விலையை குறைத்து ரூ.3999 விற்கப்படும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்.!
இத்துடன் நோக்கியா 6.1 பிளஸ் 6 ஜி.பி. ரேம் வெர்ஷன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 15 % கேஷ்பேக் பெற முடியும். கேஷ்பேக் சலுகை ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை வழ
இந்தியாவில் ஏராளமான நோக்கியா ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகின்றன. ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கின்றது.

இந்நிலையில், ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 1, நோக்கியா 2.1 மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விலையில் ரூ.1,500 குறைப்பதாக அறிவித்துள்ளது.

அதிர விடும் சலுகை:
இத்துடன் நோக்கியா 6.1 பிளஸ் 6 ஜி.பி. ரேம் வெர்ஷன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 15 % கேஷ்பேக் பெற முடியும். கேஷ்பேக் சலுகை ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

ரூ.3999:
நோக்கியா 1 ஸ்மார்ட்போனின் விலை ரூ.1500 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.3,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போதைய விலை குறைப்பின் மூலம் இந்தியாவின் விலை குறைந்த ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனாக நோக்கியா 1 இருக்கிறது.

போட்டியாக உருவெடுப்பு:
இதுமட்டுமின்றி விலைகுறைப்பு காரணமாக நோக்கியா 1 மாடல் ரெட்மி கோ மற்றும் சாம்சங் கேலக்ஸி ஜெ2 கோர் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைந்திருக்கிறது.

நோக்கியா 2.1:
நோக்கியா 1 மாடலுடன் நோக்கியா 2.1 ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.1500 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.5499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம் வெர்ஷன் ரூ.16,999 விலையில் கிடைக்கிறது.

கேஷ்பேக் சலுகை அறிவிப்பு:
முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,499 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. விலை குறைப்பு மட்டுமின்றி ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications