Home
Mobile

எலக்ட்ரானிக் உலகில் புதுமையை புகுத்த இருக்கும் நோக்கியா!

By Super
எலக்ட்ரானிக் உலகில் புதுமையை புகுத்த இருக்கும் நோக்கியா!

அதி நவீன தொழில் நுட்பம் கொண்ட டேப்லட்களையும், ஹைபிரிட் தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன் சாதனங்களையும் வழங்க உள்ளது நோக்கியா நிறுவனம்.

இதனால் டேப்லட்டில் உள்ள தொழில் நுட்பத்தினை, ஸ்மார்ட்போன்களில் பெறும் வகையில் ஏதேனும் புதுமைகளை நோக்கியா படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மொபைல் தயாரிப்புகளில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. முதலிடத்தில் இருந்த நோக்கியா நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக தனது முதலிடத்தில் இருந்து நழுவி கொண்டு இருக்கிறது.

புதிய டேப்லட்களையும், ஹைபிரிட் தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன் மொபைல்களையும் வெளியிட இருப்பதாக நோக்கியா நிறுவனத்தின் உயர் அதிகாரி ஜோர்மா ஓலில்லா தெரிவித்துள்ளார்.

நோக்கியாவின் இடத்தை தடாலடியாக சாம்சங் நிறுவனம் பிடித்துவிட்டது. ஆப்பிள் நிறுவனமும் சிறந்த தொழில் நுட்பம் கொண்ட மின்னணு சாதனங்களை வெளியிட்டு கொண்டு வருகிறது. இதனால் இந்த இரண்டு நிறுவனங்களை முந்த வேண்டிய நிலையில் இருக்கிறது நோக்கியா.

சமீபத்தில் உலகின் முன்னணி நிதி ஆலோசக அமைப்பான ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் (எஸ் அண்ட் பி) நிறுவனம், நோக்கியாவின் தர வரிசையை குறைத்துள்ளது. இதனால் நோக்கியா நிறுவனம் இந்த நிலையை நீட்டிக்க விடாமல் புதிய யுக்திகளை செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த எதிர்பார்ப்பை மெய்பிக்கும் வகையில் நோக்கியா நிறுவனம் முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. உயர்ந்த, அதி நவீன தொழில் நுட்பம் கொண்ட டேப்லட்களையும் மற்றும் ஸ்மார்ட்போன்களையும் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது நோக்கியா நிறுவனம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X