விரைவில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் Nokia X20.!
இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா எக்ஸ்20 ஸ்மார்ட்போன் மாடல் வரும் ஜூலை 21-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் நாம் எதிர்பார்க்கும் தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என்று அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஸ்னாப்டிராகன் 480 சிப்செட்
நோக்கியா எக்ஸ்20 ஸ்மார்ட்போன் ஆனது 5ஜி ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 சிப்செட் வசதியை கொண்டுள்ளது இந்த அசத்தலான சாதனம். இதுதவிர அட்ரினோ 619 ஜி.பீ.யூ ஆதரவைக் கொண்டுள்ளது நோக்கியா எக்ஸ்20 ஸ்மார்ட்போன். எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த அசத்தலான நோக்கியா எக்ஸ்20 ஸ்மார்ட்போன்.

இந்த நோக்கியா எக்ஸ்20 ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

6.67-இன்ச் எல்சிடி டிஸ்பிளே
நோக்கியா எக்ஸ்20 ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும்1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.

64எம்பி பிரைமரி கேமரா
நோக்கியா எக்ஸ்20 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கம் என்றே
32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய நோக்கியா எக்ஸ்20 ஸ்மார்ட்போன் மாடல்.

4470 எம்ஏஎச் பேட்டரி
நோக்கியா எக்ஸ்20 ஸ்மார்ட்போனில் 4470 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த புதிய நோக்கியா எக்ஸ்20 ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், கைரேகை சென்சார் உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

5ஜி, 4ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5எம்எம் ஆடியோஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த புதிய நோக்கியா எக்ஸ்20 ஸ்மார்ட்போன் வெளிவரும்.


Click it and Unblock the Notifications