Home
Mobile

48எம்பி ரியர் கேமராவுடன் அசத்தலான நோக்கியா எக்ஸ்100 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

அமெரிக்காவில் நோக்கியா எக்ஸ்100 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் தனித்துவமான சிப்செட், பெரிய டிஸ்பிளே என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் நோக்கியா எக்ஸ்100 ஸ்மார்ட்போன் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா எக்ஸ்10

நோக்கியா எக்ஸ்100 ஸ்மார்ட்போன் மாடல் 6.67-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புத்தம் புதிய நோக்கியா எக்ஸ்100 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பெரிய டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளதால்
பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

நோக்கியா எக்ஸ்100

நோக்கியா எக்ஸ்100 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார்+5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்டபோன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் தனித்துவமான கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா எக்ஸ்100 ஸ்மார்ட்போன் மாடல்.

100 ஸ்மார்ட்போனின் பின்புறம்

நோக்கியா எக்ஸ்100 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார்+5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீகேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்டபோன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் தனித்துவமான கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா எக்ஸ்100 ஸ்மார்ட்போன் மாடல்.

ல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க

நோக்கியா எக்ஸ்100 ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. இதுதவிர மைக்ரோ எஸ்டி கார்ட் வசதியும் இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

நோக்கியா எக்ஸ்100

நோக்கியா எக்ஸ்100 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 5ஜி பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் கேமிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்தபுதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் விரைவில் இந்த சாதனத்திற்கு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

 4470 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது

நோக்கியா எக்ஸ்100 ஸ்மார்ட்போனில் 4470 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய நோக்கியா எக்ஸ்100 ஸ்மார்ட்போன்.

டூத் 5.1, என்எப்சி, ம

இதுதவிர வைஃபை, புளூடூத் 5.1, என்எப்சி, மற்றும் 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய நோக்கியா எக்ஸ்100 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த சாதனத்தின் விலை USD 252 (இந்திய மதிப்பில் ரூ.18,600) ஆக உள்ளது.

நோக்கியா டி20 டேப்லெட்

நோக்கியா டி20 டேப்லெட்

மேலும் சமீபத்தில் இந்நிறுவனம் அறிமுகம் செய்த நோக்கியா டி20 டேப்லெட் மாடலின் அம்சங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.நோக்கியா டி20 டேப்லெட் ஆனது 10.4 இன்ச் 2 கே எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2,000 X 1,200 பிக்சல் தீர்மானம்,
400 நிட்ஸ் ப்ரைட்னஸ், 5:3 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த
டேப்லெட்டில் டிஸ்பிளேவை சுற்றி மெலிதான பெஸல்கள்உள்ளது.

நோக்கியா டி20 டேப்லெ

நோக்கியா டி20 டேப்லெட் மாடல் யூனிசாக் டி 610 ப்ராசஸர் மற்றும் மாலி-ஜி 52 ஜிபியு ஆதரவைக் கொண்டு வெளிவரும். பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த நோக்கியா டி20 டேப்லெட் மாடல். எனவே இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் என்றுதான் கூறவேண்டும். பின்பு ஆப் வசதி மற்றும் வீடியோ உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு தகுந்தபடி இந்த
சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. நோக்கியா டி20 டேப்லெட் மாடல் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/25ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது.

நோக்கியா டி20 டேப்லெட்

நோக்கியா டி20 டேப்லெட் மாடலின் பின்புறம் ஆட்டோ-ஃபோகஸ் மற்றும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவுடன் 8எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. எனவே துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட். மேலும் தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பு, IP52 மதிப்பீடு போன்ற சிறப்பான பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய நோக்கியா டி20 டேப்லெட். இந்த நோக்கியா டேப்லெட் மாடலில் 8200 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்,பவர் அம்ப்ளிஃபையர், டூயல் மைக்ரோஃபோன்கள், ஓசோ ஆடியோ மற்றும் பிளேபேக், எஃப்எம் ரேடியோ உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Nokia X100 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X