Home
Mobile

நோக்கியாவின் 'ஐக்கானிக்' மாடல்களும், அதன் பின்னால் இருக்கும் கதைகளும்.!

வாருங்கள்.. "பார்த்த ஞாபகம் இல்லையோ..?" "ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே.." என்று படிக்க கொண்டே சில ஐக்கானிக் நோக்கியா மாடல்களையும் , அதற்கு பின்னல் இருக்கும் நமக்கு தெரியாத கதைகளையும் காண்போம்.

By Muthuraj

அவ்வளவு எளிதாக "அந்த காலத்து" நோக்கியா கருவிகளை யாரும் மறந்துவிட மாட்டார்கள். ஆனால், சில நோக்கியா பீச்சர் கருவிகளின் ஐக்கானிக் மாடல்களை பார்க்கும்போது, அட இந்த டிசைனிலும், இந்த மாடலிலும் கூட நோக்கியா பீச்சர் கருவிகள் வெளியாகி உள்ளதா..? என்ற ஆச்சரியத்தை நமக்கு ஏற்படுத்துகின்றன.

அப்படியாக "பார்த்த ஞாபகம் இல்லையோ..?" மற்றும் "ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே.." போன்ற சினிமா பாடல்களை நமது நிஜவாழ்க்கையில் சற்றுநேரம் ஓடவிடும் சில ஐக்கானிக் நோக்கியா மாடல்கள் பற்றிய புகைப்படத்தொகுப்பே இது.!

நோக்கியா சிட்டிமேன் (1987)

நோக்கியா சிட்டிமேன் (1987)

எக்காலத்திலும் வெளியிடப்பட்ட கச்சிதமான தொலைபேசிகளில் ஒன்று. அப்போதைய சோவியத் யூனியன் தலைவர் (மிகையில் கோர்பச்சேவ்) ஒரு பத்திரிகையாளர் மாநாட்டின் போது மாஸ்கோவிற்கு அழைக்க இதை பயன்படுத்திய பின்னர் இந்த நோக்கியா சிட்டிமேன் கருவி மிக பிரபலமானது.

நோக்கியா 8110 (1996)

நோக்கியா 8110 (1996)

நோக்கியா 8110 அல்லது `பனானா (வாழைப்பழ) போன்' என்று அழைக்கப்படும் இக்கருவி கியானு ரீவ்ஸ்-ன் மேட்ரிக்ஸ் மூலம் பிரபலமானது. புத்திசாலித்தனமான மற்றும் நகைச்சுவையான வடிவமைப்பு கொண்ட நோக்கியா கருவிகளுக்கான மற்றொரு சான்று தான் இது. புகைப்படம் : விக்கிவாண்ட்

நோக்கியா 5100 (1998)

நோக்கியா 5100 (1998)

2002-ல் அறிவிக்கப்பட்டு, 2003-ஆம் ஆண்டு அறிமுகமான இந்த கருவி 300 மணி நேரம் வரை காத்திருப்பு நேரம் கொண்டதாகும். திரி-பேண்ட், உள்கட்டப்பட்ட ஒரு எஃப்எம் ரேடியோ முக்கியமாக ஸ்நேக்' கேம் கொண்டு வெளியான முதல் நோக்கியா போன் இதுதான். புகைப்படம் : சேல்மை மொபைல்.காம்

நோக்கியா என்-கேஜ் (2002)

நோக்கியா என்-கேஜ் (2002)

இக்கருவி 'டாகோ போன்' என்று செல்லமாக அழைக்கப்பட்டது `ஏனெனில் நீங்கள் அதை பிடித்துக்கொண்டு பேசும் வண்ணம் வடிவமைப்பை அது பெற்றிருந்தது. இந்த கருவி நோக்கியாவின் புத்தி கூர்மை மற்றும் ஆபத்துக்களை எடுக்க விருப்பம் தன்மையை வெளிக்காட்டும் ஒரு கருவியாகும்.இக்கருவி கேம் பிரியர்களை ஈர்க்கும் ஒரு முயற்சியாக ஒரு கேமிங் சாதனமாகவே கட்டப்பட்டது.

நோக்கியா 1100

நோக்கியா 1100

2011-ல் இக்கருவியை 250 மில்லியன் மக்கள் சொந்தமாக வைத்திருந்தன என்று நோக்கியா அறிவித்தது, அந்த அளவிற்கு நோக்கியா 1100 மிகப்பிரபலமானது.

நோக்கியா என்95 (2007)

நோக்கியா என்95 (2007)

என்95 எப்போதுமே ஒரு ஐக்கானிக் ஸ்மார்ட்போன் ஆகும். வெளியிடப்பட்ட காலத்தில் இதுதான் உலகின் மிக சக்திவாய்ந்த ஒரு கருவியாக திகழ்ந்தது மற்றும் ஒரு நம்ப முடியாத காலகட்டத்துலேயே 5எம்பி பின்புற கேமிராவும் கொண்டிருந்தது.

நோக்கியா 5800 (2008)

நோக்கியா 5800 (2008)

நோக்கியா 5800 கருவி தான் முதல் வெளியான முறையான தொடுதிரை நோக்கியா கருவியாகும். இது சிம்பியன் எஸ்60 5வது பதிப்பின் ஒரு டச் வெர்ஷனின் கீழ் இயங்கியது. இக்கருவி கிறிஸ்டோபர் நோலனின் பிரவாளமான் தி டார்க் நைட்-ல் பயன்படுத்தப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 808 ப்யூர்வியூ (2012)

நோக்கியா 808 ப்யூர்வியூ (2012)

நம்பியே ஆக வேண்டும் 808 கருவியில் ஒரு 40எம்பி ப்யூர்வியூ கேமரா இருந்தது. மேலும் இதுதான் நோக்கியாவின் கடைசி சம்பியன் கருவியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் ஆரம்பித்துவைத்த கேமிரா புரட்சி தான் இன்றுவரை நீள்கிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

அறிமுகம் : நோக்கியா 150, நோக்கியா 150 டூயல் சிம் பீச்சர் போன்கள்.!

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia's iconic phones that changed the world. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X