நோக்கியான் புதிய ஸ்மார்ட்போன் நோக்கியா என்9 அறிமுகம்

By Super
|
நோக்கியான் புதிய ஸ்மார்ட்போன் நோக்கியா என்9 அறிமுகம்
மொபைல்போன் உலகில் முன்னோடி நிறுவனமான நோக்கியா நிறுவனம் நோக்கியா என்9 மாடலின் மேம்படுத்தப்பட்ட புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய மொபைல்போனி்ல் அனைத்து அதிநவீன வசதிகளையும் பொருத்தி வழங்கியுள்ளது நோக்கியா.

வாடிக்கையாளர் திருப்தியில் அதிக கவனம் செலுத்தும் நோக்கியாவின் அக்கறை இந்த போனிலும் தெரிகிறது.

3.1 இன்ச் அகலம் கொண்ட தொடுதிரையுடன் வந்துள்ள இந்த புதிய ஸ்மார்ட்போனில் 2.5 அமோல்டு கொரில்லா கிளாஸ் டிஸ்பிளே வசதி உள்ளது.

ஆடியோ, வீடியோ ரெக்கார்டிங், இரட்டை மெமரி உள்ளிட்ட வசதிகளும் இருக்கின்றன.

3ஜி, வைபை, புளூடூத் உள்ளிட்ட கனெக்ட்டிவி வசதிகளும் இதில் உள்ளன.

நோக்கியா மேப்ஸ், மியூசிக் மற்றும் ஓவீஐ சாப்ட்வேர்களும் இதில் அப்லோடு செய்யப்பட்டுள்ளன.

தவிர, ஸ்கைப், ஆங்கிரி பேர்ட்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கான இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளன.

அதிவிரைவான செயல்பாடுகளுக்காக மீகோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட முதல் நோக்கியா போனாக சந்தையில் களமிறங்கியுள்ளது.

நோக்கியா என்9 சிறப்பம்சங்கள்:

மீகோ ஓஎஸ்

8 மெகா பி்க்செல் கொண்ட சக்திவாய்ந்த கேமரா

வைபை கனெக்ட்டிவிட்டி

எச்263 மற்றும் எச்264 வீடியோ ப்ளேபேக்

16ஜிபி மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மாடல்கள்

இடிஆர் 2.1 கொண்ட புளூடூத்

720பி கொண்ட வீடியோ ரெக்கார்டிங்

21எம்பிபிஎஸ் திறன்கொண்ட 3ஜி இன்டர்நெட்

அனைத்து அம்சங்களும் நிறைவாக கொண்ட இந்த என்9 மொபைல்போனுக்கு ரூ.35,000 விலையாக நோக்கியா நிர்ணயித்துள்ளது. இதன் ரகத்தை சேர்ந்த ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் என்9 சரியான சந்தை போட்டியை கொடுத்துள்ளதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X