பின்லாந்து ஆலையை இழுத்து மூடும் நோக்கியா: காரணம் என்ன?

Posted By: Staff
பின்லாந்து ஆலையை இழுத்து மூடும் நோக்கியா: காரணம் என்ன?

ஃபின்லாந்தில் உள்ள தனது மிக பெரிய மற்றும் முக்கியமான மொபைல் தயாரிப்பு தொழிற்சாலையை மூடிகிறது நோக்கியா.

சமீபத்தில் கூட விற்பனையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, நோக்கயா நிறுவனம் 10 ஆயிரம் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பிய நோக்கியா, அடுத்து அடுத்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

மொபைல் தயாரிப்புகளில் கொடிகட்டி பறந்த நோக்கியா நிறுவனம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக முதன்மை இடத்தினை நழுவவிட்டு கொண்டு இருக்கிறது.

ஸ்மார்ட்போன்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. ஏனெனில் இந்த ஸ்மார்ட்போன்கள் மூலம் வாடிக்கையாளர்கள் அதிக பயன்பாட்டினை பெற்று வருகின்றனர். பணபரிவற்தனைகள் முதல் கொண்டு இப்போதெல்லாம் ஸ்மார்ட்போன்களிலேயே செய்யப்பட்டு வருகிறது.

ஸ்மார்ட்போன் உலகம் பெரிய அளவில் விரிந்து கொண்டே போவதனால், நோக்கியா நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பில் கொஞ்சம் தடுமாறித்தான் போயிருக்கிறது. சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் சிறப்பாக ஸ்மார்ட்போன் உலகில் கால் உண்றிவிட்டது.

குறைந்த விலை கொண்ட மொபைல் தயாரிப்புகளில் சிறந்த இடத்தினை பெற்ற நோக்கியா நிறுவனம், ஸ்மார்ட்போன் தயாரிப்பில் பெரிய சாதனையை நிகழ்த்த முடியாத நிலையில் உள்ளது.

மொபைல்களை பயன்படுத்தவே மக்கள் யோசித்த காலத்திலேயே, ஆசிய நாடுகளில் குறைந்த விலையில் அனைவரையும் மொபைல்போன்களை பயன்படுத்த வைத்த நோக்கியா நிறுவனம், இன்னும் ஃபின்லாந்தில் தனது மொபைல் தொழிற்சாலையை மூடுகிறது என்பது சற்று கவலைக்கிடமான ஒரு செய்தி தான்.

இத்தனை வருட மொபைல் சாம்ராஜ்ஜியத்தில், தனது பெரிய மொபைல் தொழிற்சாலையை நோக்கியா மூடுவது என்பது, இந்நிறுவனத்தின் பெரிய இழப்பினையே சுட்டி காட்டுகிறது.

நோக்கியா நிறுவனம் சிம்பையான் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போனை வழங்கி வருகிறது. ஆனால் மக்கள் அதிகமாக ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட்போன்களை தான் அதிகம் விரும்பிகின்றனர்.

இதனால் ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போனையோ அல்லது புதிய வேறு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போனையோ பயன்படுத்த நோக்கியா நிறுவனம் வெளியிட்டால் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் மீண்டும் தனது இடத்தினை பிடிக்க இன்னமும் வாய்ப்புள்ளது என்று சொல்லலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot