6ஜிபி ரேம், 5வாட் சார்ஜர் உடன் நியாமான விலையில் நோக்கியா எக்ஸ்.!

ஸ்மார்ட்போன் உலகின் இன்றைய "ஹாட் டாபிக்" நோக்கியா எக்ஸ் ஸ்மார்ட்போன் தான்.

|

ஸ்மார்ட்போன் உலகின் இன்றைய "ஹாட் டாபிக்" நோக்கியா எக்ஸ் ஸ்மார்ட்போன் தான். நோக்கியா பிராண்ட் மொபைல்களை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி குளோபல், கடந்த சில ஆண்டுகளில் பல நோக்கியா-பிராண்டட் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி விட்டது. அதில் நோக்கியா 3310 (2017) போன்ற பீச்சர் மொபைல்களும் அடங்கும், நோக்கியா 8 சிரோக்கோ போன்ற ஹை-எண்ட் பிரீமியம் ஸ்மார்ட்போன்களும் அடங்கும்.

இதனால் இந்தியாவில் துவண்டு போய் கிடந்த நோக்கியாவின் சந்தை, ஆக்ரோஷமான வளர்ச்சியை அடைந்தது. கடந்த ஏப் 16-ஆம் தேதி வெளியான ஒரு நோக்கியா எக்ஸ் ஸ்மார்ட்போனின் லீக்ஸ் புகைப்படமானது நோக்கியாவின் வளர்ச்சியை இன்னும் அதிகரிக்க உள்ளதை போட்டு உடைத்து இருந்தது. தற்போது அந்த நோக்கியா எக்ஸ் ஆனது சிசிசி தரச்சான்றிதழ் தளத்தில் லோ-எண்ட் ஸ்மார்ட்போன் பிரிவில் காணப்பட்டுள்ளது.

நோக்கியா எக்ஸ்-ன் விலை.?

நோக்கியா எக்ஸ்-ன் விலை.?

இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நோக்கியா எக்ஸ் ஆனது சீனா கம்பள்சரி செர்டிபிப்கேஷன் (China Compulsory Certification) சான்றிதழைப் பெற்றுள்ளது. அது நோக்கியா எக்ஸ்-ன் விலையை மேற்பார்வையிடுகிறது. அதில் இருந்து நோக்கியா எக்ஸ் ஒரு லோ எண்ட் ஸ்மார்ட்போனாக களமிறங்கும் மற்றும் நியாயமான விலை நிர்ணயத்தை பெறும் என்பது உறுதியாகிறது.

10W சார்ஜர்.!

10W சார்ஜர்.!

வெளியான பட்டியலின் முக்கிய சிறப்பம்சமாக நோக்கியா எக்ஸ்-ன் 10W சார்ஜர் திகழ்கிறது. இது ஒரு நிலையான 5V / 2A சார்ஜ் வீதத்தைக் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற ஏப்ரல் 27 ஆம் தேதியன்று சீனாவில், நோக்கியா எக்ஸ் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னர் வெளியான சீன வலைப்பதிவான ITHome-ன் ஒரு அறிக்கையும், கூறப்படும் நோக்கியா எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது வருகிற ஏப்ரல் 27 ஆம் தேதி அன்று சீனாவில் வெளியாகும் என்று கூறியுள்ளதால், இதை நம்பகமான ஒரு தேதியாகவே எடுத்துக் கொள்ளலாம்.

அதிர்ச்சிக்கு உள்ளாவதற்கு ஒன்றுமே இல்லை.!

அதிர்ச்சிக்கு உள்ளாவதற்கு ஒன்றுமே இல்லை.!

நோக்கிய எக்ஸ் ஆனது மொத்தம் இரண்டு மாதிரிகளில் வெளியாகும் என்பதை அதன் இரண்டு மாடல் எண்கள் - TA-1109 மற்றும் TA-1099 - நிரூபிக்கின்றன. இரு மாடல்களுமே பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இது மிகவும் எதிர்பார்த்த ஒரு தகவல் தான், ஆக ன் நோக்கியா பிரியர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாவதற்கு ஒன்றுமே இல்லை. ஆரம்பத்தில் மிட் ரேன்ஜ் விலை பிரிவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா எக்ஸ் ஸ்மார்ட்போனில் பாஸ்ட் சார்ஜிங் டெக்னாலஜி இல்லை என்பதால் அது இன்னும் மலிவான விலைக்கு அறிமுகம் ஆக வாய்ப்புள்ளது.

ஒரு பெரிய  'X' லோகோ.!

ஒரு பெரிய 'X' லோகோ.!

ஸ்மார்ட்போனின் நீக்கமுடியாத ஒரு பாணியாகி விட்ட 4G LTE ஆதரவுடன் வெளியாகும் நோக்கியா எக்ஸ்-ன் ஒரு மாதிரியானது 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு திறனும் கொண்டுள்ளது. வெளியான புகைப்படத்தில் காட்சிப்படும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் ஆனது ஒரு பெரிய 'X' லோகோவை தன்னுள் கொண்டுள்ளது மட்டுமன்றி நோக்கியா எக்ஸ் என்கிற தனது பெயரையும் வெளிப்படுத்தி உள்ளது. இது தவிர, வேறு எந்த வடிவமைப்பு கூறுகள் அல்லது அம்சங்கள் பற்றிய குறிப்புகளும் வெளியா விளம்பரத்தில் இடம் பெறவில்லை. வெளியான அறிக்கையின் படி, நோக்கியா எக்ஸ் ஆனது ஒரு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இல்லாமல், ஒரு மிட் ரேன்ஜ் (இடைப்பட்ட விலை நிர்ணயம் கொண்ட) ஸ்மார்ட்போனாக இருக்கும்.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
இந்தியாவில் கிடைக்குமா.?

இந்தியாவில் கிடைக்குமா.?

விளம்பரப் படுத்தப்பட்டுள்ள நோக்கியா எக்ஸ் ஆனது உலகளாவிய ரீதியில் அறிமுகப்படுத்தப்படும் ஒரு ஸ்மார்ட்போன் ஆக திகழுமா.? குறைந்த பட்சம் சில ஆசிய சந்தைகளுக்காவது (இந்தியா உட்பட) அனுப்பி வைக்கப்படுமா.? அல்லது சீன சந்தைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படுமா.? என்பது பற்றிய விவரங்களை வெளியீட்டின் போதே அறிந்துகொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
Nokia X to Debut as a Low-end Device as Revealed by CCC Listing. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X