மிட்-ரேன்ஜ் விலையில் மிரட்டும் நோக்கியா எக்ஸ்; ஏப் 27-ல் ரெடியா இருங்க.!

சமீபத்தில் வெளியாக உள்ள அறிக்கையானது நிறுவனத்தின் ஆக்ரோஷமானது இன்னும் அதிகரிக்க உள்ளதை போட்டு உடைத்துள்ளது.

|

நோக்கியா பிராண்ட் மொபைல்களை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள HMD குளோபல், கடந்த சில ஆண்டுகளில் பல நோக்கியா-பிராண்டட் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி விட்டது. அதில் நோக்கியா 3310 (2017) போன்ற பீச்சர் மொபைல்களும் அடங்கும், நோக்கியா 8 சிரோக்கோ போன்ற ஹை-எண்ட் பிரீமியம் ஸ்மார்ட்போன்களும் அடங்கும்.

இதனால் இந்தியாவில் துவண்டு போய் கிடந்த நோக்கியாவின் சந்தை, ஆக்ரோஷமான வளர்ச்சியை அடைந்தது. சமீபத்தில் வெளியாக உள்ள அறிக்கையானது நிறுவனத்தின் ஆக்ரோஷமானது இன்னும் அதிகரிக்க உள்ளதை போட்டு உடைத்துள்ளது.

சர்வ சாதாரணமாக கடக்க முடியவில்லை.!

சர்வ சாதாரணமாக கடக்க முடியவில்லை.!

வெளியான அறிக்கையை, இதில் என்ன சுவாரசியம் இருக்கிறது, பொதுவாக நடப்பது தானே என்று சர்வ சாதாரணமாக கடக்க முடியவில்லை. நோக்கியா நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றைத் தொடங்குகிறது, அந்த ஸ்மார்ட்போனின் பெயர் - நோக்கியா எக்ஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு பெரிய  'X' லோகோ.!

ஒரு பெரிய 'X' லோகோ.!

சீன வலைப்பதிவான ITHome-ன் ஒரு அறிக்கையின்படி, கூறப்படும் நோக்கியா எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது வருகிற ஏப்ரல் 27 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் ஆகும். வெளியான புகைப்படத்தில் காட்சிப்படும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் ஆனது ஒரு பெரிய 'X' லோகோவை தன்னுள் கொண்டுள்ளது மட்டுமன்றி நோக்கியா எக்ஸ் என்கிற தனது பெயரையும் வெளிப்படுத்தி உள்ளது.

விலை நிர்ணயம்.?

விலை நிர்ணயம்.?

இது தவிர, வேறு எந்த வடிவமைப்பு கூறுகள் அல்லது அம்சங்கள் பற்றிய குறிப்புகளும் வெளியா விளம்பரத்தில் இடம் பெறவில்லை. வெளியான அறிக்கையின் படி, நோக்கியா எக்ஸ் ஆனது ஒரு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இல்லாமல், ஒரு மிட் ரேன்ஜ் (இடைப்பட்ட விலை நிர்ணயம் கொண்ட) ஸ்மார்ட்போனாக இருக்கும்.

இந்தியாவில் கிடைக்குமா.?

இந்தியாவில் கிடைக்குமா.?

விளம்பரப் படுத்தப்பட்டுள்ள நோக்கியா எக்ஸ் ஆனது உலகளாவிய ரீதியில் அறிமுகப்படுத்தப்படும் ஒரு ஸ்மார்ட்போன் ஆக திகழுமா.? குறைந்த பட்சம் சில ஆசிய சந்தைகளுக்காவது (இந்தியா உட்பட) அனுப்பி வைக்கப்படுமா.? அல்லது சீன சந்தைக்கு மட்டும் என்கிற வரம்பை பெறுமா.? என்பது பற்றிய வார்த்தைகள் ஏதும் இல்லை. விலை மற்றும் கிடைக்கும் தன்மை பற்றிய விவரங்கள் ஏப்ரல் 27-ல் தான் வெளியாகும்.

6 ஜிபி ரேம் உடனான 64 ஜிபி

6 ஜிபி ரேம் உடனான 64 ஜிபி

எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, நோக்கியா எக்ஸ் ஆனது 6 ஜிபி ரேம் உடனான 64 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு, க்வால்காம் நடுப்பகுதியளவிலான எஸ்ஓசி ஆகியவற்றால் இயக்கப்படலாம். குறிப்பாக ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் கொண்டு வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

மூன்று கேமரா அமைப்புகளுடன் நோக்கியா 9.!

மூன்று கேமரா அமைப்புகளுடன் நோக்கியா 9.!

மறுகையில் உள்ள நோக்கியா 9-ஐ பொறுத்தவரை, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ, க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 845 எஸ்ஓசி, 8ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 256 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு, 41 மெகாபிக்சல் + 20 மெகாபிக்சல் + 9.7 மெகாபிக்சல் என்கிற மூன்று கேமரா அமைப்புகள் ஆகியவைகளை கொண்டு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Nokia X Advertisement in China Hints at April 27 Launch. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X