Home
Mobile

கிராபிக்சில் அசத்தும் புதிய ஸ்மார்ட்போன்: நோக்கியா அறிமுகம்

By Super
கிராபிக்சில் அசத்தும் புதிய ஸ்மார்ட்போன்: நோக்கியா அறிமுகம்
அனைவரையும் அசர வைக்கும் வசதிகளுடன் நோக்கியாவின் புதிய படைப்பு இந்திய சந்தைக்குள் இடம் பிடித்திருக்கிறது. நோக்கியா-701 என்ற ஸ்மாரட்போனை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது நோக்கியா நிறுவனம்.

இது சுப்பீரியர் கிராஃபிக்ஸ் ப்ராசஸர் கொண்டது. லெட்-பேக்லிட் ஐபிஎஸ் டிஎப்டி திரை கொண்டது. இந்த மொபைல் 16 மில்லியன் கலர்களை சப்போர்ட் செய்கிறது. இது 360 X 640 பிக்ஸல் திரை துல்லியத்தைக் கொடுக்கும் டச் ஸ்கிரீன் மொபைலாகும்.

இந்த மொபைல் கண்கவரும் சில்வர், வைலட், ஸ்டீல் டார்க் போன்ற நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கீறல்கள் ஏற்படாமல் இருக்க இதில் கொரில்லா கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது. 701 மொபைலில் 8 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது 3264 X 2448 பிக்ஸல் ரிசல்யூஷனைக் கொடுக்கிறது.

இந்த மொபைல் சிம்பையான் பெல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது. இதில் உள்ள 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர், இந்த சிம்பையான் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்க உதவுகிறது. 701 மொபைல் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொடுக்கிறது. இதில் 0.3 மெகா பிக்ஸல் விஜிஏ கேமராவும் உள்ளது. 512 எம்பி ரேம் வசதியையும் மற்றும் 1ஜிபி ரோம் வசதியையும் கொண்டுள்ளது.

இதில் 32 ஜிபி வரை மெமரி உள்ளதால் தேவையான தகவல்களை பதிவு செய்து கொள்ள முடியும். மல்டி டச் இன்புட், ஆக்ஸிலரோமீட்டர், பிராக்ஸிமிட்டி சென்ஸார், ஆட்டோ ரொட்டேட் போன்ற சவுகரியங்களையும் பெற முடியும்.

ஆர்எஸ்எஸ் ஃபீட்ஸ், எச்டிஎம்எல், டபிள்யூஏபி 2.0/எக்ஸ்எச்டிஎம்எல் போன்ற பிரவுசர் பயன்பாட்டினையும் பெற முடியும். வாய்ஸ் கமேன்டு/டையல், என்எஃப்சி சப்போர்ட், டிஜிட்டல் கம்பாஸ் என்று இந்த 701 ஸ்மார்ட மொபைலில் உள்ள வசதிகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

அதோடு ஜிஎஸ்எம் 2ஜி வசதிக்கும், எச்எஸ்டிபிஏ வசதி 3ஜி நெட்வொர்க் வசதிக்கும் சப்போர்ட் செய்கிறது. எத்தனை தொழில் நுட்பங்கள் இருந்தாலும் பேட்டரி வசதி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் இந்த மொபைலில் 1,300 எம்ஏஎச் எல்ஐ-அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

இது 17 மணி நேரம் 2ஜி வசதிக்கும் மற்றும் 6 மணி நேரம் 45 நிமிடம் 3ஜி வசதிக்கும் டாக் டைம் அளிக்கிறது. 55 மணி நேரம் 3ஜி வசதிக்கும், 504 மணி நேரம் 2ஜி வசதிக்கும் ஸ்மான்-பை டைம் கொடுக்கிறது.

நோக்கியாவின் இந்த 701 மொபைலில் உள்ள அதிக தொழில் நுட்ப வசதியை நிச்சயம் வாடிக்கையாளர்களால் உணர முடியும். இந்த நோக்கியா-701 மொபைலின் விலை ரூ.19,000.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X