ப்ளிப்கார்ட், அமேசானுக்கு குட்பை: ஆன்லைன் ஸ்டோர் வழியாக நோக்கியாவே விற்பனையை தொடங்கியது.!

நோக்கியா 3310 இரட்டை சிம், நோக்கியா 150 டூயல் சிம், நோக்கியா 105, நோக்கியா 105 டூயல் சிம், நோக்கியா 230 டூயல் சிம், நோக்கியா 216 இரட்டை சிம் மற்றும் நோக்கியா 130 டூயல்.!

|

நோக்கியா பிராண்ட் அதன் விருப்பமான இந்திய சந்தைக்கு திரும்பும் நோக்கத்தின்கீழ் மிகவும் எதிர்பார்க்கப்பட்டவொரு முயற்சியை அதிகாரபூர்வமான அறிவித்துள்ளது. அதாவது நோக்கியா நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஆக்சஸெரீகளை அதன் ஆன்லைன் ஸ்டோர் மூலம், இந்தியாவில் விற்பனை செய்ய தொடங்கியுள்ளது.

நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது, இந்தியாவில் அதன் ஆன்லைன் மொபைல் ஸ்டோரைத் திறந்துள்ளது. இதன் வழியாக ஒரு பயனர் நேரடியாக அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து நோக்கியா ஸ்மார்ட்போன்களை வாங்கலாம்.

இலவச ஷிப்பிங் மற்றும் பாதுகாப்பான கட்டண விருப்பங்கள்.!

இலவச ஷிப்பிங் மற்றும் பாதுகாப்பான கட்டண விருப்பங்கள்.!

அறிவிக்கப்பட்டுள்ள நோக்கியா ஆன்லைன் ஸ்டோரில், தற்போது பல ஸ்மார்ட்போன்கள் மற்றும் பீச்சர் கருவிகள் மட்டுமின்றி நோக்கியா நிறுவனத்தின் ஆக்சஸெரீகளையும் பட்டியலிட்டுள்ளது. மேலும் இந்த வலைப்பக்க, பிரபல இ-காமர்ஸ் வலைத்தளங்களை போன்றே இலவச ஷிப்பிங் மற்றும் பாதுகாப்பான கட்டண விருப்பங்களையும் குறிப்பிடுகிறது. கூடுதலாக, ஒரு 10 நாள் ரிட்டர்ன் பாலிசியையும் அறிவித்துள்ளது, இது "விற்பனையாளர் விதிகளுக்கு உட்பட்டுள்ளது" என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 5, நோக்கியா 3, நோக்கியா 2 மற்றும் நோக்கியா 8.!

நோக்கியா 5, நோக்கியா 3, நோக்கியா 2 மற்றும் நோக்கியா 8.!

மேற்கூறியபடி, நோக்கியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இந்திய சந்தையில் கிடைக்கும் அனைத்து ஸ்மார்ட்போன்கள் மற்றும் பீச்சர் தொலைபேசிகளும் பட்டியலிடப்பட்டுள்ளது. இருப்பினும் அவைகள் அனைத்துமே விற்பனைக்கு திறந்து விடப்படவில்லை. அதாவது நோக்கியா 5, நோக்கியா 3, நோக்கியா 2 மற்றும் நோக்கியா 8 ஆகியவைகள் வாங்க கிடைக்கும் மறுகையில், நோக்கியா 6 ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு கிடைக்கவில்லை. நோக்கியா 8 சிராக்கோ, நோக்கியா 7 ப்ளஸ், புதிய நோக்கியா 6 (2018) மற்றும் பட்ஜெட் நோக்கியா 1 ஆகியவையும் இதில் அடங்கும்.

நோக்கியா 150 டூயல் சிம், நோக்கியா 105.!

நோக்கியா 150 டூயல் சிம், நோக்கியா 105.!

நோக்கியா 3310 இரட்டை சிம், நோக்கியா 150 டூயல் சிம், நோக்கியா 105, நோக்கியா 105 டூயல் சிம், நோக்கியா 230 டூயல் சிம், நோக்கியா 216 இரட்டை சிம் மற்றும் நோக்கியா 130 டூயல் சிம் உள்ளிட்ட பல நோக்கியா பீச்சர்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. இருப்பினும், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்ரோ தொலைபேசியான, நோக்கியா 8810 4ஜி வாங்குவதற்கு கிடைக்கவில்லை.

"தொழில்நுட்ப ரீதி"யாக உங்களால் வாங்கவே முடியாது.!

ஆக்சஸெரீகளை பொறுத்தமட்டில், ஹெட்செட்கள், கேஸ்கள் மற்றும் கவர்கள், கார் சார்ஜர் மற்றும் யூஎஸ்பி கேபிள் போன்ற பல பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த துறையிலும் சில மட்டுமே வாங்குவதற்கு கிடைக்கின்றன. ஆனால் துரதிருஷ்டவசமாக, கிடைக்கும் எதுவுமே "ஸ்டாக்" இல்லை. ஆக, நோக்கியா ஆன்லைன் ஸ்டோரில் எந்தவொரு உபகரணத்தையும் "தொழில்நுட்ப ரீதி"யாக உங்களால் வாங்கவே முடியாது.

வருகிற ஏப்ரல் மாதம்.!

வருகிற ஏப்ரல் மாதம்.!

இதற்கிடையில், நோக்கியா 6 (2018), நோக்கியா 8 சிரோக்கோ மற்றும் நோக்கியா 7 பிளஸ் போன்ற புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களானது, வருகிற ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. நிகழ்ந்து முடிந்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018 நிகழ்வில் அறிமுகமான நோக்கியா 1, நோக்கியா 6 (2018), நோக்கியா 7 பிளஸ் மற்றும் நோக்கியா 8 சிரோக்கோ ஆகியவற்றின் அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயங்களை பற்றி விரிவாக காணலாம்.

நோக்கியா 1

நோக்கியா 1

மிக நீண்ட காலமாக வதந்திக்கப்பட்ட நோக்கியா 1 ஆனது எதிர்பார்க்கப்பட்டபடியே நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனாக வெளியாகியுள்ளது. அதாவது ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ பதிப்பு) கொண்டுள்ளது. நோக்கியா 1 ஸ்மார்ட்போனின் உலகளாவிய விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில் சுமார் ரூ.5,500/-இருக்கலாம் மற்றும் அதற்கேற்ற நுழைவு-நிலை வன்பொருள் அம்சங்களைக் கொண்டுள்ளது. நோக்கியா 1 ஆனது ஒரு 4.5 இன்ச் டபுள்யூவிஜிஏ டிஸ்ப்ளே மற்றும் அகற்றக்கூடிய பின்பக்க பேனல் கொண்டுள்ளது.

நோக்கியா 6 (2018) பதிப்பு

நோக்கியா 6 (2018) பதிப்பு

எல்லோரும் எதிர்பார்த்தபடி, நோக்கியா 6 (2018) க்ளோபல் பதிப்பானது - சீனாவில் தொடங்கப்பட்ட மாதிரியே - ஒரு திட இடைநிலை வன்பொருள் அம்சங்களை வழங்குகிறது. இது 5.5 அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே மற்றும் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ கொண்டுள்ள இக்கருவி ஒரு 3000எம்ஏஎச்பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. இது ஒரு 16எம்பி பின்பக்க கேமரா உடன் பல்வேறு ரேம், சேமிப்பு விருப்பங்கள் வருகிறது. இந்த நோக்கியா கருவியில் ஃபேஸ் அன்லாக் அம்சம் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் நிலையான சார்ஜிங் திறனுடன் சேர்த்து வயர்லெஸ் சார்ஜ் அம்சமும் கொண்டுள்ளது. இந்த புதிய நோக்கியா 6 (2018) ஆனது மூன்று வண்ணங்களில் வருகிற ஏப்ரல் 2018முதல் ரூ. 22,200/-க்கு வாங்க கிடைக்கும்.

நோக்கியா 7 பிளஸ்

நோக்கியா 7 பிளஸ்

நோக்கியா 7 பிளஸ் ஆனது நிறுவனத்தின் முதல் 18: 9 டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். இது 6 அங்குல முழு எச்டி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது நோக்கியா 6 (2018) கருவியை போன்ற வடிவமைப்பை கொண்டுள்ளது. இந்த புத்தம் புதிய நோக்கியா 7 பிளஸ் ஆனது, சந்தையில் கிடைக்கக்கூடிய மிகச் சிறந்த சாதனங்களில் ஒன்றாக திகழும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

3800எம்ஏஎச் பேட்டரி

3800எம்ஏஎச் பேட்டரி

அதை உறுதி செய்யும் வண்ணம், இக்கருவி ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் உடனாக அட்ரெனோ 612 ஜிபீயூ மூலம் இயக்கப்படுகிறது. இது ஒரு 3800எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. நிறுவனத்தின் கூற்றின்படி, நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுளானது இரண்டு நாட்கள் நீடிக்கும் மற்றும் இக்கருவி மீண்டும் ஒரு இரட்டை கேமரா அமைப்பை, கைரேகை ஸ்கேனர் உடன் அதன் பின்புறத்தில் கொண்டிருக்கும்.

ப்ரோ கேமரா

ப்ரோ கேமரா

இக்கருவியின் வழியாக எச்எம்டி குளோபல் நிறுவனமானது, அதன் வழக்கமான செய்ஸ் (Zeiss) ஒளியியலுடன் ஆன ஒரு ப்ரோ கேமராவை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த புதிய நோக்கியா கருவியானது இமேஜிங் சூட் அம்சத்துடன் வருகிறது, இது செல்பீக்களில் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு திறனை சேர்க்கும். நோக்கியா 7 பிளஸ் ஆனது வருகிரியா ஏப்ரல் மாதம் முதல், ஒரு உலகளாவிய விற்பனையை தொடங்கும். விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில் சுமார் ரூ.31,000/- என்கிற புள்ளியை எட்டலாம்.

நோக்கியா 8 சிரோக்கோ

நோக்கியா 8 சிரோக்கோ

இது ஒரு ஆச்சரியமான வெளியீடாகும். நோக்கியா 8 Sசிராக்கோ ஆனது நிறுவனத்தின் மற்றொரு முதன்மை ஸ்மார்ட்போன் ஆகும். இது வைர வெட்டுகளுடன் ஒரு எஃகு உடல் அமைப்பை கொண்டு வருகிறது. ஐபி68 நீர் மற்றும் தூசி சான்றிதழ், வயர்லெஸ் சார்ஜ் ஆதரவுடன் வரும் இந்த நோக்கியா 8 சிரோக்கோ ஆனதும் மற்ற கருவிகளை போலவே வருகிரியா ஏப்ரல் 2018 முதல் விற்பனையை தொடங்கும். நோக்கியா 8 சிராக்கோவின் இதர அம்சங்களை பொறுத்தமட்டில், இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். இதன் இரண்டாம் நிலை சென்சார் ஆனது ஒரு டெலிஃபோட்டோ லென்ஸாக பணியாற்றும்.

How to find vehicle owner detail (GIZBOT TAMIL)
ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி

ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி

6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு கொண்டிருந்தாலும் கூட இது ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, நோக்கியா 8 சிரோக்கோவின் உலகளாவிய பதிப்பானது சுமார் ரூ.60,000/- என்கிற புள்ளியை எட்டலாம். இந்த நான்கு கருவிகள் தவிர்த்து நோக்கியா 8110 4ஜி பீச்சர் போனும் அறிமுகமாகியுள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia Started Selling Smartphones and Accessories Through its Online Store in India. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X