நோக்கியா ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு ஓ மேம்படுத்தல் உறுதியானது.!

Written By:

நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஆகிய கருவிகள் உலக சந்தையில் விற்பனைக்கு தாயாராகி வருகின்றன. நோக்கியா 3310 கருவியானது இந்தியாவை அடைந்தாலும், இதர மூன்று ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மீதான பரவலான எதிர்பார்ப்பு அதிகமாகிக்கொண்டே போகின்ற நிலைப்பாட்டில் தற்போது அதை மேலும் அதிகரிக்கும் வண்ணம் எச்எம்டி குளோபல் அதன் மூன்று நோக்கியா ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்டு ஓ மேம்படுத்தல் பெறும் என்று அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் அதன் அடுத்த ஆண்ட்ராய்டு பதிப்பான ஆண்ட்ராய்டு ஓ பதிப்பை செப்டம்பர் மாத வாக்கில் வெளியிட திட்டமிட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நோக்கியா ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு ஓ மேம்படுத்தல் உறுதியானது.!

எச்சஎம்டி க்ளோபல் நிறுவனம் இந்த அறிவிப்பை பொது மேடையில் வெளியிடவில்லை இருப்பினும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அதன் வெளியீட்டிற்குப் பிறகு விரைவில் ஆண்ட்ராய்டு ஓ புதுப்பிப்பைப் பெறுவதாக அறிவித்துள்ளார். சாத்தியமான வருகை தேதி இருப்பினும் உறுதி செய்யப்படவில்லை மற்றும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு ஓ புதுப்பிப்பிற்கு மாற சில மாதங்கள் ஆகலாம். மூன்று நோக்கியா ஸ்மார்ட்போன்களும் தற்போது ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் (அவுட்-ஆப்-பாக்ஸ்) இயங்குகின்றன.

முதலில் நோக்கியா 6, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 3 உட்பட நோக்கியா ஸ்மார்ட்போன்கள் ஜூன் மாதத்தில் இந்திய நாட்டில் வெளியிடப்படும் என்று சில நாட்களுக்கு முன்னர் தகவல் வெளியானது. ஆனால் அதற்கு பின்னர் வெளியான தகவல் இந்த வெளியீடு ஜூன் மாதம் நடுப்பகுதிக்கு தள்ளிப்போகலாம் என்று கூறியது.

மேலும், அனைத்து ஸ்மார்ட்போன்களும் ஒரே நேரத்தில் கிடைக்காது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. நோக்கியா 3 ஸ்மார்ட்போன் முதலில் கிடைக்கும் மற்றும் நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 தொடர்ந்து வெளியாகும் வரும் என்று வெளியான அறிக்கை கூறுகிறது. இதிலிருந்து நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் ஜூன் 15-க்கு வெளியாகலாம். ஆக மொத்தம் ஜூன் முடிவில், மூன்று நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களும் இந்திய சந்தையைத் தாக்கும் என்பது உறுதி.

ரூ.20,000/- என்ற விலை நிர்ணயம் கொண்ட நோக்கியா 6 ஆனது 5.5 அங்குல முழு எச்டி 1080பி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே, 3 ஜிபி / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி சேமிப்பு, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 430 செயலி, 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு, 8எம்பி செல்பீ கேமரா, 16எம்பி ரியர் கேமரா, கைரேகை சென்சார், 4ஜி எல்டிஇ, 3000எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் ஆகிய அம்சங்கள் கொண்டுள்ளது.

ரூ.15,000/- என்ற விலை நிர்ணயம் கொண்ட நோக்கியா 5 ஆனது 5.2 அங்குல எச்டி 720பி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட், ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 430 எஸ்ஓசி, 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பு, 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு, 13எம்பி பின்புற கேமரா, 4ஜி எல்டிஇ, 3000எம்ஏஎச், ஓடிஜி ஆதரவு ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.

ரூ.10,000/- என்ற விலை நிர்ணயம் கொண்ட நோக்கியா 3 ஆனது 5 அங்குல எச்டி 720பி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, க்வாட்கோர் மீடியா டெக் எம்டி6737 செயலி, 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பு, 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு, 8எம்பி ரியர் கிம், 8எமி செல்பீ கேம், ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட், ஓ.டி.ஜி. ஆதரவு, 4ஜி எல்டிஇ, 2650எம்ஏஎச் பேட்டரி ஆகிய அம்சங்கள் கொண்டுள்ளது.English summary
Nokia smartphones will receive Android O update: HMD Global. Read more about this in Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot