நோக்கியா "இந்த வேலையை" பார்க்கும் என்று ஆப்பிள் கனவிலும் நினைத்திருக்காது.!

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எக்ஸ் வெளியான நாளில் இருந்தே, எக்ஸ் (X) என்கிற குறியீட்டு பெயருக்கு ஒரு தனி மவுசு உண்டானது.

|

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எக்ஸ் வெளியான நாளில் இருந்தே, எக்ஸ் (X) என்கிற குறியீட்டு பெயருக்கு ஒரு தனி மவுசு உண்டானது. அது எக்ஸ் (X) அல்ல ரோமன் லெட்டர் (X) என்கிற பஞ்சாயத்தையெல்லாம் ஓரங்கட்டுங்கள். ஏனெனில், ஐபோன் எக்ஸ்-ஐ தொடர்ந்து வெளியாகும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களின் பெயர் எக்ஸ் தான். ஆக நாமும் "எக்ஸ்" என்பதோடு ஒட்டிக்கொள்வோம்.

நோக்கியா இந்த வேலையை பார்க்குமென்று ஆப்பிள் கனவிலும் நினைத்திருக்காது!

ஒருபக்கம், பெயரை காப்பி அடித்து ஏகப்பட்ட எக்ஸ் ஸ்மார்ட்போன்கள் வந்துவிட்டது. மறுபக்கம், ஆப்பிள் ஐபோன் எக்ஸ்-ன் வடிவமைப்பை காப்பி அடித்து ஏகப்பட்ட ஸ்மார்ட்போன்கள் வெளியாகி விட்டது. இந்த பட்டியலில் இணையும் நோக்கியா நிறுவனம், மேற்குறிப்பிட்ட ஒன்றை மட்டும் செய்யாமல், இரண்டையுமே செய்துள்ளது.

நோக்கியாவின் அடுத்த ஸ்மார்ட்போனின் பெயர்.?

நோக்கியாவின் அடுத்த ஸ்மார்ட்போனின் பெயர்.?

ஆம். நீங்கள் நினைப்பது சரி தான். இன்னும் சில தினங்களில் வெளியாகும் நோக்கியாவின் அடுத்த ஸ்மார்ட்போனின் பெயர் - நோக்கியா எக்ஸ் மற்றும் அது ஐபோன் எக்ஸ்-ன் அதே வடிவமைப்பை கொண்டுள்ளது. சமீபத்தில் டிஏ -1099 என்ற பெயரில் சீன சரிபார்ப்பு வலைத்தளமான TENAA வில் காணப்பட்டுள்ள நோக்கியா எக்ஸ் காணப்பட்டுள்ளது.

டிஸ்பிளேவின் அளவு என்ன.?

டிஸ்பிளேவின் அளவு என்ன.?

வெளியான பட்டியலில், நோக்கியா எஸ் ஸ்மார்ட்போனின் சில பிரதான அம்சங்களும் வெளிப்பட்டுள்ளது. அதன்படி, நோக்கியா எக்ஸ் ஆனது 147.2 x 70.98 x 7.99 மிமீ என்கிற அளவீடுகளையும் மற்றும் 150 கிராம் அளவிலான எடையும் கொண்டுள்ளது. இதன் அர்த்தம் நோக்கியா எக்ஸ் ஆனது 5.8 இன்ச் புல் எச்டி ப்ளஸ் டிஸ்பிளேவை கொண்டிருக்ம்.

ரேம் மற்றும் சேமிப்பு பற்றிய விவரங்கள்.!

ரேம் மற்றும் சேமிப்பு பற்றிய விவரங்கள்.!

2280 x 1080 என்கிற அளவிலான பிக்சல்கள் தீர்மானம் மற்றும் ஐபோன் எக்ஸ்-ல் காணப்படுவது போன்றே மேல்பக்கத்தில் ஒரு சிறிய நாட்ச் வடிவமைப்பு ஆகியவைகளை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு 1.8GHz ஆக்டாகோர் உடனான 3 ஜிபி / 4 ஜிபி / 6 ஜிபி ரேம் கொண்டு இயங்கும். உள்ளடக்க சேமிப்பை பொறுத்தவரை 32 ஜிபி / 64 ஜிபி வேரியண்ட்களில் வெளியாகும். இதன் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் மற்றும் அதன் மெமரி நீட்டிப்பு ஆதரவு போன்ற விவரங்களை பற்றிய எந்த வார்த்தையும் இல்லை.

இரண்டு 16 மெகாபிக்சல் லென்ஸ்.!

இரண்டு 16 மெகாபிக்சல் லென்ஸ்.!

கேமரா துறையை பொறுத்தவரை, கார்ல் ஜெய்ஸ் பிராண்டிங் இல்லாத, டூயல் கேமடா அமைப்பொன்று இடம்பெற்றுள்ளது. அது இரண்டு 16 மெகாபிக்சல் லென்ஸ்களாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, செல்பீக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான ஒரு 16 எம்பி சென்சார் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)
3,000mAh பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது.!

3,000mAh பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது.!

நிறுவனத்தின் பாரம்பரியம் மிக்க பேட்டரித்திறனில் எந்த குறையும் இருக்காது. ஏனெனில் நோக்கியா எக்ஸ்-ல் ஒரு 3,000mAh பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. இது பாஸ்ட் சார்ஜ் செய்யும் ஆதரவு கொண்டிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது சமீபத்திய ஆண்ட்ராய்ட் 8.1.0 ஓரியோ கொண்டு இயங்கும். மொத்தம் நான்கு வண்ண மாதிரிகளில் - வெள்ளை, கருப்பு, நீலம் மற்றும் வெள்ளி - வெளியாகும் நோக்கியா எக்ஸ் ஆனது, வருகிற மே 16-ஆம் தேதி அன்று சீனாவில் அறிமுகமாகவுள்ளது. இதன் இந்திய வெளியீடு பற்றிய வார்த்தைகள் ஏதுமில்லை.

Best Mobiles in India

English summary
Nokia X reveals itself at TENAA, goes all in for the notch. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X