ஆப்பிள், சாம்சங், சியோமிக்கு அடுத்து நோக்கியா செய்த 'அந்த' வேலை.. காரணம் எல்லாம் ஒன்று தான்..

|

மொபைல் போன்கள் விற்பனைக்காகச் சந்தைக்கு வந்த நேரத்தில் அதனுடன் மொபைல் சார்ஜர், இயர்போன்ஸ் போன்ற சாதனங்கள் மொபைல் வழங்கப்படும் டப்பாவுடன் சேர்த்தே வழங்கப்பட்டு வந்தது. ஆனால், நாட்கள் நகர-நகர, மொபைல் போனுடன் வழங்கப்பட்டு வந்த ஹெட்போன்ஸ் சாதனம் நிறுத்தப்பட்டது. பின்னர், போன் பாக்சுடன் வெறும் மொபைல் சாதனமும் சார்ஜரும் மட்டும் வழங்கப்பட்டு வந்தது. அதற்கு பின்னர், மொபைல் சாதனத்துடன் வழங்கப்பட்டு வந்த சார்ஜர்களும் நிறுத்தப்பட்டது.

ஆப்பிள், சாம்சங், சியோமிக்கு அடுத்து நோக்கியா செய்த 'அந்த' வேலை..

இந்த வழியை முதல் முதலில் ஆப்பிள் நிறுவனம் தான் துவங்கி வைத்தது. அதன் ஐபோன் சாதனங்களுடன் வழங்கப்பட்டு வந்த சார்ஜர்களை நிறுத்தி வெறும் மொபைல் சாதனத்தை மட்டும் பயனர்களுக்கு வழங்கி வந்தது. அதனைத் தொடர்ந்து சாம்சங் நிறுவனமும் இந்த வழியை பின்பற்றியது. இப்போது இந்த பட்டியலில் நோக்கியா நிறுவனமும் சேர்ந்துள்ளது என்பது பலருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது.

நோக்கியா நிறுவனத்தின் அடுத்த புது வரவு ஸ்மார்ட்போன் மாடலான நோக்கியா எக்ஸ்20 ஸ்மார்ட்போன் சார்ஜர் இன்றி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டு, அடுத்த மாதம் விற்பனைக்கு வருகிறது. மொபைல் சாதனத்துடன் வழங்கப்பட்டு வந்த சார்ஜரை ஏன் நிறுவனம் நிறுத்திவிட்டது என்ற கேள்விக்கு, நோக்கியா நிறுவனமும் ஆப்பிள் கொடுத்த அதே பதிலை வெளியிட்டுள்ளது.

ஆப்பிள், சாம்சங், சியோமிக்கு அடுத்து நோக்கியா செய்த 'அந்த' வேலை..

இந்த நடவடிக்கை முழுமையாக 'சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில்' தான் எடுக்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் கூறியுள்ளது. முன்னதாக ஆப்பிள், சாம்சங் மற்றும் சியோமி நிறுவனங்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களுடன் சார்ஜர் வழங்குதை நிறுத்தியது. இந்த மூன்று நிறுவனங்களும் ஒரே காரணத்தைக் கூறி மொபைலுடன் சார்ஜர் வழங்கப்பட்டதை நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா எக்ஸ்20 மாடலுக்கான வலைப்பக்கத்தில் இந்த ஸ்மார்ட்போன் பிளாஸ்டிக் சார்ஜர் இன்றி விற்பனை செய்யப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் ஸ்மார்ட்போன் வழங்கப்படும் பெட்டி 100 சதவீதம் உரமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இயற்கை முறையில் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஹெச்எம்டி குளோபல் இந்த ஸ்மார்ட்போனை ஏப்ரல் 8 ஆம் தேதி ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia X20 Will Not Ship With Bundled Charger Like Apple Samsung and Xiaomi : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X