லட்ச ருபாய் ஐபோன் X-க்கு வெறும் ரூ.16,100/-ல் பதிலடி கொடுக்கும் நோக்கியா X.!

மொத்தம் மூன்று - 3 ஜிபி ரேம், 4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம் - மாடல்களில் வெளியாகும்

|

நோக்கியா பிராண்ட் போன்களை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி குளோபல் நிறுவனமானது, வருகிற மே 16 ஆம் தேதி அன்று, நோக்கியா எக்ஸ் என்கிற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த அதிகாரபூர்வமான அறிவிப்புக்கு முன்னரே, நோக்கியா எக்ஸ் பற்றிய பல லீக்ஸ் தகவல்கள் ஆன்லைனில் வெளியானது. அன்றில் இருந்து, இன்று வரையிலாக நோக்கியா எக்ஸ்-ன் அம்சங்கள் என்னவாக இருக்கும்.? விலை புள்ளி எந்த அளவை எட்டும் என்கிற கேள்விகள் மேலோங்கின என்பதும் குறிப்பிடத்தக்கது.

லட்ச ருபாய் ஐபோன் X-க்கு வெறும் ரூ.16,100/-ல் பதிலடி; நோக்கியா X.!

அத்தனை கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் வண்ணம், இன்று நோக்கியா எக்ஸ் ஸ்மார்ட்போனின் ஹை-ரெசெல்யூஷன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. உடன் நோக்கியா எக்ஸ்-ன் நம்பமுடியாத விலை நிர்ணயமும் வெளியாகியுள்ளது.

பின்புற பேனலில் இரட்டை கேமரா அமைப்பு.!

பின்புற பேனலில் இரட்டை கேமரா அமைப்பு.!

வெளியான புகைப்படங்கள், நோக்கிய எக்ஸ்-ன் முழு வடிவமைப்பை வெளிப்படுத்துகின்றன. மேலும் அதன் ஒரு கண்ணாடி உடலை காட்சிப்படுத்தியுள்ளன. குறிப்பாக அதன் பின்புற பேனலில் இரட்டை கேமரா அமைப்பு இருப்பது, முன்னர் வெளியான லீக்ஸ் தகவல்களை உண்மையாக்கியுள்ளது. அறிமுகத்தை தொடர்ந்து, நேற்று (வியாழக்கிழமை) சீன சான்றிதழ் வலைத்தளம் TENAA-வில் காணப்பட்டுள்ளது.

5.80 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே.!

5.80 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே.!

சான்றிதழ் வலைத்தளத்தின் படி, நோக்கியா எக்ஸ் ஆனது முழுமையான பெஸல்லெஸ் டிஸ்பிளேவை கொண்டிருக்கும். அதாவது (எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்) நோக்கியா எக்ஸ், ஒரு 5.80 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும். அது 2280x1080 என்கிற அளவிலான பிக்சல்கள் மற்றும் 19: 9 என்கிற அளவிலான திரை விகிதம் கொண்டிருக்கும்.

க்வால்காம் ஸ்னாப்டிராகன் 636 செயலி.!

க்வால்காம் ஸ்னாப்டிராகன் 636 செயலி.!

வன்பொருள் அம்சங்களை பொறுத்தவரை, நோக்கியா எக்ஸ் (2018) ஆனது 1.8 GHz உடனான ஆக்டா-கோர் செயலி மூலம் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. முன்னர் வெளியானதொரு லீக்ஸ் தகவலின்படி, இந்த ஸ்மார்ட்போன், க்வால்காம் ஸ்னாப்டிராகன் 636 செயலி மூலம் ஆதரிக்கப்படலாம். நோக்கியா எக்ஸ் ஆனது மொத்தம் மூன்று வண்ண மாறுபாடுகளில் - நீலம், கருப்பு மற்றும் வெள்ளை - வெளியாகும் என்றும் தெரியவந்துள்ளது.

3 ஜிபி ரேம், 4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம்.!

3 ஜிபி ரேம், 4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம்.!

மொத்தம் மூன்று - 3 ஜிபி ரேம், 4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம் - மாடல்களில் வெளியாகும் நோக்கிய எக்ஸ்-ன் உள்ளடக்க சேமிப்பானது 32 ஜிபி அல்லது 64 ஜிபி உடன் இணைக்கப்பட்டு இருக்கலாம். உடன் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு திறனும் இருக்கும்.

இரண்டு 16 மெகாபிக்சல் சென்சார்கள்.!

இரண்டு 16 மெகாபிக்சல் சென்சார்கள்.!

வெளியான TENNA பட்டியலில், நோக்கியா எக்ஸ் ஸ்மார்ட்போனின் கேமரா விவரங்கள் வெளியாகவில்லை. இருந்தாலும் கூட, பின்புறத்தில் கார்ல் ஜெயஸ் லென்ஸ் உடனான இரண்டு 16 மெகாபிக்சல் சென்சார்கள் இடம்பெறலாம், முன்பக்கத்தை பொறுத்தவரை, எந்த விவரங்களும் இதுவரை வெளியாகவில்லை. ஆண்ட்ராய்டு 8.1.0 ஓரியோ மூலம் இயங்கும் நோக்கியா எக்ஸ், ஒரு 3000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும்.

சுமார் ரூ.16,900/- என்கிற விலை நிர்ணயத்தை பெறலாம்.!

சுமார் ரூ.16,900/- என்கிற விலை நிர்ணயத்தை பெறலாம்.!

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, நோக்கியா எக்ஸ் ஆனது நம்பமுடியாத வண்ணம், மிட்ரேன்ஜ் பிரிவின் கீழ் களமிறங்க உள்ளது. ஆம், இது சுமார் ரூ.16,900/- என்கிற விலை நிர்ணயத்தை பெறலாம். நோக்கியா எக்ஸ் ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் பற்றிய எந்த வார்த்தையும் இல்லை.

Best Mobiles in India

English summary
Nokia X price leaked ahead of May 16 launch. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X