Home
Mobile

தூக்குங்கடா இந்த செல்லத்த.. இப்படி ஒரு NOKIA 5G போனுக்கு தான் இந்தியாவே வெயிட்டிங்.. என்ன மாடல்? என்ன விலை?

நீங்களொரு நோக்கியா (NOKIA) மொபைல் போன் ரசிகராக இல்லாவிட்டாலும் கூட, நோக்கியாவின் இந்த புதிய 5ஜி ஸ்மார்ட்போன் (5G Smartphone) நிச்சயம் உங்களின் கவனத்தை ஈர்க்கும். ஏனென்றால் இந்த நோக்கியா மாடலின் விலை நிர்ணயமும், அது பேக் செய்யும் அம்சங்களும் அப்படி!

2023 செப்டம்பர் 6 ஆம் தேதியன்று, நோக்கியா நிறுவனம் தனது புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கண்டிப்பாக அது நோக்கியா ஜி310 5ஜி (Nokia G310 5G) மாடலாகத்தான் இருக்க வேண்டும்.

இப்படி ஒரு NOKIA 5G போனுக்கு தான் இந்தியாவே வெயிட்டிங்.. என்ன மாடல்?

ஏனென்றால் நோக்கியா ஜி310 5ஜி தான் நோக்கியாவின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனாக - சில வாரங்களுக்கு முன்னர் - அமெரிக்க சந்தையில் அறிமுகமானது. ஆக அதே மாடல், அதே பெயரின் கீழ் அல்லது வேறு பெயரின் கீழ் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

நோக்கியா ஜி310 5ஜி ஸ்மார்ட்போன் ஏற்கனவே அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டதால், அது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? அதன் டிஸ்பிளே அளவு என்ன? கேமரா செட்டப் எப்படி? பேட்டரி கெப்பாசிட்டி என்ன?அதன் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? என்பதில் எந்த குழப்பமும் இல்லை.

நோக்கியா ஜி310 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் சிப்செட் மூலம் இயங்கும் இந்த நோக்கியா ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை வழங்குகிறது. மேலும் இது 720பி ரெசல்யூஷன் உடனான 6.56-இன்ச் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

இதன் டிஸ்பிளேவில் உள்ள வாட்டர் டிராப் நாட்ச்சில் 8எம்பி செல்பீ கேமரா உள்ளது. பின்புறத்தில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் ஆட்டோஃபோகஸ் (AF) உடனான 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார்கள் உள்ளன.

இதன் கேமரா செட்டப்பில் சில ஏஐ ஃபில்டர்களும் (AI Filters) அடக்கம். கூடவே தெளிவான சவுண்ட்-ஐ வழங்கும் நோக்கியா ஓஸோ ஆடியோ (Nokia OZO Audio) உடன் வீடியோ ரெக்கார்டிங் செய்யும் ஆதரவும் உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை நோக்கியா ஜி310 5ஜி மாடலானது 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 20W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS), 3.5 மிமீ ஆடியோ ஜாக், மைக்ரோ எஸ்டி ஸ்லாட், தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி52 ரேட்டிங் (Dust and Spalsh Proof IP52 Rating) போன்றவைகளை கொண்டுள்ளது.

நோக்கியா ஜி310 5ஜி ஸ்மார்ட்போன் குவிக்ஃபிக்ஸ் டிசைன் (QuickFix Design) உடன் வருகிறது.இதன் மூலம் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை செல்ஃப்-ரிப்பேர் (Self Repair) செய்து கொள்ள முடியும். இதற்காக நோக்கியா நிறுவனம் சிங்கிள் சோர்ஸில் இருந்து வழிகாட்டிகளையும், ஒரிஜினல் உதிரி பாகங்களையும் வழங்கும்.

நோக்கியா ஜி310 5ஜி ஸ்மார்ட்போனின் விலை: அமெரிக்க சந்தையில் இது 186 அமெரிக்க டாலர்கள் என்கிற விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.15,400 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே போன்ற விலை நிர்ணயத்தை நாம் இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம்.

நோக்கியா ஜி310 5ஜி உடன் சேர்த்து நோக்கியா சி210 என்கிற மாடலும் அமெரிக்க சந்தையில் அறிமுகமானது. இருப்பினும் செப்டம்பர் 6 ஆம் தேதியன்று இதுவும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து எந்த தெளிவும் இல்லை. நோக்கியா சி210 ஸ்மார்ட்போன் இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.9000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அம்சங்களை பொறுத்தவரை, நோக்கியா சி210 ஆனது ஸ்னாப்டிராகன் 662 சிப்செட், 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டரோஜ், 6.3-இன்ச் எல்சிடி டிஸ்பிளே, 5எம்பி செல்பீ கேமரா, 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப், 3000mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ், 3.5மிமீ ஆடியோ ஜாக் போன்றவைகளை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia to Launch New 5G Smartphone in India on September 6th Check Nokia G310 5G Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X