நோக்கியாவின் புதிய விண்டோஸ் ஓஎஸ் கொண்ட ஸ்மார்ட்போன்!

By Super
|
நோக்கியாவின் புதிய விண்டோஸ் ஓஎஸ் கொண்ட ஸ்மார்ட்போன்!

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட நோக்கியா மொபைல் பற்றி ஒரு முக்கிய தகவல். இந்த விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் வெளியாகும். கியூவல்காம் ஃப்ளூயிட் மற்றும் நோக்கியா ஃப்ளூயிட் என்ற இந்த ஸ்மார்ட்போன்கள் விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும்.

இந்த 2 ஸ்மார்ட்போன்களும் நிச்சயம் சிறந்த தொழில் நுட்ப வசதிகளை கொடுக்கும். கியூவல்காம் ஃப்ளூயிட் ஸ்மார்ட்போன் 768 X 768 பிக்ஸல் திரை துல்லியத்தினையும், நோக்கியா ஃப்ளூயிட் ஸ்மார்ட்போன் 480 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் வழங்கும்.

இதனால் தகவல்களை தெளிவாக திரையில் பார்க்கலாம். இந்த 2 ஸ்மார்ட்போன்களும் எல்டிஇ தொழில் நுட்பம் கொண்டது. விண்டோஸ் போன் 8.0 இயங்குதளம் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன்கள் ஐஇ 10 டபிள்யூஎம் பவர்யூசர் ஆற்றல் கொண்டது.

விண்டோஸ் இயங்குதளத்தின் மூலம் சிறந்த தொழில் நுட்பத்தினை வழங்க வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற லுமியா ஸ்மார்ட்போன் போல, நோக்கியாவின் இந்த புதிய ஃப்ளூயிட் மற்றும் நோக்கியா ஃப்ளூயிட் ஸ்மார்ட்போன்களும் மொபைல் மார்கெட்டில் பெரிய போட்டியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 2 புதிய ஸ்மார்ட்போன்களும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் என்று அதிகார பூர்வமாகவும் முடிவு செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்கள் கூடிய விரைவில் வெளியாகும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X