13-ஆம் தேதி வருகை தரும் நோக்கியா-808 பியூர்வியூ!

Posted By: Staff
13-ஆம் தேதி வருகை தரும் நோக்கியா-808 பியூர்வியூ!

அட! நோக்கியா 808 பியூர்வியூ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வரும் 13-ஆம் தேதி அறிமுகம் செய்வதாக அதிகார பூர்வமாக அறிவிக்க உள்ளது நோக்கியா.

41 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகுமா? என்பது கேள்வியாக இருந்தது. இதில் இருந்து இந்த 808-பியூர்வியூ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாவதாக தகவல்களும் வெளியானது.

அதன் பிறகு இந்த நோக்கியா 808-பியூர்வியூ ஸ்மார்ட்போன் வெளியாகும் தேதி என்ன என்பது பற்றிம் சில பேச்சுக்கள் சென்று கொண்டே இருந்தது. இப்போது இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் தேதியை அதிகார பூர்வமாக அறிவிக்க உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 4.0 இஞ்ச் அமோலெட் தொடுதிரை வசதியினை கொண்டது. இந்த திரையின் மூலம் 360 X 640 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் பெறலாம்.

இந்த ஒரு ஸ்மார்ட்போனில் அகன்ற திரை, சிம்பையான் பெல் ஆப்பரேட்டிங் சிஸ்டம், 41 மெகா பிக்ஸல் கேமரா, 3ஜி தொழில் நுட்பம் என்று ஏராளமான வசதிகளும் கொடுக்கப்ப்டடுள்ளது.

இத்தனை சவுகரியங்களை கண்ட இந்த ஸ்மார்ட்போன் வருகிற 13-ஆம் தேதி வெளியாகும் என்பது இந்தியா வாடிக்கையாளர்களுக்கு அதிக ஆர்வத்தினை அளிக்கும் செய்தி தான். இந்த ஸ்மார்ட்போன் ரூ. 30,000 விலை கொண்டதாக இருக்கும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்