

மேலும் இந்த நோக்கியா எக்ஸ்30 5ஜி போனின் இந்திய அறிமுகம் குறித்து தகவல் வெளிவந்துள்ளது. அதாவது வரும் டிசம்பர் மாதம் இந்தியாவில் நோக்கியா எக்ஸ்3 5ஜி போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

இப்போது நோக்கியா எக்ஸ்30 5ஜி போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இந்த நோக்கியா எக்ஸ்30 5ஜி போன் ஆனது 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 1,080×2,400 பிக்சல்ஸ், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா க்ளாஸ் விக்டஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா போன்.

ஆண்ட்ராய்டு 12

ஆண்ட்ராய்டு 12

குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது. பின்பு ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் இருமையாக
இருக்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த நோக்கியா போன்.

 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா எக்ஸ்30 5ஜி போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் மற்றும் கேமரா வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.

 50எம்பி பிரைமரி கேமரா

50எம்பி பிரைமரி கேமரா

அதாவது நோக்கியா எக்ஸ்30 5ஜி போன் 50எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான நோக்கியா போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா எக்ஸ்30 5ஜி மாடல்.

4200 எம்ஏஎச் பேட்டரி

4200 எம்ஏஎச் பேட்டரி

நோக்கியா எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போனில் 4200 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம்; விளையாட முடியும். அதாவது இந்த போனில் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா போன்.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, எனஎப்சி, ஓடிஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் வி5.1 உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான நோக்கியா எக்ஸ்30 5ஜி மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரூ.40,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Nokia X30 5G is expected to launch in India in December: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X