6ஜிபி ரேம் உடன் நோக்கியா X; 4ஜிபி ரேம் உடன் நோக்கியா 6X; நாளை முதல்.!

நேற்றுவரை லீக்ஸ் தகவலாக வெளியான நோக்கியா எக்ஸ்-ன் முதல் அதிகாரபூர்வமான டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

|

நோக்கியா பிராண்ட் மொபைல்களை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி குளோபல் நிறுவனமானது, காலத்திற்கும் மக்களின் ரசனைக்கும் ஏற்ற, புத்தம் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து எதிரிகளுக்கு கிலி கிளப்பும் மறுகையில், நோக்கியாவின் கிளாஸிக் மொபைல்களை கையில் எடுத்து (குறிப்பாக பெயர்கள்) அதனுள் சமீபத்திய வன்பொருள் அம்சங்களை புகுத்தி அறிமுகப்படுத்தும் ஒரு பழக்கத்தையும் உருவாக்கியுள்ளது.

6ஜிபி ரேம் உடன் நோக்கியா X; 4ஜிபி ரேம் உடன் நோக்கியா 6X; நாளை முதல்.!

அதற்கு சமீபத்தில் வெளியான நோக்கியாவின் பிரீமியம் ஸ்மார்ட்போன் ஆன நோக்கியா 8 சிரோக்கோ தொடங்கி பீச்சர் மொபைல்களான நோக்கியா 3310 மற்றும் நோக்கியா 8110 ஆகியவைகளே, ஆகச்சிறந்த சாட்சிகள். அத்தோடு நின்று விடாமல், எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது, நோக்கியாவின் மற்றொரு கிளாஸிக் மொபைல் ஆன நோக்கியா எக்ஸ்-ஐ, நாளை புத்தம் புதிய ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்ய உள்ளது.

நோக்கியா எக்ஸ்-ன் வருகை நாள்.!

நோக்கியா எக்ஸ்-ன் வருகை நாள்.!

நேற்றுவரை லீக்ஸ் தகவலாக வெளியான நோக்கியா எக்ஸ்-ன் முதல் அதிகாரபூர்வமான டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. ஆஃபிஷியல் போஸ்டர் வெளியானாலும் கூட, நாளை சீனாவில் வெளியாகும் நோக்கியா எக்ஸ் ஸ்மாட்ர்ட்போன் பற்றிய எந்த வார்த்தையையும் எச்எம்டி பகிர்ந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெளியான போஸ்டரில் ஸ்மார்ட்போனின் எந்த விவரமும் வெளிபடுத்தப்படவில்லை. ஆனால் (நாளை) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மற்றும் அறிவிப்புகள் வெளியாகும்.?

என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மற்றும் அறிவிப்புகள் வெளியாகும்.?

வெளியான டீஸர் படத்தின் படி, நிகழும் நோக்கியா நிறுவனத்தின் நிகழ்ச்சியானது, ஏப்ரல் 27 ஆம் தேதி தொடங்கி மே 2 ஆம் தேதி வரை நடக்கும். இந்த நிகழ்வில் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மற்றும் அறிவிப்புகள் வெளியாகும் என்பதில் உறுதிப்பாடு இல்லை, இருந்தாலும் டீஸர் படத்தில் நோக்கியா எக்ஸ் என்கிற பெயர் இருப்பதால், அந்த ஸ்மார்ட்போன் நிச்சயமாக அறிவிக்கப்படும் என்று நம்பலாம்.

மற்றொன்று மிட்ரேன்ஜ் பிரிவின் கீழ் களமிறங்கும்.!

மற்றொன்று மிட்ரேன்ஜ் பிரிவின் கீழ் களமிறங்கும்.!

ஒருவேளை, நிகழ்வின் போது வேறு ஒரு ஸ்மார்ட்போன் தொடங்குவதையும் நாம் காணலாம். இணையத்தில் உலாவரும் ஒரு செய்தி ஊடக அறிக்கையின்படி, நோக்கியா எக்ஸ் வரிசையின் கீழ், மொத்தம் இரண்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் ஆகும். அதில் ஒன்று நிலையான நுழைவு-நிலை நோக்கியா எக்ஸ் ஆக இருக்கும், மற்றொன்று மிட்ரேன்ஜ் பிரிவின் கீழ் களமிறங்கும் நோக்கியா எக்ஸ் 6 ஆக இருக்கும்.

நோக்கியா எக்ஸ்6 அம்சங்கள்.!

நோக்கியா எக்ஸ்6 அம்சங்கள்.!

நோக்கியா எக்ஸ்-ன் அம்சங்கள் பற்றிய எந்த வார்த்தையும் வெளியாகவில்லை, ஆனால் நோக்கியா எக்ஸ்6-ன் சில அம்சங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, நோக்கியா எக்ஸ்6 ஆனது 2280 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.8 இன்ச் முழு எச்டி+ டிஸ்ப்ளே கொண்டு வெளியாகும். அதாவது, சமீப காலமாக வெளியாகும் பெரும்பாலான ஸ்மார்ட்போகளை போன்றே பெஸல்லெஸ் வடிவமைப்புடன் கூடிய மேல் பக்க நாட்ச் கொண்டு வெளியாகும்.

இரண்டு 12எம்பி சென்சார்கள் என்கிற டூயல் கேமரா அமைப்பு.!

இரண்டு 12எம்பி சென்சார்கள் என்கிற டூயல் கேமரா அமைப்பு.!

மேலும் நோக்கியா எக்ஸ்6 ஆனது இரண்டு வகைகளில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஸ்னாப்டிராகன் 636 SoC கொண்டு ஒன்று வெளியாக, மற்றொன்று மீடியா டெக் P60 SoC உடன் வெளியாகலாம். பின்புறத்தில் ZEISS லென்ஸுடன் கூடிய இரண்டு 12எம்பி சென்சார்கள் என்கிற டூயல் கேமரா அமைப்பை காண முடிகிறது.

6 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி ரேம்.!

6 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி ரேம்.!

வெளியான தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில், நோக்கியா எக்ஸ்6-ன் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் கொண்ட மாடல் ஆனது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பி கொண்டு வெளியாகும். மறுகையில் உள்ள மீடியா டெக் 4சிப்செட் கொண்டு வெளியாகும் மாடல் ஆனது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பை கொண்டு வெளியாகும். இருப்பினும், இரண்டு மாடல்களுமே ஒரே மாதிரியான வடிவமைப்பையும், டிஸ்பிளேவையும் தான் கொண்டிருக்கும்.

Best online converter | Audio, Videos, PDF, Document etc.. (Tamil)
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ.!

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ.!

மற்ற நோக்கியா ஸ்மார்ட்ப்களைப் போல, நோக்கியா எக்ஸ்6 ஆனது ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ (பெட்டிக்கு வெளியே) கொண்டு இயங்கும். இது தவிர பேட்டரி, செல்பீ கேமரா போன்றே இதர பிரதான அம்சங்கள் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை. முழுமையான அம்சங்களை பற்றி அறிய நாளை தொடங்கும் உத்தியோகபூர்வமான நிகழ்வு வரை நாம் பொறுத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

Best Mobiles in India

English summary
Nokia X Official Teaser is Out, Launching Tomorrow. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X