அடேங்கப்பா..இவ்வளவு அட்டகாசமான அம்சங்கள் இருக்குதா? Nokia T10 டேப்லெட் விரைவில் அறிமுகம்.!

|

நோக்கியா நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்கள், டேப்லெட் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது. அதேபோல் இந்நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளன.

மாடல் எண்?

மாடல் எண்?

இந்நிலையில் நோக்கியா நிறுவனம் புதிய நோக்கியா டி10 (Nokia T10) எனும் டேப்லெட் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது இந்நிறுவனம் இந்த புதிய டேப்லெட் மாடலில் வேலை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த புதிய டேப்லெட் உடன் நோக்கியா 26000 பிளிப் மாடலையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது நோக்கியா நிறுவனம். அதேபோல்இந்த நோக்கியா டி10 சாதனத்தின் மாடல் எண் TA-1462 என்றுUS ஒழுங்குமுறை சான்றிதழ் தரவுத்தளமான FCC மூலம் தெரியவந்துள்ளது.

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! இராணுவத்தின் புதிய கேட்ஜெட்.. சுவருக்கு பின்னால் நடப்பதை அப்படியே காட்டுமா?ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! இராணுவத்தின் புதிய கேட்ஜெட்.. சுவருக்கு பின்னால் நடப்பதை அப்படியே காட்டுமா?

நோக்கியா டி10 டேப்லெட்

அதேபோல் நோக்கியா டி10 டேப்லெட் முதலில் அமெரிக்காவில் அறிமுகமாகும் என்றும், அதற்கு பிறகு தான் மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது நோக்கியா டி10 டேப்லெட் மாடலின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றிசற்று விரிவாகப் பார்ப்போம்.

போச்சு! WhatsApp-இல் இருந்தே ஒரே ஒரு உளவு பார்க்குற மேட்டரும் இப்போ போச்சு!போச்சு! WhatsApp-இல் இருந்தே ஒரே ஒரு உளவு பார்க்குற மேட்டரும் இப்போ போச்சு!

 நோக்கியா டி10 டிஸ்பிளே

நோக்கியா டி10 டிஸ்பிளே

நோக்கியா டி10 டேப்லெட் ஆனது 8-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான நோக்கியா டேப்லெட்.

48 ஆண்டு ஆச்சு, Bill Gates தனக்காக உருவாக்கிய Resume: உத்வேகம் அளிக்கும் புகைப்படம்!48 ஆண்டு ஆச்சு, Bill Gates தனக்காக உருவாக்கிய Resume: உத்வேகம் அளிக்கும் புகைப்படம்!

 5100 எம்ஏஎச் பேட்டரி

நோக்கியா டி10 டேப்டெல் மாடலில் 5100 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 10W பாஸ்ட்
சார்ஜிங் ஆதரவும் உள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.

குறிப்பாக அதிக நேரம் கேம் விளையாடும் பயனர்களுக்கு இந்த டேப்லெட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இப்போது இதன் கேமரா அம்சங்களைப் பார்ப்போம்.

இந்த Vivo போனுக்கு தான் இந்தியாவே வெயிட்டிங்.. இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா?இந்த Vivo போனுக்கு தான் இந்தியாவே வெயிட்டிங்.. இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா?

 கேமரா எப்படி?

கேமரா எப்படி?

இந்த புதிய நோக்கியா டி10 டேப்லெட்; மாடலில் 8எம்பி ரியர் கேமரா ஆதரவு உள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய நோக்கியா டேப்டெல். இதைவிட அதிக மெகாபிக்சல் கொண்ட கேமராக்கள் இதில் இடம்பெற்றால் இன்னும் அருமையாக இருக்கும்.

லேப்டாபை கூட சார்ஜ் செய்யும் 50,000mAh பவர் பேங்க் டிவைஸா? இது என்ன விலை தெரியுமா?லேப்டாபை கூட சார்ஜ் செய்யும் 50,000mAh பவர் பேங்க் டிவைஸா? இது என்ன விலை தெரியுமா?

என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?

என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?

இந்த புதிய டேப்லெட் மாடலில் பேட்டரி மற்றும் டிஸ்பிளே சூப்பராக இருக்கிறது. ஆனால் கேமரா சொல்ற அளவுக்கு ஒன்றும் இல்லை என்றே கூறலாம். எனவே இந்த நோக்கியா டி10 டேப்லெட் ரூ.10,000-க்கு கீழ் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெறும் 4 நிமிடத்தில் இவ்வளவு சதவீதம் சார்ஜ் ஆகுதா? மின்னல் வேக சார்ஜிங் டெக்னாலஜியை அறிமுகம் செய்த Infinix.!வெறும் 4 நிமிடத்தில் இவ்வளவு சதவீதம் சார்ஜ் ஆகுதா? மின்னல் வேக சார்ஜிங் டெக்னாலஜியை அறிமுகம் செய்த Infinix.!

 நோக்கியா 105 (2022), நோக்கியா 105

நோக்கியா 105 (2022), நோக்கியா 105

அதேபோல் நோக்கியா நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு நோக்கியா 105 (2022), நோக்கியா 105 என்ற பீச்சர் போன்களை அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த போன்கள் கம்மி விலையில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்றே கூறலாம். எனவே இதுபோன்ற டேப்லெட் மாடல்களை விட பீச்சர் போன்களை நோக்கியா நிறுவனம் அறிமுகம் செய்தால் நல்ல வரவேற்பு இருக்கும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Nokia T10 Tablet to launch soon with 5100 mAh battery: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X