6 புதிய மொபைல்களை வெளியிடும் நோக்கியா!

Posted By: Staff
6 புதிய மொபைல்களை வெளியிடும் நோக்கியா!

வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று இந்த முறை முதல் இடத்தை தக்க வைத்து கொண்ட நோக்கியா நிறுவனம் ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த மாதம் நடக்கவிருக்கும் உலக மொபைல்போன் கண்காட்சியில் 6 புதிய மொபைல் மாடல்களை வெளியிட உள்ளது நோக்கியா நிறுவனம்.

நோக்கியா லுமியா-900, நோக்கியா லுமியா-610, நோக்கியா-808, ஆஷா-202, ஆஷா-203, ஆஷா-302 என்பவை அந்த ஆறு புதிய மொபைல்கள். இது நிச்சயம் வாடிக்ககையாளர்களுக்கு ஒரு இன்பகரமான விஷயமாக இருக்கும். நோக்கியா லுமியா-610 ஸ்மார்ட்போன் விண்டோஸ் ஆப்பிரேட்டிங் சிஸ்டம் கொண்டது.

உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட இந்த அனைத்து புதிய நோக்கியா மொபைல்களும் வாடிக்கையாளர்களை தன் பக்கம் எளிதாக ஈர்த்துவிடும் என்று தோன்றுகிறது. இந்த மொபைல்கள் வெளியான பிறகு இந்த மொபைல்கள் நிச்சயம் மொபைல் சந்தையை ஹிட் செய்யும் என்று நம்பப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot