நவீன தொழில்நுட்ப டிஸ்ப்ளேவுடன் புதிய நோக்கியா போன்

இந்த புதிய மொபைல் 2.2 இஞ்ச் கியூவிஜிஏ திரை வசதி கொண்டது. 240 X 20 திரை துல்லியத்தையும் வழங்குகிறது. இது சிம்பையான் எஸ்-40 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை கொண்டு இயங்குகிறது. இதில் 32ஜிபி வரை மெமரி ஸ்டோரேஜ் வசதியினை பெற முடியும். இந்த குறைந்த விலையில் இது போன்ற மெமரி வசதி கொண்ட மொபைலை பெறுவது மிகவும் கடினமான ஒன்றாகும்.
இதில் விஜிஏ கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. சிறந்த பொழுது போக்கு அம்சத்தினை வழங்குவதற்காக மீடியா பிளேயர் வசதியும் இதில் உள்ளது. இது ஆடியோ மற்றும் வீடியோ வசதிக்கு சப்போர்ட் செய்கிறது. இந்த புதிய நோக்கியா எக்ஸ்-2-05 மொபைலில் சோஷியல் நெட்வொர்கிங் வசதியும் உள்ளது.
பொதுவாக ரூ.5,000 விலைக்கும் குறைவான மொபைல்களில் இது போன்ற வசதி இருப்பது மிகவும் அரிய விஷயமாகும். அது மட்டும் அல்லாது இந்த மொபைலில் 1.7 நோக்கியா லைஃப் டூல்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மொபைல் அனைவரையும் கவரும் வகையில் சிகப்பு, கறுப்பு, சில்வர் போன்ற நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் 800 எம்ஏஎச் எல்ஐ-அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் 7.4 மணி நேரம் டாக் டைம் வசதியும், 643 மணி நேரம் ஸ்டான்-பை டைம் வசதியும் கிடைக்கிறது. இந்த நோக்கியா எக்ஸ்-2-05 மொபைல் ரூ.3,750 விலையில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications